யாழினி முனுசாமி


சண்டையிடப் புதிய களம்
கிடைத்திருக்கிறது அரசிக்கு

தலைவிரி கோலமாய்
தலை சாய்த்துப் பார்க்கும் பெண்கள்

கண்கள் மேய தனத்தின் அடிவாரம் தெரிய
உடுத்தும் பெண்கள்

இறுக்கமாய் அணிந்து
மிடுக்காய்ப் போஸ் கொடுக்கும்
வேற்று நாட்டு இராணிகள் இளவரசிகள்

இப்படி யாரேனும்
ஃபேஸ்புக்கில் நண்பராக இணைய
அரசனுக்கு வேண்டுகோள் விடுக்கையில்…

அறிந்த தோழிதானெனினும்
இரவில் அரட்டையில் வருகையில்…

“உர்”ரென்று ஆகி விடுகிறாள் அரசி.
சமாதானப் படுத்துவதற்குள்
ஃபேஸ்புக்கும் வேண்டாம்
ஒரு எழவும் வேண்டாம்
என்றாகி விடுகிறது அரசனுக்கு

 

படத்திற்கு நன்றி:http://www.techclump.com/facebook-launched-a-new-mobile-website-to-suit-all-phones

4 thoughts on “புதிய களம்

  1. கவிதைகளில் நகைச்சுவை அரிது..இந்தக் கவிதையில் அது அபரிமிதம்.. மிக இனிமை..தொடரட்டும் உங்கள் முயற்சி !

  2. இதை இங்கிலாந்து ராணியம்மாவிடம் காண்பித்தேன். பேரனின் பெண்டாட்டியிடம் காண்பித்து விட்டாள். அவனுடைய ஃபேஸ்புக்கும், டிவிட்டரும் பறிமுதல்!

  3. நெஞ்சார்ந்த நன்றிகள்…
    வல்லமைக்கும் 
    கருத்துகள் பதித்த நண்பர்களுக்கும்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க