இன்னம்பூரான் 

1.26: காமம் செப்பாத மொழியும் இல்லை. வீரம் பேசாத பாஷையும் இல்லை.  

1.27: சன் ட்ஸு போர் புரிவதை, ஒரு உருவகமாக வைத்தும், அவ்வாறு செய்யாமல் நேரிடையாகவும், சொல்வதைப் போலத், தமிழிலக்கியமும் பேசுகிறது. 

1.28: வீரம், போர், தூது, சமுதாயம், வெற்றி, கொடை போன்ற தன்மைகளைத், தமிழ் இலக்கியம் பல திணைகளில் பாகுபடுத்திப் பேசுகிறது. சன் ட்ஸுனின் வாழ்வியல் படிப்பினைகளை ‘நிலையாமை‘ என்ற ஒரே சொல்லில் ஏற்றி விளக்குவது முடிப்புரையான பாடாண் திணை என்ற தத்துவப் போதனை. 

1.29: அறிவில்லையேல் பகுத்து அறிய இயலாது; ஆற்றல் இல்லையெனில், இயக்கத்தில் தயக்கமும், மயக்கமும் மேலிடும்; தன்னலம் அறவே ஒழித்திடல் வேண்டும்; இல்லையெனில் பொது நலம் ஒழிந்திடும். 

1.30: அதா அன்று. தானமிடும் ஈகைப்பண்பும், அருளும் இயல்பும் இருந்தால் தான், அரசின் வரப்புயரும். ஒரு அகச்சான்றை பிறகு பார்க்கலாம். 

பி.கு: நமக்கு முற்றும் தெரிந்த தொல்காப்பியமும், சங்கத்தமிழும், காப்பியங்களும் பற்றி இங்கு என்ன பேச்சு என்று பெரும்பாலோர் கருதினால், சஞ்சாரத்தை மாற்றியமைக்கலாம்.

 

படத்திற்கு நன்றி: http://thethreekingdoms.wikia.com/wiki/Sun_Tzu

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *