விடை பெறும் உயிர்ப் பறவை
ஐயப்பன் கிருஷ்ணன்
உன் சிறகின் ஓர் இழை பற்றி
உன்னோடு பறந்திடவே
துடிக்கிறது என் உள்ளம்
உன்னைத் தீண்டவென்று
ஆவலுடன் எழுமென் கைகளுக்குத்
தூது வரும் நாளொன்றில்
கரம் பற்றென்கிறது மனம்.
மனமது தினம் தினம்
உன் வருகை எதிர் பார்த்து
உயிர்ப் பறவையின் சிறகசைப்பை
நீ கொண்டு செல்லும்
நாளுக்காய்
வாடி நிற்கிறது உயிர்.
படத்திற்கு நன்றி: http://www.picturesdepot.com/wallpapers/12595/love.html