ஐயப்பன் கிருஷ்ணன்

சண்டையின் போதெழுந்த 
சுருக்கென்ற கோபத்தில்
வெளியேறிச் சென்று 
தனெக்கெனத் துணையாய் 
என்றோ ஒப்புமையிட்ட
பழைய நிலவொன்றைக்
கையில் வைத்திருந்தாள்

பக்கத்திலேயே 
சில மான்களும், மீன்களும்
பறவைகளுமென.

கடந்து வந்த காலங்களில்
அவை மட்டும் அப்படியே
மாறாமல் இருக்கிறது
அவளின் நினைவேட்டில்.

படத்திற்கு நன்றி: http://nature.desktopnexus.com/wallpaper/576630

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க