இந்த நறுக்கும்.. !!!
நறுக்.. துணுக்….. (14)
இன்னம்பூரான்
மதுரை மாவட்டத்தின் ஊமச்சிக்குளம் போலீஸ், கணவனை அடித்துக் கொன்ற மனைவியை, இ.பி.கோ. 100 என்ற ஷரத்தின் கீழ் , தற்காப்பு – கொலை என்று சொல்லி, விடுவித்தனர். குடும்பத்தினரை தொந்திரவு செய்பவன் என்று போலீஸ் ஆவணங்கள் கூறும் ஜ்யோதி பாசுவுக்கும், அவன் மனைவி உஷா ராணிக்கும் 1995 லிருந்து பிரச்சனைகள் – கிட்டத்தட்ட 20 வருடங்கள். 10.02.2012 அன்று அவன் வீட்டில் புகுந்து, மனைவியை அடித்தான். தன்னுடைய பெண்ணையே கற்பழிக்க முயன்றான். மனைவி அவனை கிரிக்கெட் மட்டையால் அடித்துக் கொன்றாள். கிரிக்கெட் மட்டை வாழ்க. சட்டரீதியான விவாகரத்து கிடைத்திருந்தால், அந்த குடிகாரன் பிழைத்துப் போயிருப்பான். உஷா ராணியின் வாழ்க்கை பாழுங்கிணற்றில் விழுந்திருக்காது. இருபது வருடங்களாக, அவள் வாழ்க்கையை குலைத்தது, நமது ஆஷாடபூதி ‘சமுதாய பண்பு’. இது திரு. சீராசை சேதுபாலாவின் கவனத்திற்க்கு.