காயத்ரி பாலசுப்ரமணியன்

மேஷம்: குரு உங்கள் ராசியில் உள்ளார். சுய தொழில் புரிபவர்கள் கடனுக்குரிய தொகையைக் குறித்த கெடுவிற்குள் செலுத்துதல் நல்லது. 2-ல் கேது. 8-ல் ராகு. பொறுப்புக்களை வகிப்பவர்கள் சட்டம் தொடர்பான பிரச்னைகளில் தகுந்த ஆலோசனையுடன் செயல்பட்டால், மன உளைச்சல் இராது. 5-ல் செவ்வாய். மாணவர்கள் நண்பர்களுடன் பொருட்களைப் பரிமாறிக் கொள்வதில் கவனமாக இருந்தால், வீண் தொல்லைகள் வராமலிருக்கும். 7-ல் சனி. பண விவகாரங்களில் வாக்கைக் காப்பாற்றாமல் இழுத்தடிப்பவர்களின் சகவாசத்தை ஒதுக்குதல் மூலம் வியாபாரிகள் நஷ்டத்தைக் குறைத்துக் கொள்ள முடியும் 11-ல் சூரியன். புதன். பொது வாழ்வில் உள்ளவர்களின் பேச்சில் உள்ள மிடுக்கு நல்ல மதிப்பையும், புகழையும் சம்பாதித்துத் தரும். பணியில் இருப்பவர்களின் முன்னேற்றத்திற்கு இருந்த முட்டுக் கட்டைகள், இந்த வாரம் தானே விலகும். 12-ல் இருக்கும் சுக்ரன். கலைஞர்களின் மனதில் புதுமையான எண்ணங்களைத் தூவி வாழ்க்கையை வளமாக்குவார்.

இ(ந)ல்லறம்: பெண்கள் அலுவலகத்தில், தேவையில்லாமல் பணம் கைமாற்றாய் வாங்குவதையும், கொடுப்பதையும் தவிர்த்து விட்டால், மனத் தாங்கல் தோன்றாது. தேர்வுகள் தரும் மன உளைச்சலால், பிள்ளைகளின் ஆரோக்கியம் பாழாகாமலிருக்க, பெற்றோர்கள், சத்தான உணவு வகைகளை அளித்து வரவும்.

ரிஷபம்: 6-ல் சனி உலா வருவதால், பணியில் இருப்பவர்கள், எதிர் கொண்ட சிக்கல்கள் யாவும் தன்னால் விடுபடும். 10-ல் சூரியன், புதன். மாணவர்களின் தேடலுக்கேற்பத் திறமை மேலும் மெருகு பெறும். 11-ல் சுக்ரன். கலைஞர்கள் மனதில் இருந்த குழப்பம் விலகி, தைரியமாய் செயலாற்றும் திறன் பெருகும். 1-ல் கேது. வியாபாரிகள் பங்குதாரர்களிடையே கருத்து மோதல் நிகழாதவாறு சாமர்த்தியமாய்ச் செயலாற்றுதல் நல்லது. 4-ல் செவ்வாய். பொது வாழ்வில் இருப்பவர்கள், எந்தச் சூழலிலும் கோபத்திற்கு இடம் கொடுக்காமலிருந்தால், வீண் பிரச்னைகள் எட்டிப் பார்க்காமலிருக்கும். 7-ல் ராகு. வீடுகளை வாங்கி விற்பவர்கள், பேச்சில் நிதானமும், சமயோசிதமும் இருந்தால், எதனையும் சாதிக்க முடியும் என்பதை உணர்ந்து செயல்படுவது நல்லது. 12-ல் குரு. சுய தொழில் புரிபவர்கள், முக்கியமான விஷயங்களில் உங்கள் நேரடி கவனம் இருக்குமாறு பார்த்துக் கொள்ளுங்கள். பிரச்னைகளை முளையிலேயே கிள்ளி விடலாம்.

இ(ந)ல்லறம்: கர்ப்பிணிப் பெண்கள், ஆரோக்கியம் நலம் பெற, எளிய யோகாசனப் பயிற்சிகளைச் செய்து வருதல் முக்கியம். வெளியூரில் இருக்கும் பிள்ளைகளின் நடவடிக்கையை அவ்வப்போது கவனித்து வந்தால், அவர்களின் வாழ்க்கை சீராக ஓடிக் கொண்டிருக்கும்.

மிதுனம்: வியாபாரிகளுக்கு எந்தக் குறையும் இன்றி பணிகள் முடிய 3-ல் இருக்கும் செவ்வாய் துணை புரிவார். 6-ல் ராகு. பணிக்குரிய பாராட்டு வேலையில் இருப்பவர்களின் புது முயற்சிக்கு நெம்பு கோலாய் அமையும். 11-ல் குரு. சுய தொழில் புரிபவர்களுக்கு, இழுபறியாய் இருந்த பண விவகாரங்களில், முனேற்றம் இருக்கும். 5-ல் சனி. ரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் உள்ளவர்கள் முறையான சிகிச்சை எடுத்துக் கொள்வது அவசியம். 9-ல் சூரியன், புதன். அரசு வழிக் காரியங்களில் சுணக்கமின்றித் தீவிர முயற்சி செய்தால் சுய தொழில் புரிபவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். மாணவர்கள் தேர்வு சமயங்களில் ஏனோதானோவென்று செயல்படாமல், திட்டமிட்டு வேலை செய்தால், நல்ல மதிப்பெண்களைப் பெறலாம். 10-ல் சுக்ரன். கலைப் பொருட்களை வாங்கி விற்பவர்களின் கணக்கு வழக்குகளில் சில சிக்கல்கள் தோன்றி மறையும். 12-ல் கேது. பொது வாழ்வில்  இருப்பவர்கள், மேடைப் பேச்சுக்களில், கவனமாக இருப்பது அவசியம்.

இ(ந)ல்லறம்: பெண்கள் காட்டும் ஆதரவால், பிள்ளைகள் போட்டிகள் பலவற்றில் கலந்து கொண்டு பரிசுகளை அள்ளிக் குவிப்பார்கள். வீட்டு விவகாரங்களில் தேவையற்ற நபர்களின் தலையீட்டைத் தவிர்ப்பது புத்திசாலித்தனம். அத்துடன் சிறிய  பிரச்னைகளை வளர விடாமல் பார்த்துக் கொள்ளவும்.  

கடகம்: 11ல் கேது. குடும்ப ஒற்றுமை பொது வாழ்வில் இருப்பவர்களின் ஆக்கப் பூர்வமான பணிக்கு அடித்தளமாக அமையும். 9-ல் சுக்ரன். இந்த வாரம் கலைஞர்கள் தங்கள் புதிய முயற்சிகளுக்குக் கிடைக்கும் பாராட்டுக்களால் புதிய உற்சாகத்துடன் விளங்குவார்கள். 8-ல் புதன், சூரியன். மாணவர்கள் விளையாட்டாய்ச் சொல்லும் வார்த்தையால் பிறர் மனம் புண்பட வாய்ப்பிருப்பதால், சொற்சிக்கனத்தை மேற்கொள்ளவும். 2-ல் செவ்வாய். வியாபாரிகள் நிற்பதற்கு நேரமின்றி உழைக்க வேண்டியிருக்கும். 4-ல் சனி. வீடு கட்டுபவர்கள் கட்டுமானப் பொருள்களைப் பாதுகாப்பாக வைத்தால், உங்கள் பணம் பாழாகாது. 5-ல் ராகு. பணியில் இருப்பவர்கள் பொருளாதார ஏற்ற இறக்கங்களுக்கேற்பத் தங்கள் வரவு செலவுகள் இருக்குமாறு பார்த்துக் கொண்டால், கடன் தொல்லைகள் இராது.     10-ல் குரு. பொறுப்பில் இருப்பவர்கள், சந்தேகத்துக்கு இடமளிக்காத வகையில் தங்கள் செயல்பாட்டைச் செம்மையாக்கிக் கொள்வது நல்லது.

இ(ந)ல்லறம்: கர்ப்பிணிப் பெண்கள் ஒவ்வாத உணவு வகைகளை இனங்கண்டு தவிர்த்து விட்டால், மருத்துவச் செலவுகள் ஓரளவு குறைந்து விடும். அத்துடன் பிள்ளைகளுக்கு, தனக்கு எல்லாம் தெரியும் என்கிற மனப்பான்மை அவர்களின் முன்னேற்றத்திற்குத் தடையாகாமல் பார்த்துக் கொள்வது அவசியம்.

சிம்மம்:3-ல் இருக்கும் சனி. மாணவர்களின் வாழ்வில், இனிமையான பயண அனுபவங்களை மலரச் செய்வார். 9-ல் குரு. பணியில் இருப்பவர்களுக்கு, வேலையில் இருந்த சுணக்கம், மன அழுத்தம் ஆகியவை நீங்கி இணக்கமான சூழல் உண்டாகும் 7-ல் சூரியன், புதன். வீண் பகை வாராதிருக்கப் பொது வாழ்வில் இருப்பவர்கள் கோபத்தைக் கட்டுக்குள் வைத்து உரையாடுவது நல்லது. 8-ல் சுக்ரன். கலைஞர்கள் ஈடுபடும் எந்தப் பணியாய் இருந்தாலும் சரி. அதில் தனக்கென்று ஓர் இடத்தைத் தக்க வைத்துக் கொள்வர். 1-ல் செவ்வாய். பொறுப்பில் இருப்பவர்கள், பிறரிடம், குதர்க்கமான பேச்சைத் தவிர்த்தால், மனக் கசப்பு ஏற்படாது. 4-ல் ராகு. வீடுகளை வாங்கி விற்பவர்களுக்கு, இந்த வாரம், திட்டமிட்டபடி வேலைகள் நடக்காமல் சற்றே இழுத்தடிக்கலாம். 10-ல் கேது. சுய தொழில் புரிபவர்கள், மனக் குழப்பம் தங்களின் திறமையைப் பாதிக்காதவாறு திடமாகச் செயல்படுதல் அவசியம்.

இ(ந)ல்லறம்: இளம் பெண்கள் நட்பு விஷயத்தில் எச்சரிக்கையாய் இருந்தால், மனக் கவலைக்கு ஆளாக வேண்டாம். பணியில் இருக்கும் பெண்கள், கிடைக்கக் கூடிய சின்னச் சலுகைகளை முறையாகப் பயன்படுத்தி வர, எப்போதும் உங்கள் செல்வாக்கு நிலைத்திருக்கும்.

கன்னி: 6-ல் புதன், சூரியன். கேட்ட இடத்திலிருந்து கேட்ட உதவி தடையின்றிக் கிடைப்பதால், வியாபாரிகளின் புதிய முயற்சிகள் புதுமையாகவும், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் விதமாகவும் அமையும். 3-ல் ராகு. வேலையில் இருப்பவர்கள் அதிகாரிகளின் முழு நம்பிக்கைக்குப் பாத்திரமாவார்கள். 2-ல் சனி. சிறு தொழில் புரிபவர்கள், பங்குச் சந்தையில் அதிகப் பணம் முடக்காமலிருப்பதே புத்திசாலித் தனம். 7-ல் சுக்ரன். கலைஞர்கள், சொற்சிக்கனத்தை உறுதியாய்க் கடைப் பிடித்தால், வெளி வட்டாரம் சாதகமாக இருக்கும். 8-ல் குரு. சுய தொழில் புரிபவர்களுக்கு, வியாபார பாக்கிகளை வசூலிப்பதில் தாமதம் ஏற்பட வாய்ப்புண்டு. 9-ல் கேது. மாணவர்கள், பொறாமைக் குணம் கொண்டவர்களிடம் அதிக நெருக்கம் வேண்டாம். 12-ல் செவ்வாய். பொது வாழ்வில் இருப்பவர்கள் யாரையும் வீணாகப் பகைக்காமலிருந்தால், வெற்றி உங்களுக்குக்குதான்!

இ(ந)ல்லறம்: பெண்கள், அனைவரிடமும் அனுசரித்துச் செல்லுங்கள். வீட்டில் வீண் விவாதங்கள் தோன்றாது. பெண்களுக்கு ஓய்வின்றிப் பணியில் ஈடுபடும் சூழலிருப்பதால், ஆரோக்கியத்தில் கவனமாய் இருக்கவும். சின்ன விஷயங்களுக்காகப், பிள்ளைகளிடம் எரிந்து விழ வேண்டாம்.

துலாம்: 7-ல் குரு. இந்த வாரம், மாணவர்களின் உண்மையான திறமைக்கும், நேர்மைக்கும் உரிய அங்கீகாரம் கிடைக்கும். 11-ல் செவ்வாய். பணியில் இருப்பவர்கள் விரும்பிய இட மாற்றம் கிடைப்பதோடு சொந்த பந்தங்களால் மதிக்கப்படும் சிறப்பான சூழலும் உண்டாகும். 1-ல் சனி. வியாபாரிகள் கூட்டாளிகளுடன் பிணக்கு ஏற்படாதவாறு பார்த்துக் கொண்டால், மனக்கஷ்டம் தோன்றாது. 2-ல் ராகு. கலைஞர்கள் ஒவ்வாத பழக்க வழக்கங்களுக்குத் தலையாட்டாமலிருந்தால், வாழ்க்கையில் கலக்கம் இராது. 5-ல் சூரியன். புதன். சுய தொழில் புரிபவர்கள் தேவைக்கேற்ற பணத்தைவிட அதிகம் செலவு செய்வதைக் குறைத்துக் கொண்டால், பொருளாதாரம் சிக்கலாகாமல் இருக்கும். 6-ல் சுக்ரன். கலைஞர்கள் பகல் கனவை நம்புவதை விட, தங்கள் உழைப்பை நம்புவது நல்லது. 8-ல் கேது.   தங்கள் பேச்சில் உள்ள முதிர்ச்சி செயலிலும் இருக்கும் வண்ணம் நடந்து கொண்டால், ஆதரவாளர்களின் எண்ணிக்கை குறையாமல் இருக்கும்.

இ(ந)ல்லறம்: படபடப்பு, முன்கோபம் இரண்டிற்கும் இடம் தராமல் பெண்களின், உரையாடல் இருந்தால், அவர்கள் கருத்தைப் பிறர் எளிதில் ஆமோதிப்பர். பெண்கள் அக்கம்பக்கம் உள்ளவர்களால் மனச் சங்கடம் பட நேரிடும் வாய்ப்பிருப்பதால், விருந்து உபசாரம் என்று வெளியில் செல்வதைக் குறைத்துக் கொள்ளவும்.

விருச்சிகம்: 5-ல் சுக்ரன். ஆசிரியர்களின் ஆதரவான மொழி மாணவர்களின் மனதை உற்சாகப் படுத்தும் விதமாக அமையும். 4-ல் சூரியன், புதன் பணியிடங்களில் மனதில் பட்டதைச் சொல்லுவதை விட, மற்றவர்க்குத் தேவையான செய்திகளை மட்டும் பரிமாறிக் கொள்வது நல்லது. 1-ல் ராகு. பொறுப்பில் இருப்பவர்கள், பிறரிடமிருந்து, கடனாகப் பெற்ற பொருள்களைக் கருத்தாக வைத்துக் கொள்ளுதல் அவசியம், 6-ல் குரு. கலைஞர்கள் பொது இடங்களில் சமயோசித புத்தியுடன் செயல்படுவது அவசியம். 7-ல் கேது. சில காரியங்கள், வியாபாரிகள் நினைத்தபடி நடப்பது சற்றே தள்ளிப் போகும். 10-ல் செவ்வாய். சுய தொழில் புரிபவர்கள், வேளை தவறிய உணவு, வீண் அலைச்சல், ஆகியவற்றைத் தவிர்த்தால், ஆரோக்கியம், உயர்வுக்கு கை கொடுக்கும். 12-ல் சனி. புதிதாக வேலைக்குச் சேர்ந்திருப்பவர்கள், செய்ய மறந்த வேலைகளுக்காக அபராதம் கட்ட நேரிடலாம். எனவே விழிப்புடன் இருப்பது நல்லது.

இ(ந)ல்லறம்: பெண்கள் அலுவலகத்தில் அரட்டை அடித்தல், அங்கும் இங்கும் அலைதல், போன்றவைகளில் ஈடுபடாமலிருப்பது நல்லது. அத்துடன், கொடுக்கல், வாங்கல், காசோலை வழங்குதல், ஆகியவற்றில் முறையாகச் செயல்பட்டு உங்கள் கௌரவம் நிலைக்குமாறு செய்து கொள்ளுங்கள். 

தனுசு: 5-ல் குரு. வியாபாரிகள், பல நட்களாக மேற் கொண்ட முயற்சி ஒன்றிற்கு நல்ல பலன் கிடைக்கும். 6-ல் கேது. ஆசிரியப் பணியில் இருப்பவர்கள் பாராட்டுக்களைப் பெற்று மகிழ்வர். 11- ல் சனி. பொது வாழ்வில் இருப்பவர்களின் நடை உடை பாவனைகளில் நளினமும் அழகும் மிளிரும். 3-ல் சூரியன். தொழிலாளர்களின் ஆதரவும், அனுசரணையும் சுய தொழில் புரிபவர்களுக்குப் பக்க பலமாக இருக்கும். 3ல்-புதன். பிறர் உங்களைத் தூண்டி விட்டாலும், மாணவர்கள், நேர்மையான வழியிலேயே சென்றால், உங்கள் நற்பெயர் என்றும் நிலைத்திருக்கும். 9-ல் செவ்வாய். பொறுப்பில் இருப்பவர்கள், நாடி வருபவர்களின் குணமறிந்து, சிபாரிசுக் கடிதங்களை கொடுப்பது நல்லது. 12-ல் ராகு. பணியில் இருப்பவர்கள், சூழ்நிலைக்குத் தகுந்தவாறு செயல்படுவதுடன், வீண் வாக்குறுதிகளையும் அள்ளி வீசாமலிருப்பது அவசியம். கலைஞர்கள் பொது விழாக்கள் ஆகியவற்றில், அளவாகப் பேசுவது நல்லது.           

இ(ந)ல்லறம்: பெண்கள் தங்களின் குடும்ப கஷ்டங்களுக்கான தீர்வுகளை, தாங்களே கண்டறிந்து செயல்பட்டால், உங்களின் குடும்ப ரகசியங்கள் வெளியே கசியாது. கர்ப்பிணிப் பெண்கள், ஆரோக்கிய நலிவுக்குரிய மருந்துகளை உடனுக்குடன் உட்கொண்டால், மருத்துவச் செலவுகள் கட்டுக்குள் இருக்கும். 

மகரம்: 11-ல் ராகு. பொது வாழ்வில் இருப்பவர்கள், விரும்பிய காரியங்கள் கை கூடுவதற்கான அறிகுறிகள் தெரியும். 3-ல் சுக்ரன். கலைஞர்களின் திறமையை அதிகரிக்கும் நிகழ்ச்சிக்கான அழைப்புகள் வரும். 2-ல் சூரியன், புதன்.  மாணவர்கள், பாடங்களில் தோன்றும் சந்தேகங்களை உடனுக்குடன் நிவர்த்தி செய்தால், கடினமான பாடங்களையும், எளிமையாகப் பயில முடியும். 4-ல் குரு. வியாபாரிகள், சரக்கு போக்குவரத்தில், தேக்கம் ஏற்படாதவாறு திட்டமிட்டுச் செயல்படுங்கள். 5-ல் கேது. பொது வாழ்வில் இருப்பவர்கள் பேச்சிலும், செயலிலும் இணக்கம் காட்டினால், பிறர் மூலம் நல்ல பயனடைய முடியும். 8-ல் செவ்வாய். பொறுப்பில் இருப்பவர்கள், வேலைகளை முடிக்க, முறையற்ற வழிகளை நாடாமலிருப்பது நல்லது. 10-ல் சனி. பணியில் இருப்பவர்கள், உங்களுக்கு உரிய எல்லையைத் தாண்டாமலிருங்கள். பிரச்னைகள் உங்களை அண்டாது.

இ(ந)ல்லறம்: பொருளாதார வளத்தால், பெண்களுக்கு, விரும்பிய பொருட்களை வாங்கி மகிழும் வாய்ப்பு கிட்டும். ஆனால் மனை வாங்குதல், வாகனம் வாங்குதல், ஆகியவற்றில், நம்பிக்கையான நபர்களை அணுகவும். பிள்ளைகளுக்கு, அதிகச் செல்லம் கொடுப்பதைத் தவிர்க்கவும். 

கும்பம்: 2-ல் உள்ள சுக்ரன், கலைஞர்களின் நூதன , கலைப் பொருட்களை தேடும் ஆவலைப் பூர்த்தி செய்து வைப்பார்.  1-ல் புதன், சூரியன். மாணவர்கள், தேவையில்லாமல், பிறரைப் பற்றி விஷயங்களில், மூக்கை நீட்டாமலிருந்தால், அமைதியாய் வேலைகள் நடைபெறும். 3-ல் குரு. வேண்டாத தொல்லைகள், அண்டாதிருக்க, பொது வாழ்வில் இருப்பவர்கள், அமைதியான போக்கைக் கடைபிடிக்கவும். 4-ல் கேது., இந்த வாரம், சோர்வும், தடுமாற்றமும் பணியில் இருப்பவர்களின் வேகத்தை குறைக்கலாம். 7-ல் செவ்வாய். வியாபாரிகள் சரக்குகளின் தேக்கம் தவிர்க்க, தேவைக்கேற்றவற்றைத் தருவித்துக் கொள்ளுங்கள். 9-ல் சனி. சுய தொழில் புரிபவர்கள், பேச்சில் பதற்றம் தவிர்த்துப் பொறுமையைக் கடைப்பிடித்துப், புதிய வாய்ப்புகளைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். 10-ல் ராகு. பணியில் இருப்பவர்கள், புது பொறுப்புகளைத் தக்க ஆலோசனை பேரில் ஏற்றுக் கொள்வது நலம்.

இ(ந)ல்லறம் பெண்கள் எதிர்பார்த்தபடி எல்லா விஷயமும் நடைபெறும். குழந்தைகளால் சந்தோஷமும் பெருமையும் உண்டு. பிள்ளைகள்  படிப்பிற்கெனப் புதிய முயற்சிகளில் முழு வீச்சுடன் இறங்குவதற்கு, இந்த வாரம் நல்ல பலன் கிடைக்கும். வேலை தேடுபவர்களுக்கு வெற்றிச் செய்தி கிட்டும். 

மீனம்: 1-ல் சுக்ரன். கலைஞர்களுக்குப் புதிய இடங்களுக்குச் செல்லும் வாய்ப்பு கிடைப்பதோடு, புதிய நண்பர்களையும் சந்திக்கும் வாய்ப்பு கிட்டும். 2-ல் குரு, வாடகை வீட்டில் குடியிருந்தவர்கள், சொந்த இல்லத்திற்குச் செல்லும் பாக்கியம் கிடைக்கும். 3-ல் கேது. இந்த ராசிக்காரர்களுக்குக் கடன் தொல்லைகள் விலகுவதுடன், நூதனத் துறைகளில், உங்களின் ஆர்வத்துக்குரிய மதிப்பு கிடைக்கும். 6-ல் செவ்வாய். பணியில் இருப்பவர்களுக்கு,  அலுவலகத் தேர்வுகளின் மூலம் உங்களின் தரமும், தகுதியும் உயரும். 8-ல் சனி. பொறுப்பில் இருப்பவர்கள்,  முக்கியமான பணிகளில் முழு கவனத்துடன் இருப்பது நல்லது. 9-ல் ராகு. மாணவர்கள், வாகனங்களில் செல்லும் போது போட்டா போட்டியைத் தவிர்த்து விடவும். 12-ல் சூரியன். புதன். ஆய்வுப்பணியில் உள்ளவர்கள், என்னதான் சுறுசுறு ப்புடன் செயலாற்றினாலும், காரியங்கள் மந்த கதியிலேயே செல்லும் ,பொது வாழ்வில் இருப்பவர்கள், எந்த சூழலிலும், கண்ணியமாக நடந்து கொள்வதை கடைப்பிடிப்பது   அவசியம்

 

 இ(ந)ல்லறம்: பெண்கள், வெளியிடங்களுக்கு,செல்கையில்,  கவனமாக இருந்தால், பொருள்கள் தவறிப்போவதைத் தவிர்க்க முடியும். வருத்தப்பட உறவுகள், வரிந்து கட்டிக் கொண்டு உதவி செய்வதால், இல்லத்தில், மீண்டும், பழைய கலகலப்பும், மகிழ்ச்சியும் நிலவும்  

  .

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *