கவிநயா

 

கண்ணூறச் செய்யும் பாசம் போல

கவியூறச் செய்கின்றது,

உன் நேசம்.

 

என் இதய வானத்தை

நிரந்தர பௌர்ணமியாக்குகிறது,

உன் மதி வதனம்.

 

என் எண்ணக் கூரையில்

இடைவெளியில்லாமல் வேயப் பட்டிருக்கின்றன,

உன் நினைவு நட்சத்திரங்கள்.

 

உன் அருட்பார்வைப் பொழிவிற்கென

ஆவலாய்க் காத்திருக்கிறது,

இந்தப் பாவை வனம்.

 

படத்திற்கு நன்றி: http://www.innocentenglish.com/funny-amazing-pictures-videos/optical-illusions-3d/optical-illusion-pictures.html

 

6 thoughts on “பாவை வனம்

  1. பாலை வனம் அறிவோம்.. அடடா பாவை வனம் பற்றி அழகாக பா வடித்து அசத்தி உள்ளீர்கள் வாழ்த்துக்கள்

  2. “என் எண்ணக் கூரையில்

    இடைவெளியில்லாமல் வேயப் பட்டிருக்கின்றன,

    உன் நினைவு நட்சத்திரங்கள்” – அழகாக வேயப்பட்ட கவிதைக் கீற்றுகள். வாழ்த்துக்கள்.

  3. மனதிலிருந்து மறையாத மதிவதனம், மனவானில் நித்தமும் பௌர்ணமியாக பிரகாசிக்கிறதா!!!. அழகான வரிகள். கவிதையைப் படிக்கும் போதே, ஒவ்வொரு வரியும், காட்சியாகக் கண்முன் விரிகிறது. மிக்க நன்றி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க