ஒரு கல் ஒரு கண்ணாடி – திரை விமர்சனம்

 

 

சூர்யா

முந்தைய படங்களான சிவா மனசுல சக்தி, பாஸ் என்கிற பாஸ்கரன் போலவே லைட்டர் சப்ஜெக்ட் படமாக ஒரு பீல் குட் மூவியை தர முயன்றிருக்கிறார் இயக்குநர் ராஜேஷ். ஆனால் படத்தில் ஹீரோ உதயநிதி சொல்வதை போலவே “ஏதோ ஒண்ணு குறையுது” அதை கடைசியில் சொல்றேன்.

ஹீரோயினை துரத்தி துரத்தி காதலிக்கும் வேலை வெட்டி இல்லாத ஹீரோ, அவருக்கு எப்போதுமே உதவ காத்திருக்கும் நண்பன் என்று காமெடியை மட்டும் நம்பி செலவை பற்றி கவலைப்படாத தயாரிப்பாளர் & ஹீரோ உதயநிதியோடு உலா வந்திருக்கிறார்கள் மூவரும். கதை இல்லாவிட்டாலும் கன்பார்மாக கல்லா கட்டும்.

ஹீரோவாக அறிமுகமாகியிருக்கும் உதயந்தி ஸ்டாலின். முடிந்தவரை நடிக்க முயற்சி பண்ணி ஒரளவும் நடித்திருக்கிறார். அரசியலுக்கு அச்சாரமாகவும் இருக்கலாம். ஆச்சரியம் இல்லை. ஆனால் இயக்குநர் உஷாராக நிறைய குளோசப் காட்சிகளை தவிர்த்து விட்டு உதயநிதிக்கு உதவியிருக்கிறார் என்றே சொல்ல வேண்டும்.

ஹீரோயின் ஹன்ஸிகா கிட்டதட்ட ஜீனியர் குஷ்பு. ஆனால் நடிப்பு சுத்தமாக வரவில்லை. இயக்குநரும் அது பற்றி கவலை பட்டதாகவும் தெரியவில்லை. ஹீரோயின் அப்பா சாயாஜி ஷிண்டே நல்ல நடிகர். பாவம் அவரையும் காமெடி பீஸாக்கி விட்டார் ராஜேஷ்.

உதய்யின் அம்மாவாக வரும் சரண்யா, மிகச்சிறந்த நடிகை. சில காட்சிகளில் வந்தாலும் அருமையான நடிப்பு. அப்பாவாக வரும் அழகம் பெருமாள் தமக்கு கொடுத்த வேலையை கச்சிதமாக செய்திருக்கிறார்.

ஆந்திரா ஸ்டைல் ஹீரோ கெட்டப் உடைகளில் படம் முழுக்க வலம் வந்து பல மாடுலேஷன்களில் பேசி சந்தானம் பட்டையை கிளப்புகிறார். நிறைய சிரிப்பு (சர) வெடிகள். இனி இவரது சம்பளம் பல மடங்கு உயரலாம். தயாரிப்பாளர்கள் உஷார்.

முன்பு இசையமைத்த பாடல்களின் மெட்டுகளையே உல்டா செய்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹாரீஸ்ஜெயராஜ். ஆனாலும் நா.முத்துகுமாரின் வரிகளால் நிச்சயம் ஹிட்டாகும். பாடல்கள் படம் பிடித்த விதங்கள் அருமை. ஒளிப்பதிவாளர் சுப்ரமணியத்திற்கு பாராட்டுகள்.

படம் பார்த்து முடிந்தவுடன் ”பாட்டி வடை சுட்ட கதை”யின் மேல் மதிப்பு பன் மடங்கு உயர்ந்து விட்டது. நன்றி ராஜேஷ் சார்.

OK OK.. ஒரளவுக்கு ஒகே..

 

2 thoughts on “ஒரு கல் ஒரு கண்ணாடி – திரை விமர்சனம்

  1. சூர்யா எப்படி இருக்கீங்க. ரொம்ப நாள் கழித்து உங்கள் எழுத்தை பார்ப்பதில் மகிழ்ச்சி 

  2. நல்லாயிருக்கேன் மோகன். விரைவில் உலக சினிமா பதிவுகள் தொடரும். நன்றி.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க