சட்ட ஆலோசனை – கேள்வி- பதில்

 

 

கேள்வி: சரண்

எனது தாத்தாவின் விவசாய நிலத்திற்கான கிரய ஆவணம் 1981ம் ஆண்டில் பதிவுபெற்ற ஆவணமாக உள்ளது. அவர் கடந்த 1987ல் காலமாகிவிட்டார்.அவருக்கு எனது தாயார் மட்டுமே ஒரே வாரிசு. இந்நிலையில் 1985ம் ஆண்டு UDR என்னும் நில உடமை பதிவு மேம்பாட்டு திட்டம் செயல்பாட்டில் எனது தாத்தாவின் பெயரில் பட்டா வழங்காமல் அதே ஊரைச் சேர்ந்த வேறு ஒரு நபருக்கு UDR பட்டா கொடுக்கப்பட்டுள்ளது. அவர் அதை வைத்து பட்டா பாஸ்புத்தகம், சிட்டா, அடங்கல் போன்ற வருவாய் ஆவணங்களை ஏற்படுத்திக்கொண்டு, அவருக்கு இந்த பட்டா மூலம் அனுபவப்பாத்தியமும், உடைமை உரிமை மூலமும் கிடைக்கப்பெற்றுள்ளதாக நீதிமன்றத்தில் தவறான முறையில் அளித்து முறைகேடுகள் செய்து PERMANENT INJUNCTION ORDER ஐ பெற்றிருக்கிறார்.
நீதிமன்றம் கூட எங்கள் தாத்தாவின் கிரயப் பத்திரத்தை ஒரு பொருட்டாக எண்ணாமல் வருவாய் அலுவலர்கள் மூலம் அவர் பெற்றுள்ள ஆவணங்களை அங்கீகரித்து அவரின் அனுபவபாத்தியத்தை உறுதிபடுத்துகிறது.

உண்மையில் UDR பட்டா தவறான முறையில் வழங்கப்பட்டதாகும். இப்போது நீதிமன்றமும் அவர்களுக்கு INJUNCTION ORDER ஐ கொடுத்துவிட்டது. தற்போது இந்த வழக்கு எங்களுக்கு எதிராக முடிந்து 11 வருடங்களாகியும் எங்களது வழக்கறிஞர் 2வது மேல்முறையீட்டினை தாக்கல் செய்யாமல் ஏமாற்றியுள்ளார். எனது தகப்பனாரும் தாயும் படிப்பறிவில்லாதவர்கள். UDRக்கு முன்பு வரை இந்நிலம் எனது தாத்தா கிரயம் பெற்ற நபரிடம் தான் இருந்துள்ளது.

இவற்றிற்கான தீர்வு தான் என்ன? தயவுசெய்து எனது தாத்தாவின் விவசாய நிலத்தை மீட்டெடுக்க உதவிசெய்யுங்கள்…. நான் மிகவும் சாதாரணமான நடுத்தர வர்க்கம். எனக்கு நீதி கிடைக்க வேண்டும்.

பதில்: மோகன் குமார்

” UDR என்கிற ஸ்கீம் தற்போது இல்லை. கிரைய பத்திரத்தை கணக்கில் எடுக்காமல் UDR ஐ வைத்து பட்டா கொடுத்தது தவறு. உங்கள் பக்கம் நியாயம் உள்ளது எனில் இந்த சொத்தை உங்கள் தாயார் திரும்ப பெறலாம்.

நீங்கள் இது பற்றி சம்பந்தப்பட்ட தாசில்தாரிடம் ஒரு மனு தரலாம். அதில் உங்கள் எதிராளிக்கு தவறான முறையில் பட்டா தரப்பட்டுள்ளது. உண்மையில் அதற்கு சொந்தக்காரர் உங்கள் தாயார்தான் என்றும், அந்தப் பட்டாவை நீக்கக் கோரியும் எழுத வேண்டும். ஒரு வேளை தாசில்தார் உங்களுக்கு எதிராகச் சொன்னாலும் கூட, அதனை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடரலாம். அப்போது கோர்ட் யாருடைய Title documents சரியாக உள்ளதோ அவருக்குத் தான் சொத்தின் மீது உரிமை உண்டு என்று தீர்ப்பு கூறும்.

இன்னொரு வழி சொத்து உள்ள அதே ஏரியாவில் இருக்கும் மாவட்ட நீதிமன்றத்தில் உங்கள் எதிராளிக்கு வழங்கப்பட்ட பட்டா சரியானதல்ல ( Null and void) என வழக்கு தொடரலாம்.

ஏற்கனவே ஒரு வழக்கு நடந்ததாக சொல்கிறீர்கள். அதன் பேப்பர்களையும் பார்க்க வேண்டும் “

இது பற்றி மேலும் உங்களுக்கு சந்தேகம் இருந்தால், சிவில் வழக்குகளை எடுத்து நடத்தும் வழக்கறிஞர் திரு. அமுதன் என்பவரை தொடர்பு கொள்ளுங்கள். அவருக்கு ramudhan_ramasamy@yahoo.com என்கிற மெயிலுக்கு எழுதுங்கள்

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “சட்ட ஆலோசனை – கேள்வி- பதில்

  1. என் தாத்தா இறந்த பிறகு 1985ம் ஆண்டு UDR என்னும் நில உடமை பதிவு மேம்பாட்டு திட்டம் செயல்பாட்டில் எனது தாத்தாவின் பெயரில் உள்ள  பட்டாவை பாட்டி பெயரில் வாங்கினோம் .அதற்கு பிறகு 10 நாட்கள் கழித்து எனது தாத்தாவின் அண்ணன் பேரன் பட்டாவிற்கு உரிய நிலத்தில் எனக்கும் பங்கு உண்டு என்று சொல்லி எங்களுக்கு தெரியாமல் பட்டாவில் தன்னையும் இணைத்துகொண்டர். ஏனென்றால்,பங்கு பிரிப்பதற்கு முன்  அனைத்து  சொத்துக்களும் எனது தாத்தாவின் அண்ணன் பெயரிலேயே இருந்தது. சிறிது  நாட்கள் கழித்து வழக்கு தொடர்ந்தார். என் பாட்டியும் இறந்ததால், எங்களுக்கும் படிப்பறிவு இல்லாததால் வழக்கை எதிகொள்ள தெரியாமல் விட்டுவிட்டோம்.நீதிமன்றத்தில்  பாதி நிலம் அவருக்கு சொந்தம்    என்று சாதகமாக தீர்ப்பு வந்துவிட்டது.இது நடந்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டது.இப்போது மீதியுள்ள நிலத்தை பயன்படுத்த முயற்சி செய்தோம்.அதற்கும் நீதிமன்றம் வாயிலாக நோட்டீஸ் அனுப்பியுள்ளார் .
                   நாங்கள் எப்படி மீதியுள்ள நிலத்தை உபயோகிப்பது மற்றும் தீர்ப்பான நிலத்தை மீட்க வாயப்புள்ளதா?

Leave a Reply

Your email address will not be published.