பல்துறை வித்தகர். பதிப்புத் துறையிலும் சைவத் திருமுறைகளிலும் ஆழ்ந்து தோய்ந்தவர். அதே நேரம், கடலியல் துறையில் பழுத்த அனுபவம் வாய்ந்த வல்லுநர்.
கொழும்பு கடற்றொழில் ஆராய்ச்சி நிலையத்தின் ஆய்வு அலுவலராக 11 ஆண்டுகள் பணியாற்றியவர்.
யாழ்ப்பாணப் பல்கலைக் கழகத்தில் 2 ஆண்டுகள் பேராசிரியர் பணியாற்றியவர்.
23 நாடுகளில் ஐ.நா. உணவு வேளாண் நிறுவன ஆலோசகராகச் சுமார் 7 ஆண்டுகள் பணியாற்றியவர். கருவாடுகளைக் காயவைத்தல் தொடர்பாகப் புதிய முறைகளை உருவாக்கியவர். சேதுக் கால்வாய்த் திட்டம் தொடர்பான புரிதலைப் பல நிலைகளில் உருவாக்க முனைந்தவர்.
கூர்மையான நோக்கும் அறிவியல்பூர்வமான அணுகுமுறையும் கொண்டவர்.