பிச்சினிக்காடு இளங்கோ

விழுப்புரம்சந்திப்பு-5

 
புகைப்படத்தில் நான்…
இளமையாய் இருந்தேன்
இளமையாய் இருந்ததால்
இளங்கோவாய் இருந்தேன்

படத்தை நம்பிப்
பழக வேண்டாம்
படத்தின் இளமை
நிஜத்தில் குறையலாம்

ஏமாற்றம் என்பதும்
எளிதில் வரலாம்
ஏமாற்றமும் வேண்டாம்
ஏமாறவும் வேண்டாம்

கடிதங்களிலேயே
காலம் கழிப்போம்
கனவுகள் இல்லாது
இரவைக் கரைப்போம்

கல்வியில் கவனம்
கூட வேண்டும்
கவிதையில் ஆர்வம்
குறைய வேண்டும்

எதிர்காலம் என்பது
இனிக்க வேண்டும்
இப்பொழுதே ஒரு
தேடல் வேண்டும்
கல்வி என்கிற
அடித்தளம் வேண்டும்

அறிவுரை கூறி
அனுப்பினேன் மடலை
ஆனாலும் ஏனோ
எழுதுவதை விடலே
பாவம்
பாவையின் பருவம்
விடலை
கவிதையைப் புகழ்ந்ததும்
கவிதையால் நெகிழ்ந்ததும்
எழுதும் மடல்கள் எல்லாம்
இனிக்கும் மடல்கள்

கடிதம் எழுதுவது
கலையாக மறியது
கடிதக்கலையில்
இலக்கியம்
கண் சிமிட்டிக்கொண்டது

காலை
பகல்
மாலை
இரவு
நட்சத்திரமாய் என்னை
நடமாட வைத்தது
நாயகத்தன்மையைத்
தானாய்த் தந்தது

பணியின் பளுவை
உணர்ந்ததே இல்லை
பனி போல் அவை
உலர்வதைக் கண்டேன்

வானொலி நாடகம்
எழுதும் போதெல்லாம்
பெண் பாத்திரத்தின் பெயர்
அந்தப்
பெண்குவின் பறவைதான்
இடம் பெறும்

கடிதம் வழித்
தொடர்பு தொடர்ந்தாலும்
வானொலி வழியிலும்
நீடித்தது

வானொலியில் என் குரல்
வரும்போதெல்லாம்
தேனாக இனிக்குமென்று
தகவல் வந்தது

ஒவ்வொரு நாளும்
ஒன்றரைமணி நேரம்
எங்கள் ஒலிபரப்பு

(தொடரும் )

படத்திற்கு நன்றி:http://www.mahatmadonnie.com/2006/10/one-day-that-hit-the-pocket-books-but-ultimately-yet-another-priceless-experience-3/young-girl-peeping-through-a-kitchen-window-2/

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *