அம்மாவின் முகம்!
பாகம்பிரியாள்
வாய் திறந்து பேசாமலே 
அனைத்தையும் சொல்லும்
அம்மாவின் அழகு முகம்!
அப்பா வருகிறாரென்றால்,
அவளின் விழிகள் தாழ்ந்து விடும்.
சந்தோஷமென்றால், அவளின்
சிவந்த கன்னக் கதுப்பும் சிரிக்கும்.
அவள் வருந்திக் கொண்டிருக்கையில்,
அவளின் வட்ட முகம் வாட்டத்தில்
நீண்டு கிடக்கும் பாய் போல்.
சிந்தனைக் களத்தில் அவள் இருக்கிறாளென்பதை
ஏறிக்கிடக்கும் புருவம் காட்டிக் கொடுக்கும்.
பிள்ளைகளாய் நாங்கள் தவறு செய்கையில்,
பேசாமல் அவள் விழிகள் எங்களைக் கண்டிக்கும்.
நவரசமும் எங்களுக்கு அறிமுகம் ஆனது
அவளின் முக அரங்கத்தில்தான் !
அதனால்தான் என்னவோ
நான் தினமும் பொட்டு வைக்க,
குங்குமச் சிமிழைத் திறக்கும் போதெல்லாம்
அதில் அவள் வட்ட முகம் எட்டிப்பார்க்கிறது!
படத்திற்கு நன்றி
http://basia.typepad.com/india_ink/2006/02/a-touch-of-kumkum.html

உண்மைதான்.
நவரசமும் நர்த்தனமிடும்
நற்றாயின் முக அரங்கம்
நல்லதே தரும் எல்லோருக்கும்..
நன்று…!
-செண்பக ஜெகதீசன்…