நீலகண்டன் (செம்பூர் நீலு)

நான் செம்பூரிலிருக்கும் அஹோபில மடத்திற்கு வழக்கம் போல் மாலையில் சென்றிருந்தேன். அன்று சனிக்கிழமை நல்ல கூட்டம். தீபாராதனை முடிந்த பிற்பாடு தீர்த்தம் சடாரி ப்ரசாதம் வாங்கிக்கொண்டு கோவிலை விட்டு வெளியில் வரும்போது தான் வித்யாவை கவனித்தேன். வித்யாவும் அவளின் கணவர் சுந்தரும் அப்போது தான் கோவிலுக்குள் அடியெடுத்து வைத்தார்கள். அவர்கள் என்னை கவனித்த்தாக தெரியவில்லை. நான் வலுவில் அவளிடம் சென்று “ எப்படி இருக்காய் வித்யா. வீட்டில் எல்லாரும் சௌக்கியமா நாம பார்த்து எத்தனை வருஷங்கள் ஆகிறது “ என்று விசாரித்தவுடன் வித்யா என் கைகளை பிடித்துக்கொண்டு “ லலிதா அக்கா நீங்கள் எப்படியிருக்கிறீர்கள் என்று கேட்டுவிட்டு தன்னுடைய கண்ணீரை துடைத்துக்கொண்டாள். அது ஆன்ந்த கண்ணீராக எனக்கு தோன்றவில்லை அவளுடைய முகத்தை பார்த்ததுமே எனக்குப் புரிந்து விட்ட்து. முகம் ஒரு சுரத்தில்லாமல் இருந்த்து. நானாக ஒன்றும் கேட்கவேண்டாம் என்று நினைத்து அவளிடம் “ வீட்டிற்கு வாயேன். “ என்று அழைத்தவுடன் அவளுடைய கண்ணிலிருந்து கண்ணீர் பெருகியது. ” உங்களிடம் சண்டை போட்ட நான் எந்த முகத்தை வைத்துக்கொண்டு வருவது என்று கேட்டு விட்டு பிறகு சுதாரித்துக்கொண்டு ” அக்கா நான் கட்டாயம் வருகிறேன். உங்களிடம் மனது விட்டு பேசவேண்டும். நாளைக்கு நான் வருகிறேன் என்று சொன்னாள். சுந்தரிடம் “ நாளைக்கு காலையிலே வித்யாவை கூட்டிகொண்டு வந்திருங்கோ. உங்களப் பார்த்தா ரமணியும் சந்தோஷப்படுவார் ராத்திரி சாப்பிட்டுவிட்டு போனால் போதும் “ என்று சொல்லிவிட்டு அவளிடமும் சுந்தரிடமும் விடை பெற்றேன்.

வீட்டீற்கு வந்து கதவை திறந்ததுமே “ வாங்கோ ஹோம் மினிஸ்டர் எங்கே சுற்றிவிட்டு வருகிறாய் ” என்ற என் கணவரின் இளக்கார வரவேற்பை எதிர்பார்க்காத நான் ரமணியிடம் “ நீஙக 5 மணிக்கு வருவேள் என்று எதிர்பார்த்தது தான் மிச்சம் உங்க்ளுக்குத் தான் என்னைப் பற்றி ஒரு கவலையும் கிடையாது. எப்பொ பார்த்தாலும் அங்கெ லெக்சர் இங்கே லெக்சர் உங்களை விட்டா இந்த பம்பாயில் வேறே சைக்கியாட்ரிஸ்டே கிடையாது என்ற நினப்பு “ என்று சொல்லி விட்டு காபி கலக்குவதற்காக கிச்சனில் நுழைந்தேன். காபியை கொடுத்துக்கொண்டே “ என்னாங்கோ, இன்றைக்கு அதிசயமா வித்யாவையும் அவளுடைய கணவர் சுந்தரையும் கோவிலில் பார்த்தேன். அவாளை நாளைக்கு வரச்சொல்லியிருக்கேன். நாளைக்கு ஏதாவது லெக்சர் ப்ரோக்ராம் இருந்தால் எல்லாத்தையும் கான்சல் பண்ணுங்கோ. அவள் முகத்தை பார்த்த்திலிருந்து எனக்கு மனசே சரியில்லை. அவள் ஏதோ கஷ்ட்த்திலிருக்கா என்று தோன்றுகிறது. நானாக ஒன்னும் கேட்கவில்லை. அவளே என்னிடம் மனசுவிட்டு பேசணம் என்று சொன்னாள். அதனால் தான் அவளையும் சுந்தரையும் நாளைக்கே வரச்சொன்னேன்.” என்று சொன்னவுடன் “ ஓ. கே மாடம். என்னுடைய ஹோம் மினிஸ்டர் சொல்லியாச்சுன்னா அதற்கு மேல் அப்பீலே கிடையாது ” என்று சொல்லிவிட்டு டி.வி பார்க்கத் துவங்கினார்

அடுத்த நாள் ஞாயிற்றுக்கிழமை காலயிலேயே 9 மணிக்கு வித்யாவும் சுந்தரும் வந்தார்கள். என் கணவர் (ரமணி) சுந்தரை ஆரத்தழுவிக் கொண்டு வரவேற்றார். எல்லாருமாக டைனிங் டேபிளில் அமர்ந்து கொண்டோம். காபி டிஃபன் முடிந்த பிறகு ஹாலில் அமர்ந்துகொண்டு பழைய கதைகளை பேசிக்கொண்டிருந்தோம். பேச்சு வாக்கில் ரமணி சுந்தரிடம் சதீஷ் எப்படியிருக்கான், அவனை ஏன் கூட்டிக்கொண்டு வரவில்லை என்று காஷுவலாக விசாரித்தான். சதீஷின் பெயரைக் கேட்ட உடனே சுந்தர் வித்யா இருவர் முகமும் ஒரு வருத்தமான சூழ்நிலயை ப்ரதிபலித்தது. எல்லோரும் ஒரு 5 நிமிஷத்திற்கு மௌனமாக இருந்தனர். சுந்தர் தான் ஆரம்பித்தான்.

” ரமணி லலிதா நான் சொல்வதைகேட்டு அதிர்ச்சியடையாதீர்கள். கடந்த மூன்று வருஷமாக சதீஷ் ஒரு விரக்தியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறான். அவனுடைய மூடு எபபோ எப்படியிருக்கும் என்று சொல்ல முடியாது. சில நேரங்களில் யாருடனும் பேசாமல் ரூமின் கதவை அடைத்துக்கொண்டு இருப்பான். சில சமயங்களில் அவன் அழுதமாதிரி கண்ணெல்லாம் சிவந்து இருக்கும். படிப்பிலும் கவனம் செலுத்துவதில்லை. அதுவும் வித்யாவை கண்டால் அவனுக்கு வெறுப்பு வந்து எப்படியெல்லாமோ பிஹேவ் பண்ணுவன். வித்யாவுடன் அவ்ன் பேசுவதில்லை. யாருடனாவது பேசவேண்டும் என்று தோன்றினால் என்னிடம் தான் பேசுவான். அதுவும் என்னுடைய முகத்தைப் பார்த்து பேசுவதில்லை. எனக்கும் வித்யாவுக்கும் ரொம்ப கவலையா இருக்கு. உனக்கும் லலிதாவுக்கும் அவனை பற்றித் தான் நன்றாக தெரியுமே. உஙக இரண்டு பேரிடமும் அவனுக்கு சின்னவயது முதலே ஒரு பிடிப்பு உண்டு. நீங்க இரண்டு பேரும் தான் எனக்கு உதவி பண்ணவேண்டும் ” என்று ரமணியின் கையை பிடித்துக்கொண்டு சுந்தர் அழாத குறையாக கெஞ்சினான். வித்யாவோ லளிதாவின் மடியில் முகத்தை வைத்துக்கொண்டு கண்ணீர் விட்டு அழுதாள். லளிதா வித்யாவை கிச்சனுக்கு கூட்டிக்கொண்டு போய் சமாதானபடுத்தினாள்.

ரமணி சுந்தரிடம் “ நீ ஒன்றுக்கும் கவலைப்படாதே. இன்று முதல் சதீஷ் என்னுடைய இரண்டாவது பிள்ளை. அவனை சரியாக்குவது எங்களுடைய கடமை. அதற்கு முன் நீ என்னிடம் அவனுடைய இந்த நிலைமை எப்போதிலிருந்து ஆரம்பித்த்து அதன் பின்னணி முழுவதும் எனக்கு தெரிய வேண்டும். நாம சாப்பிட்டு விட்டு ஜிம்கானாவுக்கு போய் பேசுகிறோம் வித்யாவும் லலிதாளும் இங்கு இருக்கட்டும். வித்யாவும் லலிதாவிடம் ஒன்றையும் மறைக்காமல் மனது விட்டு பேசட்டும். பின்னர் நான் என்ன செய்யப்போகிறேன் என்பதை உஙகள் இரண்டு பேரிடமும் டிஸ்கஸ் பண்ணிவிட்டு மேற்கொண்டு என்ன செய்யவேண்டும் என்பதை பற்றி சொல்கிறேன்.” என்று ஆறுதலாய் சொன்னான்.

” லலிதா நானும் சுந்தரும் ஜிம்கானா க்ளப் வரை போய்விட்டு வருகிறோம். வருவதற்கு இரண்டு மணி நேரம் எடுக்கும். அதற்குள் நீ வித்யாவிடம் பேசிக்கொண்டிரு “ என்று சொல்லிவிட்டு கிளம்பினேன். ஞாயிற்றுகிழமை மத்தியானம் ஆனதினால் க்ளப்பில் ஜாஸ்தி மெம்பர்கள் இல்லை. ஒன்றிரண்டு பேர் மாத்திரம் இருந்தார்கள். நானும் சுந்தரும் ஒரு மூலையில் இருந்த டேபிளில் சென்று அமர்ந்தோம். சுந்தர் தான் பேச்சை ஆரம்பித்தான்.

” ரமணி உனக்குதான் சதீஷை நன்றாக தெரியும். சின்ன வயது முதல் பாதி நேரம் உன்னுடைய வீட்டில் தான் இருப்பன். எந்த ப்ரொப்ளம் என்றாலும் முதலில் லலிதாவிடமும் உன்னுடைய அம்மாவிடமும் தான் சொல்லுவன். அதன் பிறகு லலிதா சொல்லித்தான் எங்களுக்கு தெரியவரும்.. வித்யாவின் குணம் தான் உனக்கு தெரியுமே. அவளுக்கு எப்போதும் சதீஷ் தான் படிப்பில் முதல் இரண்டு ராங்கிற்குள் வரவேண்டும் என்று அவனை போட்டு படி படி அதைப் பண்ணு இதைப் பண்ணு என்று நச்சரித்துக்கொண்டிருப்பள். சதீஷின் ப்ராக்ரெஸ் ரிப்பொர்டை பார்த்து அவன் ராங்கில் வரவில்லையென்றால் அன்றைக்கு வீட்டில் ஒரே களேபரம் தான். ஹிஸ்டீரியா வந்த மாதிரி கத்துவள். இரண்டு நாளைக்கு சதீஷிடம் முகம் கொடுத்து பேசக்கூட மாட்டா. அந்த மாதிரி சமயஙகளில் சதீஷ் எங்களுடைய வீட்டில் இருக்கிற நேரஙகளை விட உங்களுடைய வீட்டில் தான் அதுவும் பாட்டியுடனும் ல்லிதாவுடனும் தான் இருக்க ஆசைப்படுவன். நான் எத்தனையொ முறை சொல்லியும் வித்யா கேட்டபாடில்லை. சதீஷுக்கு நீயும் லலிதாவும் பாட்டியும் சப்போர்ட் பண்ணுகிறீர்கள் என்ற ஒரே காரணத்திற்காக உங்களிடம் சண்டை போட்டுக்கொண்டு வீடு மாற்றிக் கொண்டு போனது தான் தெரியுமே. வித்யாவின் இந்த அணுகுமுறை தான் சதீஷின் இப்போதைய நிலைமைக்கு காரணம். இபபோ தான் வித்யா அதை உணர ஆரம்பித்திருக்கிறாள். நிலைமை கையை விட்டுப் போய்விட்ட்து என்று நினைக்கத் தோன்றுகிறது. எனக்கு அடுத்த மூன்று வருஷத்திற்கு சிங்கப்பூரில் போஸ்டிங் ஆகியிருக்கு. இன்னம் ஒரு மாத்த்தில் எனக்கு ஜாயின் பண்ணனம். அதே சமயத்தில் சதீஷை வித்யாவின் பாதுகாப்பில் விடுவதற்குள்ள தெம்பு என்னிடம் இல்லை. வித்யாவையும் என்னுடன் கூட்டிக்கொண்டு போகலாம் என்று நினத்திருக்கேன். சதீஷை ஹாஸ்டலில் விடுவதற்கும் எங்களுக்கு விருப்பம் இல்லை. நானும் வித்யாவும் இல்லாத சமயத்தில் சதீஷின் நிலைமை இன்னும் மோசமாகிவிடும் என்று பயப்படுகிறேன். நீயும் லலிதாவும் தான் அவனுக்கு கார்டியனாக இருந்துகொண்டு அவனை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வரணம். இந்த உதவியை என்க்கு நீயும் ல்லிதாவும் பண்ணுவீர்கள் என்ற நம்பிக்கையில் தான் நாங்க இரண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வந்தோம்.. சதீஷை நினத்தாலெ வித்யாவுக்கு வருத்தமும் விரக்த்தியும் வருகிறது. இந்த நிலைமை நீடித்தால் அவள் நிரந்தரமாக ஒரு ஹிஸ்டீரியா பேஷண்ட் ஆகிவிடுவள் என்று எஙகளுடைய ஃபாமிலி டாக்டர் என்னை வார்ண் செய்துவிட்டார்.” என்று அழாத குறையாக ரொம்ப வருத்த்த்துடன் பேசினான்.

” சுந்தர் இனிமேல் நீ எதற்கும் கவலைப்படாதே. ஒரு சைக்கியாட்ரிஸ்டான எனக்கு சதீஷின் மன நிலைமை புரிந்துவிட்டது. அவனை நீஙகள் எஙகளின் பாதுகாப்பில் விட்டுவிடுங்கள். ல்லிதாவும் ரொம்ப சந்தோஷப்படுவள். போன மாதம் தான் ரமேஷ் .எம். எஸ். படிப்பதற்காக ஃப்ளாரிடா – அமெரிக்கா புறப்பட்டுப் போனான். அவனில்லாதது லலிதாவுக்கு கொஞசம் கஷடமாகத் தான் இருக்கு. இந்த சமயத்தில் சதீஷ் எஙளுடன் இருக்கப்போகிறான் என்பதை கேள்விப் பட்டால் லலிதா ரொம்ப சந்தோஷப்படுவள். வா நாம் வீட்டிற்கு போய் இதை பற்றி பேசுவோம். வித்யாவும் லலிதாவிடம் மனசுவிட்டு எல்லாம் பேசியிருப்பள் “ என்று சொல்லிவிட்டு வீட்டிற்கு கிளம்பினோம்.

ரத்திரி 8 மணி வரை நான், ல்லிதா, வித்யா சுந்தர் எல்லோரும் மன்சு விட்டு பேசினோம். வித்யாவின் முகத்தை பார்ப்பதற்கே கஷ்டமாக இருந்த்து. நன்றாக அழுது அழுது கண்கள் சிவந்து இருந்த்து. ல்லிதா தான் அவளை அடிக்கொருதரம் சமதானபடுத்திக்கொண்டிருந்தாள். பேச்சை மாற்றுவதற்காக, ரமேஷின் போட்டோ ஆல்பஙளை பார்த்துக்கொண்டிருந்தோம். சாப்பிட்டுவிட்டு வித்யாவும் சுந்தரும் கிளம்பத் தயாரானார்கள். வித்யாவின் முகத்தில் ஒரு சின்ன மாற்றத்தை என்னால் கவனிக்கமுடிந்த்து. ” என்ன ல்லிதா உனக்கு இப்பொ பழைய வித்யா கிடைத்துவிட்டாள். உனக்கு சந்தோஷம் தானே “ என்று ரமணி ல்லிதாவை கேலி செய்தான்.. சுந்தர் வித்யா ” அடுத்த வாரம் நானும் ல்லிதாவும் வருவோம். ஃபுல் டே உஙகளுடனும் சதீஷுடனும் தான். இருக்கப்போகிறோம். இனி ஒன்றுக்கும் கவலைப்ப்டாதே. “ என்று சொல்லி ரமணியும் லலிதாவும் அவர்களை வழியனுப்பினார்கள்.

என்னாங்கொ “ நீஙக சுந்தரிடம் என்ன சொன்னீர்கள், நான் வித்யாவிடம் வாக்கு கொடுத்துவிட்டேன். சதீஷை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வரவேண்டியது நம்முடைய பொறுப்பு. அவனை சின்ன வயசு முதல் எனக்கு பிடிக்கும். அவனையும் ரமேஷையும் என்னுடைய இர்ண்டு பிள்ளைகளாகத் தான் நினத்திருந்தேன். அது உங்களுக்கும் தெரியும். நம்ப அம்மாவுக்கும் தெரியும். அம்மாவும் அவனை இன்னொரு பேரனாக தான் நினைத்துக் கொண்டிருந்தாள். சதீஷுடைய போராத காலம். ஏதோ ஒரு மனஸ்தாபத்தில் வித்யா என்னுடன் சண்டை போட்டுவிட்டு பேசாமலிருந்தாள். இன்று முழுக்க அதை சொல்லி சொல்லி என்னிடம் அழுதுகொண்டே பழசையெல்லாம் மறந்து மன்னித்து விடும்படி கெட்டுக் கொண்டாள். பாவம் வித்யா கொஞ்சம் முன்கோபம் ஜாஸ்தி பட பட வென்று பேசிக் கொட்டிவிடுவள். அவள் சதீஷை சின்ன வயசு முதல் ராங்க் ராங்க் என்று சொல்லி அவனை படாத பாடு படுத்தினாள். பாவம் அந்த குழந்தை எல்லாவற்றையும் மனதில் வைத்துக்கொண்டு இப்பொ இந்த நிலைக்கு ஆளாகிவிட்ட்து. இதற்கு வித்யா தான் பொறுப்பு என்று நான் அவளிடம் சொல்லி புரியவைத்தேன் . அவளும் தன்னுடைய தப்பை உணர ஆரம்பித்துவிட்டாள். ஆனால் இப்பொ உணர்ந்து என்ன பிரயோசனம் “ என்று லலிதா சொல்லவும் ரமணி ” சுந்தரும் இதைத் தான் சொன்னான். நானும் சுந்தரிடம் சதீஷை நம்ப வீட்டில் இருக்கட்டும் என்று சொல்லிவிட்டேன். எதற்கும் நாளைக்கு அட்டத்தின் மேலிருந்து ரமேஷின் பெட்டியை எடுத்து வை. அதில் பழைய ஆல்பஙகள், போட்டோக்கள், ரமேஷும் சதீஷும் வரைந்த ட்ராயிங்ஸ் எல்லாம் இருக்கும். அதை உபயோகித்துத்தான் சதீஷின் ட்ரீட்மெண்டை (சைகலாஜிகல்) ஆரம்பிக்கணம். மணி 11 ஆகிறது. கம்ப்யூடெரை ஆன் பண்ணி வைக்கிறேன் ரமேஷ் ஸ்கைப்பில் வருவன்.” என்று கம்ப்யூடெர் இருக்கும் அறையை நோக்கி சென்றான். ரமேஷிடம் சுந்தர் அங்கிளும் வித்யா ஆன்டியும் வந்ததையும், சதீஷின் நிலைமையும் விளக்கி ரமணியும் ல்லிதாவும் சொன்னார்கள். அதற்கு ரமேஷ் “ சதீஷ் பாவம் அம்மா, சின்ன வயசிலிருந்தே வித்யா ஆன்டீ அவன் ராங்கில் வரவில்லை என்று என்ன பாடு படுத்தியிருக்கா. அது தான் அவன் மனதில் பதிந்து அவனை இந்த நிலைமைக்கு ஆளாக்கியிருக்கும். நீஙக சொன்னபடியே அவனை நம்ப பாதுகாப்பில் நம்ப வீட்டிலேயே இருக்கட்டும். இப்பொ நான் உஙக கூட இல்லாத குறையை சதீஷ் தீர்த்து வைப்பன். அம்மா இனி என்னைப் பற்றி கவலைப்படமாட்டா “ என்று சொன்னதுமே ரமணிக்கும் லலிதாவுக்கும் மகிழ்ச்சியாக இருந்த்து.

படுக்கையில் படுத்த்தும் தூக்கம் வரவில்லை ல்லிதாவின் நினைவுகள் 15 வருடம் பின்னோக்கி சென்றது. ரமணியும் ல்லிதாளும், ரமணியின் அம்மாவும் அவர்களின் ஒரே குழந்தையுமான ஐந்து வயதான ரமேஷும் சென்னையிலிருந்து ட்ரான்ஸ்ஃபெர் ஆகி மும்பையில் செம்பூரிலுள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் குடிபுகுந்தார்கள். பக்கத்து ஃப்ளாட்டில் சுந்தரும் வித்யாவும் அவர்களுடைய மூன்று வயது குழந்தையுமான சதீஷும் இருந்தார்க்ள். வந்த ஒரு மாத்த்திலேயே ல்லிதாவும் வித்யாவும் ஒரு நல்ல நண்பர்களாகி விட்டனர். வித்யா செம்பூரிலுள்ள கல்லூரியில் பார்ட்-டைம் லக்ச்சரர்ராக இருந்தாள். ரமேஷ் அப்பொது தான் பள்ளிக்கு செல்ல ஆரம்பித்திருந்தான். ரமேஷுக்கு மத்தியானம் தான் ஸ்கூல். வித்யா காலேஜுக்கு செல்லும் சமயத்தில் சதீஷை ல்லிதா வீட்டில் தான் விட்டுவிட்டு போவாள். ரமேஷும் சதீஷுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சதீஷும் அண்ணா அண்ணா என்று ரமேஷிடன் ஒட்டிக்கொள்ளுவன். ரமணியின் அம்மாவிற்கோ குழந்தைகள் என்றால் ரொம்பவே பிடிக்கும். ரமேஷையும் சதீஷையும் கொஞ்ஜிக் குலாவி அவர்களுக்கு கதை சொல்லி, ஸ்லோகம் எல்லாம் சொல்லிக் கொடுத்து சாப்பாட்டுடன் பாசத்தையும் கொட்டிக் கொடுத்து தன்னுடைய பொழுதை நன்றாகவே கழித்தாள். ல்லிதாவுடனுன் சதீஷ் நன்றாகவே ஒட்டிக்கொண்டுவிட்டான். லலிதா சதீஷை தன்னுடைய இரண்டாவது குழந்தையாகவே நினைத்து பழகினாள். மாலையில் ரமேஷை பக்கத்தில் இருக்கும் ஸ்கூலில் இருந்து கூட்டிக்கொண்டு வருவதற்காக லலிதா சதீஷையும் அழைத்துக்கொண்டு போவதுண்டு. காலம் சென்று கொண்டிருந்த்து. இரு குடும்பஙகளும் ஒருவரை ஒருவர் அனுசரித்து நெருங்கிய நண்பர்களாக வாழத்துடங்கினார்கள். சதீஷும் ரமேஷ் படித்த ஸ்கூலிலயெ படிக்க ஆரம்பித்தான். சதீஷ் தேர்ட் ஸ்டண்டர்ட் படித்துக்கொண்டிருந்தான். ஒரு நாள் சதீஷ் அழுதுகொண்டே பாட்டி ஆன்டீ என்று அழுதுகொண்டே வந்தான். என்னடா ஆச்சு ஏன் அழறாய் என்று கேட்கவே ” அம்மா கோச்சுக்கறா உம்முன்னு இருக்கா என்னோட பேசமாட்டேன் என்னு சொல்லறா “ என்று சொன்னான். பாட்டி அவனை அணைத்துக்கோண்டு சமாதானபடுத்தினாள். கொஞச நேரத்தில் சதீஷ் பாட்டியுடன் தூங்கிவிட்டான். சாயஙகாலம் வித்யா சதீஷை கூட்டிகொண்டுபோக வந்தாள். அப்பொது நான் அடுக்களையில் இருந்தேன். வித்யா நேரே என்னிடம் வந்து “ ல்லிதா அக்கா இந்த சதீஷ் நன்னா படிக்கவே மாட்டேங்கிறான். குவார்டெர்லி டெஸ்டில் 10 வது ராங்க் வந்திருக்கான். அதனால் தான் எனக்கு கோபம் வந்தது. நன்னா திட்டிவிட்டேன்” என்று சொல்லவெ ” வித்யா சதீஷ் குழந்தை அவனை திட்டாதே. அடுத்த தடவை நன்னா படிச்சு நல்ல ராங்கிலெ வரணம் என்று அவனுக்கு புரியும்படி சொல்லு.” என்று சொல்லி சதீஷை அவளுடன் அனுப்பிவைத்தேன். இப்படியெ எல்லா வருடமும் நடந்துகொண்டிருந்த்து. சதீஷும் நன்றாகவே படித்தான். எல்லா டெஸ்டிலும் நல்ல மார்க் வாங்குவன். ட்ராயிங்கில் நல்ல இண்டெரெஸ்டு. எல்லா டேர்ம் பரீஷையிலும் 7 முதல் 10 ராங்கிற்குள் வருவன். வித்யாவின் இன்னொரு டாக்டர் ஃப்ரெண்டின் பிள்ளை முதல்/இல்லை இரண்டாவது ராங்கிற்குள் வருவன். அவர்கள் இருவரும் ரோடரி க்ளப்பில் மெம்பர்கள். அந்த டாக்டருக்கோ தன்னுடைய பிள்ளை முதல் இரண்டு ராங்கிற்குள் வருவதால், ரோடெரி க்ளப் லேடீஸ் கிட்டி பார்டியில் அதை சொல்லி சொல்லி பெருமைப்படுவள். அதை பார்த்து வித்யாவுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை வளர ஆரம்பித்த்து. சதீஷ் நல்ல ராங்க் வருவதில்லையே என்று மனத்தில் பொருமிக்கொண்டிருந்தாள். நாளுக்கு நாள் இந்த தாழ்வு மனப்பான்மை வளர்ந்து வளர்ந்து விச்வரூபமெடுக்கத்துடங்கியது. சதீஷும் வளர ஆரம்பித்தான். தினமும் சதீஷை படி படி அதைப்பண்ணு இதைப்பண்ணு என்று நச்சரிக்க ஆரம்பித்தாள். சதீஷ் நேரம் வரும்போதெல்லாம் பாட்டியிடமும் என்னிடமும் வந்து வித்யாவின் நச்சரிப்பை சொல்லி வருத்தப்படுவன். அவன் வரைந்த ட்ராயிங் எல்லவ்வறரையும் ஒரு தடவை கூட பாராட்டி பேசியதில்லை. சதீஷ் 8த் ஸ்டாண்டேர்ட் படிக்கும் சமயத்தில் அவன் இண்டெர்-ஸ்கூல் ட்ராயிங் காம்பெடிஷனில் 2வ்து பரிசு கிடைத்த்து. அன்று சாயங்காலம் அந்த கப்புடன் வீட்டிற்கு வந்து வித்யாவிடம் தனக்கு பரிசு கிட்த்த கப்பை காட்டினான். வித்யாவோ அதை கண்டுகொள்ளவில்லை. மாறாக அவனை “ இதுக்கொண்ணும் குறைச்சலில்லை. படிப்பில் மாத்திரம் ராங்க் வாங்காதே” என்று அவனை இளக்காரமாக பேசினாள். சதீஷொ வருத்த்த்துடன் என்னிடம் வந்து அம்மா இப்படி சொன்னாள் என்று கண்ணீருடன் சொன்னவுடனே அவனை அணைத்துக்கோண்டே “ நீ ஒன்றும் நினத்துக் கொள்ளாதே அந்த அம்மா சொல்ல்லைன்னா என்னா இந்த அம்மா சொல்லறேன். நீ பரிசு வாங்கியதில் எனக்கு ரொம்ப சந்தோஷம். என்று சொல்லி அந்த கப்பை வாங்கி ரமேஷின் கப்புகளுடன் ஷோகேசில் வைத்தாள். “ சதீஷ் நிம்மதியுடன் சென்றான். ஒரு வாரம் கழிந்து அவனுடைய ட்ராயிங் ஆல்பத்தை கொண்டு வந்து “ ஆன்டீ இந்த ஆல்பம் இங்கே இருக்கட்டும்.. எஙக வீட்டில் இருந்தால் அதை வேஸ்ட் பேப்பர் காரனுக்கு என் அம்மா போட்டுவிடுவாள் ரெண்டு மூனு தரம் அம்மா அதை என் கண்முன்னாலெ வீசி எறிந்தாள் எனக்கு ரொம்ப கஷ்டமாக இருந்த்து ” என்று சதீஷ் சொன்னவுடன் எனக்கு வித்யாவின் நடவடிக்கையிலும் சதீஷை இந்த மாதிரி நாக் பண்ணி நடத்துவதையும் நினைத்து வித்யாவிடம் ஒரு நாள் கேட்கவேண்டும் என்று நினைத்துக்கொண்டிருந்தாள். இந்த மாதிரி பல நிகழ்வுகளை. சதீஷ் லலிதாவிடம் வந்து சொல்லி வருத்தப்படுவன். ஒரு நாள் ல்லிதா ரமணியிடம் நடந்த நிகழ்வுகளை யெல்லாம் ஒன்று விடாமல் கூறினாள். பாட்டியும் சதீஷின் வருத்தங்களை ஒவ்வொன்றாக சொன்னாள். ரமணி ஒரே வார்த்தையில் பதில் சொன்னான் “ த ரேஸ் இஸ் நாட் இம்பார்டெண்ட், பட் த ஹார்ஸ் இஸ் இம்பார்டெண்ட்” பந்தயம் முக்கியமல்ல, குதிரை தான் முக்கியம் குதிரை இல்லை என்றால் பந்தயம் எதற்கு ” சரி நான் எதற்கும் சுந்தரிடமும் வித்யாவிடமும் பேசிப் பார்க்கிறேன் என்று சொன்னார். அடுத்த இரண்டாவது வாரத்தில் தீபாவளி பண்டிகை. அன்று காலை சுந்தரையும் வித்யாவையும் காபி-டிஃபனுக்காக அழைத்திருந்தோம். அதற்கு இரண்டு நாள் முன்னால் தான் சுந்தரை பார்த்து ரமணி சில் அறிவுரைகளை கூறினானர்.. வித்யாவின் இந்த போக்கு சதீஷின் மனநிலையை எந்த விதமாக பாதிக்கும் என்பதை பற்றியும் ஒரு சைக்கியாட்ரிஸ்டின் கண்ணோட்டத்தில் எச்சரித்தார்.. சுந்தருக்கு எல்லாம் புரிந்த்து. அவன் ஒரே வார்த்தையில் பதில் சொன்னான் “ வித்யாவிடம் நான் பலமுறை எச்சரித்திருக்கிரேன். அவள் கேட்ட பாடில்லை. அவளுக்கு ஒரு தாழ்வு மனப்பான்மை எதுக்கும் நீயும் லலிதாளும் ஒரு முறை சொல்லிப் பாருங்கோ “ என்று சொன்னான்.

தீபாவளிப் பண்டிகை அன்று காலை 9 மணிக்கு ரமணி, சுந்தர், வித்யா, ல்லிதா பாட்டி எல்லாரும் ரமணியின் வீட்டு ஹாலில் கூடி ஒருவருக்கு ஒருவர் தீபாவளி வாழ்த்துகள் சொல்லி பாட்டியை நமஸ்காரம் பண்ணி பாட்டியின் ஆசீர்வாத்த்தை பெற்றனர். ரமேஷும் சதீஷும் பட்டாசு வெடிக்கும் மும்முரத்தில் இருந்தனர். ரமணி தான் முதலில் சதீஷை பற்றி ஆரம்பித்தான். ” வித்யா சுந்தர் நீங்க இரண்டு பேரும் என்னை தப்பா நினக்கமாட்டீர்கள் என்ற நம்பிக்கையில் நான் ஒரு முக்கியமான டாபிக்கை உங்களிடம் டிஸ்கஸ் பண்ணலாம் என்று இருக்கேன். உங்களுக்கு ஒரு பழமொழி தெரியுமா நான் சொல்கிறேன் “ தெ ஹார்ஸ் இஸ் மோர் இம்பார்டெண்ட் தான் தெ ரேஸ் அண்ட் தயர் இஸ் நோ ரேஸ் வென் தெ ஹார்ஸஸ் லெக் இஸ் ப்ரோகன் “ இந்த பழமொழியின் அர்த்தம் உஙக இரண்டு பேருக்கும் புரிந்து இருக்கும் என்று நினைக்கிறேன். இந்த பழமொழிக்கும் சதீஷின் படிப்பிற்கும் வித்யாவின் அணுகுமுறைக்கும் சம்பந்தம் இருக்கு. சதீஷ் உங்களுக்கும் மட்டும் பிள்ளை இல்லை. அவன் இந்த வீட்டுக்கும் பிள்ளை. ஒரு சைக்கியாட்ரிஸ்டிக் என்ற கண்ணோட்டத்தில் நான் இதை வித்யா உனக்கு முக்கியமா இதை சொல்லறேன். சதீஷ் நன்றாகவே படிக்கிறான். 7 முதல் 10 ராங்கிற்குள் வருகிறான். ஒரு க்ளாஸில் 50 மாணவர்கள் படிக்கிறார்கள் என்று வைத்துக்கொள்வோம்.. எல்லாரும் முதல் ராங்கும் இரண்டாவது ராங்கும் வாஙக முடியாது. ஒ.கே. நாம தான் சதீஷை ஊக்கப்படுத்தி நல்லவிதமா சொல்லி அவனை புரியவைத்து அவனுடைய ராங்கை இம்ப்ரூவ் பண்ணப் பார்க்கணம். அதை விட்டுவிட்டு அவனை தினம் தினம் நச்சரிக்க ஆரம்பிச்சா அது அவனுடைய மன்நிலையை பாதிக்கும். அவன் வளரும் குழந்தை. அவன் விரும்பி செய்கின்ற ட்ராயிஙகை என்றைக்காவது நீ பாராட்டி பேசியிருக்கிறாயா. இதெல்லாம் நம்மைப் பொறுத்த மட்டில் ரொம்ப சின்ன விஷயம். அதெ சமயம் அந்த குழந்தைக்கு ரொம்ப பெரிய விஷயம். நான் உன்னை குற்றம் சொல்லுகிறேன் என்று நினத்துக் கொள்ளாதே. நீயும் சுந்தரும் எஙக குடும்பத்திலே ஒருத்தரா நினைத்துத் தான் சொல்கிறேன். இன்று வரைக்கும் நானோ லலிதாவொ ரமேஷைன் ராங்கைப் பற்றி ஒரு வார்த்தை சொன்னது கிடையாது. சில டேர்மில் 3வது ராங்க் வருவன் சில டேர்மில் 7வ்து ராங்க் வருவன். அவனே லலிதாவிடம் வந்து “ அம்மா இந்த தடவை மார்க் குறைந்துவிட்ட்து. அடுத்த டேர்மில் நான் இன்ப்ரூவ் பண்ணுவேன் என்று சொல்லுவன். அவனை பேச்சுபோட்டி, ட்ராயிங்க் போட்டி எல்லாவற்றிலும் கலந்துகொள்ள ஊக்குவிப்பேன். அதெ சமயம் போட்டியில் கலந்து கொள்ளுவது தான் முக்கியமே தவிர பரிசு முக்கியமில்லை என்று அவனிடன் சொல்லி வைப்பேன் இன்னொரு முக்கியமான விஷயம் ஒருபோதும் இன்னொரு ஸ்டூடெண்டை சதீஷுடன் கம்பெயர் பண்ணி பேசாதே. வீட்டில் போய் நன்னா திங்க் பண்ணிப்பாரு நான் சொன்னது சரியா தப்பா என்று புரியும் “ என்று நான் சொல்லிமுடித்தேன். வித்யாவின் முகத்தில் ஒரு கோபமும் வெறுப்பும் தாண்டவமாடியதை கவனித்தேன். ஒன்றுமே சொல்லாமல் எழுந்திருந்து போனாள். இரண்டு வாரங்கள் கழிந்தது ஒரு நாள் மாலை நானும் சுந்த்ரும் ஸ்டேஷனிலிருந்து வந்துகொண்டிருந்தோம். ” ரமணி அன்றைக்கு நீ சொன்ன அறிவுரையை வித்யா பாசிடிவ் ஆக எடுத்துக்கவில்லை என்று நினைக்கிறேன். அவளுடைய போக்கில் ஒரு மாற்றமும் இல்லை வறது வரட்டும் என்று நினைக்கிறேன். எதுக்கும் என்ன நடக்கிறது என்று பார்ப்போம்” என்று வருத்தத்துடன் சொன்னான்.

மாதங்கள் கடந்தன. சதீஷ் வந்து வழக்கம் போல் லலிதாவிடம் பாட்டியிடமும் ஏதாவது சொல்லிக்கொண்டிருப்பன். ஒரு நாள் பேச்சுவாக்கில் சதீஷ் “ ஆன்டி, அம்மா இப்பொ என்னை ரொம்பவே நாக் பண்ணறா. நான் எப்போதும் உஙக வீட்டிலெ இருக்கிறதா சொல்லறா. வீட்டிலே நடக்கிறதெல்லாம் உஙக கிட்டேயும் பாட்டிகிட்டேயும் சொல்லப்படாது என்று என்னை கண்டபடி திட்டினா. அம்மா இல்லாத சமயம் பார்த்து தான் இங்கு வந்திருக்கிறேன். அம்மாவுக்கு என்ன ஆச்சு என்னே தெரியவில்லை. என் கூட சரியா பேசமாடேங்கிறா. அவசியம் இல்லாமா கத்தி கூச்சல் போடறா. எனக்கு ரொம்ப பயமாகவும் வெறுப்பாகவும் இருக்கு. அப்பா கிட்டே சொன்னேன். ” ஐ ஹேட் அம்மா ஐ ஹேட் அம்மா ” என்று கண்ணீருடன் சொன்னவுடன் எனக்கு என்னமோ ஆகிவிட்டது. பாட்டியும் இருந்தாள். பாட்டி தான் சதீஷை அணைத்துக்கொண்டு சமாதானப் படுத்தினாள். நான் ஒரு நாள் மத்தியானம் வித்யாவை பார்த்து அவளிடம் ஏன் இப்படி நடந்துக்கிறாய் என்று கேக்கணம் என்று நினத்துக்கொண்டு சென்றேன். எப்போது நான் சென்றாலும் வா லலிதா அக்கா என்று சிரித்துக் கொண்டு வரவேற்கும் வித்யா அன்று ஒன்றும் பேசாமல் கதவை திறந்து வா என்று கூட சொல்லவில்லை. நான் தான் அவளிடம் “ என்ன வித்யா நீ இந்த ஊர்லே தான் இருக்கயா இல்லை வெளியூர் எஙகேயும் போயிருந்தாயா வீட்டிற்கு வந்து எத்தனை நாள் ஆகிவிட்ட்து. பக்கத்து ஃப்ளாட்டில் இருக்கொம் என்று பேரு. நீ வறதே இல்லை என்று பாட்டி ஒரே கம்ப்ளைண்ட். எப்படி இருக்காய் “ என்று கேட்டதற்கு பதிலே சொல்லவில்லை. எங்கோ பார்த்த மாதிரி ஏதோ இரண்டு வார்த்தை பேசினாள். எனக்கு என்னவோ மாதிரி ஆகிவிட்ட்து. சுதாரித்துக்கொண்டு “ என்ன வித்யா என்னவாச்சு உனக்கு சரியா முகம் கொடுத்துப் பேசமாட்டேங்கிறாய். இப்பொ என்ன நடந்தது. ரமணி உன்னிடம் சொன்னது உன்னுடைய நல்லதுக்கும் சதீஷின் வருஙாலம் நன்றாக இருக்கணம் என்கிற நல்ல எண்ணாத்திலே தான். அதை நீ தப்பா எடுத்துப்பாய் என்று கனவில் கூட நான் நினைக்கவில்லை. பாவம் சதீஷ் என்று சொன்னவுடன் “ நீயும் பாட்டியுமா சேர்ந்து சதீஷை கெடுத்து விட்டிருக்கிறீர்கள். அவன் நீஙக பக்கத்தில் இருக்கிறேள் சப்போர்ட் பண்ணுகிறீர்கள் என்ற தைரியத்திலே தான் இப்படி நடக்கிறான். நான் என்ன சொன்னாலும் கேட்பதே இல்லை. நீ அவனுக்கு அம்மாவா நான் அவனுக்கு அம்மாவா. உஙக பக்கத்திலே நாஙக இருக்கிற மட்டும் சதீஷ் என் பேச்சு ஒன்றையும் கேட்கப்போவதில்லை. இன்னம் கொஞச நாள் தான். இந்த வருஷம் ஜூனில் நாஙக வாசிக்கு போகப் போகிறோம். அப்புறம் ஆவது சதீஷ் நான் சொன்னதை கேட்டு என் விருப்ப்படி நல்ல ராங்க் வாங்குவன் என்கிற நம்பிக்கை இருக்கு.. இனிமேல் உஙக முகத்திலே கூட முழிக்க நான் விரும்பவில்லை ” என்று ஹிஸ்டீரியா வந்த மாதிரி காட்டு கூப்பாடு போட்டு விட்டு அடுத்த் ரூமிற்கு சென்றுவிட்டாள். நல்ல காலம் சதீஷ் அந்த சமயத்தில் இல்லை டியூஷனுக்கு சென்றிருந்தான். இதையெல்லாம் வெளியிலிருந்து பார்த்துக்கொண்டிருந்த பாட்டி அதிர்ச்சியில் அப்படியே தறையில் உட்கார்ந்து விட்டாள். வித்யா இப்படி பேசிவிட்டாளே என்று நான் அழுதுகொண்டே வீட்டிற்கு திரும்பி வந்தேன். ராத்திரி ரமணியிடம் நடந்த விஷயத்தை சொன்னேன். ரமணி அதற்கு “ இது நான் எதிர்பார்த்த ஒன்று தான். நீ ஒன்றும் மனதை போட்டு கஷ்டபடுத்திக் கொள்ளாதே. நடக்கிறது நடக்கட்டும். சதீஷை நினைத்தால் தான் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கு. பாவம் அந்த பிள்ளை. சுந்தருக்கும் கஷ்டம். ஏதுக்கே அவன் ஆபீஸ் ப்ராப்ளமே அவனை படாத பாடு படுத்துகிறது. வீட்டில் வந்தால் வித்யாவின் புலம்பல் ஒரு நிம்மதியே இல்லை என்று என்னிடம் சொன்னான். நீ ஒன்றும் நடக்காதது போல் பேசாமல் இரு. ரமேஷிடமும் பாட்டியிடமும் அதையே சொன்னான். சுந்தரும் ஒரு நாள் பேச்சுவாக்கில் ஜூன் மாதம் வாசிக்கு ஷிஃப்ட் பண்ணுவதாக என்னிடம் சொன்னான். நான் ஒன்றும் சொல்லவில்லை. ஒன்று மாத்திரம் சொன்னேன் “ சதீஷை கவனமாய் பார்த்துக்கொள். அவனுடைய மனநிலை பாதிக்கிற மாதிரி வித்யா நடந்துகொள்ளாமல் பார்த்துக்கொள் ” என்று சொன்னேன். சொன்னபடி மே மாதம் கடைசியில் அவர்கள் வாசிக்கு வீடு மாற்றினார்கள். ல்லிதாவின் மனது கஷ்டப்படுமே என்ற ஒரே காரணத்திற்காக நாங்கள் குடும்பத்துடன் மே மாதம் தென்னிந்தியாவுக்கு தீர்த்த யாத்திரை சென்றுவிட்டேன். அதற்கு முன் சதீஷிடம் நடந்த நிகழ்ச்சிகளை ல்லிதா சொல்லி அவனை சமாதானப் படுத்தினாள். அதற்கு சதீஷ் “ நீங்களும் பாட்டியும் இல்லாவிட்டால் என்னுடைய வீடு எனக்கு ஜெயில் மாதிரி தான். நான் அடிக்கடி அப்பாவுடன் வந்து உங்களை பார்த்துக்கொள்கிறேன் டெலிபோனில் பேசிக்கொள்கிறேன் என்று மனவருத்த்த்துடன் சொன்னான். 6 மாதத்தில் பாட்டியும் காலமாகிவிட்டாள். துக்கத்திற்கு கூட வித்யா வரவில்லை. சுந்தர் சதீஷை அழைத்துக்கொண்டு வந்திருந்தான். இப்படியே வருடங்கள் உருண்டோடிவிட்ட்து. புதிய உறவுகள் புதிய இருப்பிடம், ரமேஷின் எஞ்ஜினீயரிங் படிப்பு, ரமேஷின் நண்பர்கள் என்று வந்த உடன் வித்யாவுடனும் சுந்தரிடமும் இருந்த நட்பின் அழுத்தம் குறைதுவிட்டது. அதே சமயத்தில் அவளையும் குறிப்பாக சதீஷையும் நினைக்காத நாளில்லை, நினைவலைகளில் இருந்த அப்படியே லலிதா தூக்கத்தில் ஆழ்ந்துவிட்டாள்.

காலயில் ரமணி வந்து 8 மணிக்கு.கையில் காபியுடன் “ கௌசல்யா சுப்ரஜா ராம என்று வெங்கிடேச்வர சுப்ரபாத்த்தின் வரிகளை சொல்லி என்னா ஹோம் மினிச்டர் இன்னம் திருப்பள்ளியெழுச்சி ஆகவில்லை நான் ஆபிஸுக்கு போகணுமா வேண்டாமா என்று கேட்டுக்கொண்டே “ என்னை எழுப்பினார். லலிதா நீ பழைய நினவுகளில் மூழ்கிவிட்டு லேட்டாத்தான் தூங்கினாய் என்று எனக்கு தெரியும். அதனால் தான் 6 மணிக்கு உன்னை எழுப்பவில்லை. நேற்று நான் சொன்னபடி அட்டத்திலிருந்து (லாஃப்ட்) ரமேஷின் பழைய பெட்டியை எடுத்து அதிலுள்ள பழைய போட்டொ ஆல்பஙளையும், சதீஷின் ட்ராயிங் புக், அவன் வாங்கிய கப் எல்லாவற்றையும் எடுத்து க்ளீன் பண்னிவை. நான் கிளம்புகிறேன் “ என்று சொல்லிவிட்டு போனார்.

அடுத்த ஞாயிற்றுகிழமை காலயில் 10 மணிக்கு ரமணியும் ல்லிதாவும் சுந்தரும் வித்யாவும் இருக்கிற வாசி வீட்டிற்கு சென்றார்கள். வாசல் கதவை வித்யா தான் திறந்தாள் சுந்தரும் இருந்தான். லலிதா உள்ளே சென்றவுடன் ” சதீஷ் எங்கே சதீஷை நான் பார்க்கணம்” என்று வித்யாவிடம் கூறினாள். சுந்தர் தான் சதீஷின் அறைக்கதவை தட்டி “ சதீஷ் யார் வந்திருக்கா பாரு “ என்று சொல்லவும் ஐந்து நிமிடம் கழித்து சதீஷ் கதவை திறந்தான். லலிதா தான் அவன் கையை பிடித்துக்கொண்டு “ சதீஷ் எப்படிடா இருக்காய் இந்த லலிதா ஆன்டியை மறந்து விட்டாயா என்று பாசத்துடன் கேட்டாள். சதீஷின் கோலம் அவளின் கண்ணீரை வரவழைத்துவிட்ட்து. ஷேவ் செய்யாத தாடி, வாராத தலைமுடி சுரத்தில்லாத முகம் இவைகளை பார்த்து ஆச்சர்யபட்டுப் போனாள். பின்னர் சுதரித்துக்கொண்டு “ சதீஷ் நான் உனக்கு என்ன கொண்டுவந்திருக்கேன் பாரு என்று, பையிலிருந்து ஒரு கிஃப்ட் பார்சலை எடுத்து அதை சதீஷிடம் கொடுத்தாள். சதீஷ் அதை வாங்கிக்கொண்டு, அதன் கவரிங் பேப்பரை பிரித்து அதனுள் இருந்த “ கப்பை ” பார்த்த்தும் முகத்தில் ஒரு சிரிப்பு வந்தது. லலிதாவிடம் நெருங்கி வந்து ” ஆன்டீ இது நான் முதல் முதல் ட்ராயிங் காம்பெடிஷனில் வாங்கிய கப் இல்லையா. இன்னமும் இதை பத்திரமா வைத்துக்கொண்டிருக்கேளே. யூ ஆர் க்ரேட். எங்க வீட்டிலிருந்தா இது என்னைக்கே டப்பா பாட்லிவாலாகிட்டே போயிருக்கும். தாக்ஸ் ஆன்டீ ” என்று சொன்னவுடன் லலிதா அவனை ஆரத்தழுவிக்கொண்டாள். வித்யா இந்த காட்ச்சியை பார்த்து கண்ணீர் விட்டாள். லலிதா “ வித்யா என்ன இது இனி நீ அழவே கூடாது. நான் வந்துவிட்டேன் இல்லையா கண்ணீரை துடைத் துக்கொள். என்ன டிஃபன் பண்ணியிருக்காய் என்று பேச்சை மாற்றினாள். வித்யா சுந்தர் ரமணி எல்லாருக்கும் டிஃபனை பரிமாறிவிட்டு, இரண்டு ப்ளேட்டில் டிஃபனை எடுத்துக்கொண்டு சதீஷின் அறைக்கு சென்று அவனுடன் சாப்பிட்டாள். மத்தியான சப்பாட்டையும் சதீஷுடன் அமர்ந்து கொண்டு சாப்பிட்டாள். ல்லிதா ராத்திரி கிளம்பும் வரை சதீஷின் ரூமிலிருந்துகொண்டு அவனுடன் பேசிக்கொண்டிருந்தாள். கிளம்பும் சமயத்தில் சதீஷ் “ ஆன்டீ நீஙக அடுத்த வாரமும் கட்டாயம் வாங்கோ. நான் வெய்ட் பண்ணிக் கொண்டிருப்பேன் என்று சொல்லிக்கொண்டே பில்டிங்கின் கேட் வரை வந்து வழி அனுப்பி வைத்தான். சுந்தருக்கும் வித்யாவுக்கும் சதீஷுடைய இந்த் பிஹேவியர் மகிழ்ச்சியையும் ஆச்சர்யத்தையும் கொடுத்தது.

அடுத்த வாரம் ரமணியால் ல்லிதாவை கூட்டிகொண்டு போகமுடியவில்லை. சதீஷ் நான்கு முறை போன் செய்து லலிதாவிடம் ஏன் வரவில்லை என்று கேட்டுக்கொண்டிருந்தான். அதற்கு அடுத்த வாரம் வெள்ளிகீழமை பாங்க் ஹாலிடே. ரமணி போன் செய்து சுந்தரையும் வித்யாவையும் சதீஷை கூட்டிக்கொண்டு மூன்று நாள் இருக்கிற மாதிரி வெள்ளிக்கிழமை காலையிலேயே வரச்சொன்னான். சதீஷின் ப்ளானைப்பற்றி டிஸ்கஸ் பண்ணுவதற்கு வசதியாக இருக்கும் சதீஷுக்கும் ஒரு மாறுதலாக இருக்கும் என்று லலிதா தான் இந்த ஐடியாவைச் சொன்னாள். மூன்று நாட்களும் லலிதா சதீஷிடம் நிறைய நேரம் பேசிக்கொண்டிருந்தாள் அடுத்த மாதம் முதல் அவன் செம்பூரில் தான் இருக்கப்போகிறான் என்றும் சுந்தரும் வித்யாவும் வேலை காரணமாக சிஙகப்பூர் போவதாக சொன்னாள். சதீஷ் முதலில் ஒன்றும் சொல்லவில்லை. ராத்திரி ல்லிதாவுடன் டைனிங் டேபிளில் சாப்பிடும் சமயத்தில் “ ஆன்டீ நான் உங்களுடன் செம்பூரிலேயே இருப்பேன். இங்கிருந்தே யுடிஸிடி க்கும் போவேன் என்று லலிதாவின் கையை பிடித்துக்கொண்டு சொன்னான். வித்யாவும் சுந்தரும் சதீஷ் இவ்வளவு சீக்கிரம் ல்லிதாளுடன் தங்கி படிப்பதற்கு ஒத்துப்பான் என்று எதிர்பார்க்க வில்லை. அவர்களுக்கும் மகிழ்ச்சியாக இருந்த்து. ல்லிதா ரமேஷின் அறையை சதீஷுக்கு காண்பித்து “ இது தான் உன்னுடைய லிவிங் கம் ஸ்டடி ரூம் “ என்று சொன்னவுடன் லலிதாவிடம் “ ரமேஷ் அண்ணா எங்கே நான் பார்க்கவே இல்லை” என்று கேட்டவுடன் “ ரமேஷ் அண்ணா அமெரிக்காவில் எம். எஸ் படிக்க போயிருக்கான். இன்னம் கொஞச நேரத்தில் ஸ்கைப்பில் வருவன் அப்பொ அவனோடு பேசு “ என்று சொன்னள்.

11 மணிக்கு ரமேஷ் ஸ்கைப்பில் வந்தான். எல்லாரிடமும் பேசினான். சதீஷிடம் ரொம்ப நேரம் பேசினான். சதீஷும் ரொம்ப குஷியோடு அவன் கேட்ட கேள்விகளுக்கு எல்லாம் பதில் சொன்னான். முக்கியமாக சதீஷ் ரமேஷுடைய ரூமை தான் யூஸ் பண்ணப்போவதாக சந்தோஷத்துடன் சொன்னான். சுந்தருக்கும் வித்யாவுக்கும் ஒரே ஆச்சர்யம். சதீஷா இப்படி பேசுகிறான். அவளுக்கு புரிந்தது ல்லிதாவின் பாசம் எவ்வளவு உயர்ந்தது என்று. போகும் சமயத்தில் சுந்தர் ரமணியின் கையை பிடித்துக்கொண்டு “ ரமணி ல்லிதா இனி எனக்கு கவலையே இல்லை. நானும் வித்யாவும் நிம்மதியா சிஙகப்பூர் போகலாம். சதீஷ் உஙகளுடைய பாதுகாப்பில் அதுவும் ல்லிதாவின் பாசத்தில் ஒரு புதிய சதீஷ் உருவாகுவன் என்ற நம்பிக்கை வந்துவிட்ட்து. நான் உங்களுக்கு என்ன கைமாறு செய்யப் போகிறேன் என்று தெரியவில்லை” என்று கூறவே ரமணி “ சுந்தர் வித்யா பெரிய பெரிய வார்த்தையெல்லாம் சொல்லாதே “ சதீஷ் எஙக வீட்டு பிள்ளை. இனி அவன் எங்களுடைய பொறுப்பில் தானே இருக்கப் போகிறான். நீங்க இரண்டுபேரும் கவலைப்படாமல் போங்கோ. நீஙக திரும்பி வரும்போது ஒரு புதிய சதீஷை சந்திப்பீர்க்கள்.” என்று சொல்லி அவர்களை வழியனுப்பினான்.

வித்யாவும் சுந்தரும் ஒரு வாரத்தில் சிஙகப்பூர் புறப்பட்டுப் போனார்கள். அவர்கள் போவதற்கு இரண்டு நாள் முன்னால் சதீஷை சுந்தர் செம்பூரில் கொண்டுவிட்டான். சதீஷ் சுந்தரிடம் “ அப்பா நீங்க சௌக்கியமா போய் விட்டு வாங்கோ. நான் ஏர்போர்ட்டுக்கு வரலை “ என்று சொல்லிவிட்டான். அவன் சொன்னதை கேட்ட சுந்தருக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்த்து. ரமணி தான் அவனை சமாதானப்படுத்தி அனுப்பினான். சதீஷ் வருவதற்கு முன்னாலேயே ரமேஷின் ரூமை ல்லிதா க்ளீன் பண்ணி வைத்திருந்தாள். ரமணி சொன்னபடி பழைய ஆல்பங்களையும் சதீஷின் ட்ராயிங் நோட் புக்ஸ்களையும் ஒரு ஷெல்ஃபில் சதிஷ் கண்ணீல் படும்படி வைத்திருந்தாள். ” லலிதா நீ தினமும் ஒரு மணி நேரம் ஆவது சதீஷுடன் இருக்கவேண்டும். தினமும் போட்டொ ஆல்பத்தை அவனிடம் காட்டி அவனை அவன் குழந்தைக் காலத்திற்கு கொண்டு செல்லவேண்டும். அவன் உன்னுடனும் பாட்டியுடனும் கழித்த நிகழ்வுகளை நினைவுப்படுத்தி அவனை அவனுடைய குழந்தை காலத்திற்கு கொண்டு செல்லவேண்டும். அப்படி செய்யும்போது வித்யாவின் நடத்தையினால் அவனுக்கு ஏற்பட்ட கசப்பான நினவுகளை மறக்கச் செய்ய வேண்டும். சில மாதங்களில் அவன் அவனுடைய கசப்பான நிகழ்வுகளை மறந்து அவனுடைய மன நிலைமை மாறுபடும். அதற்கு ஒரு காலக்கெடு இல்லை. ஆறு மாதமும் ஆகலாம், ஒரு வருஷமும் ஆகலாம். எல்லாம் உன்னுடைய கையில் தான் இருக்கிறது. பாசத்தினால் அவனை ஒரு நல்ல நிலைமைக்கு கொண்டு வரவேண்டியது உன்னுடைய பொறுப்பு. அவனுடைய மனநிலை நார்மல் ஆகிறவரைக்கும் சுந்தரும் வித்யாவும் சிங்கப்பூரில் தான் இருக்கவேண்டும். இந்த விஷயத்தை நான் சுந்தரிடமும் வித்யாவிடமும் சொல்லிவிட்டேன். நீயும் வித்யாவிடம் ஒரு தரம் கூட சொல்லிவிடு.” என்று ரமணி சொல்லவே ல்லிதாவும் “ நீஙக கவலையே படாதேங்கோ. அவனுடைய மன்நிலையை சரியாக்குவது என்னுடைய பொறுப்பு “ என்று சொன்னாள்.

சுந்தரும் வித்யாவும் சென்று இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட்து. ல்லிதா வுடனும் ரமணியுடனும் இருந்து படித்த சதீஷ் ரமணியின் சைகாலஜிகல் அணுகுமுறையாலும் ல்லிதாவின் பாசம் கலந்த அன்பினாலும் நன்றாக மாறிவிட்டான். படிப்பிலும் நல்ல கவன்ம் செலுத்தி முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றான். படிப்படியாக வித்யாவின் மேலுள்ள வெறுப்பு அகலத்துடங்கியது’ ரமேஷும் சதீஷுடன் வாரா வாரம் ஸ்கைப்ப்பில் பேசி அவனை ஊக்குவித்து GRE ப்ரீ‌ஷை எழுதுவதற்கு தையார் செய்தான். சதீஷும் நன்றாக படித்து GRE பரீஷையிலும் நல்ல மதிப்பெண் பெற்றான். முதல் முறையாக சுந்தருக்கும் வித்யாவுக்கும் ஈமயிலில் ” டீயர் அப்பா அண்ட் அம்மா “ என்று ஒரு லெட்டர் எழுதினான். அதை அனுப்புவதற்கு முன் ல்லிதாவிடம் காட்டிவிட்டு அனுப்பினான். அந்த மெயிலை பார்த்துவிட்டு வித்யா போன் பண்ணி “ லலிதா அக்கா ” சதீஷின் மெயிலை பார்த்த்துமே நான் ஆனந்த கண்னீர் விட்டேன். அந்த பகவான் என்னை கைவிடவில்லை. உன்னுடைய ரூபத்தில் வந்து என்னுடைய வயிற்றில் பாலை வார்த்தார். சுந்தர் அந்த மெயிலின் ஹார்டு காப்பி எடுத்து கிச்சனில் லாமினேட் பண்ணி மாட்டியிருக்கிறார். தினமும் ஒரு முறையாவது அதை பார்த்து பார்த்து சந்தோஷப்படுவேன். உனக்கு ரொம்ப நன்றி. நீயும் ரமணியும் நாஙக என்றைக்கு வரவேண்டும் என்று சொல்லுங்கோ. அடுத்த நாளே நாஙக பாம்பேயில் இருப்போம். எங்க இரண்டு பேருக்கும் சதீஷை பார்க்கணம் என்று மனது அடித்துக்கொள்கிறது “ என்று சொன்னாள்.

ஒரு நாள் ராத்திரி ரமேஷிடம் ஸ்கைப்பில் பேசிவிட்டு நானும் ரமணியும் சதீஷும் பேசிக்கொண்டிருந்தோம். சதீஷ் “ ஆன்டீ எனக்கு அம்மாவிடமும் அப்பாவிடமும் ஸ்கைப்பில் பேசணம் என்று ஆசையாக இருக்கு. நீங்க அம்மாவுக்கு போன் பண்ணி அங்குள்ள கம்ப்யூடெரில் ஸ்கைப்பை வெப்காமுடன் இன்ஸ்டால் பண்ணச் சொல்லுங்கோ ” என்று சொல்லவே லலிதா ந்ள்ளிரவு என்றும் பாராமல், வித்யாவுக்கு போன் பண்னி சதீஷ் சொன்னதை சொன்னாள். சுந்தர் “ நாளைக்கே வெப்காம் வாங்கி ஸ்கைப்பை இன்ஸ்டால் பண்ணிவிட்டு நானே ராத்திரி கூப்பிடுகிறேன் “ என்று சொன்னதை சதீஷும் ஸ்பீக்கர் போனில் கேட்டான் அவனுடைய முகத்தில் ஒரு புன்சிரிப்பை கவனிக்க லலிதாவும் ரமணியும் தவறவில்லை. வாரம் இரு முறை சதீஷ் சுந்தரிடமும் வித்யாவிடமும் ஸ்கைப்பில் பேசத் துவங்கினான். எல்லாம் நன்றாகவே நடந்து கொண்டிருந்த்து. ரமணியும் சதீஷும் அவனுடைய போஸ்ட் க்ராஜுவேட் படிப்பை எங்கு படிக்கணம் என்று டிஸ்கஸ் பண்ணிக் கொண்டிருந்தனர். ” அங்கிள் ரமேஷ் அண்ணாவிற்கு இதைப் பற்றிப் போனவாரம் மெயில் அனுப்பியிருந்தேன். அண்ணா அமெரிக்காவிலும் கானடாவிலும் உள்ள சில ஃபேமஸ் யூனிவேர்சிட்டியின் பெயரை அனுப்புகிறேன் என்று சொல்லியிருக்கான். அது வந்ததற்கு அப்புறம் நாமே டிசைட் பண்ணறோம். அதற்கு முன் அம்மா அப்பாவை மும்பைக்கு வரச் சொல்லுங்கோ. அப்பாவிடமும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம். அப்பா வேண்டாம் என்று சொல்லமாட்டார். நான் அமெரிக்கா போவதற்கு முன் அம்மா அப்பாவுடன் கொஞ்ச நாள் இருக்கணம் என்று ஆசைப்படுகிறேன் “ என்று சொன்னான். ரமணி லலிதாவை பார்த்து “ சதீஷ் இப்பொ பெர்ஃபெக்டிலி ஒ.கே. நாளைக்கே சுந்தருக்கும் வித்யாவுக்கும் போன் பண்னி எவ்வளவு சீக்கிரம் மும்பை வரமுடியுமோ அவ்வளவு சீக்கிறம் வரச்சொல்லு “ என்று சொன்னவுடன் அந்த சந்தோஷமான விஷயத்தை வித்யாவிடம் சொல்ல ல்லிதா உடனே போன் பண்ணினாள். ரமணி வித்யாவுக்கும் சுந்தருக்கும் ஒரு எஸ்.எம்.எஸ் அனுப்பினான். “ தெ ஹார்ஸ் இஸ் பெர்ஃபெக்ட்லி ஓ.கே. ரெடி ஃபார் தி ரேஸ். பட் டோண்ட் இன்ஸிஸ்ட் ஆன் வின்னிங் தெ ரேஸ். ஹார்ஸ் இஸ் மோர் இம்பார்டெண்ட் தான் தெ ரேஸ் “ அடுத்த சில நிமிஷஙகளில் ரமணியின் மொபைலில் சுந்தரின் பதில் வந்த்து “ தாங்ஸ் ஃபார் தெ குட் நியூஸ். வில் பி இன் மும்பை டே ஆஃப்டர் டுமாரோ மார்னிங் கம் டு தெ ஏர்போர்ட் வித் சதீஷ் “

.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “குதிரையா??? பந்தயமா???

  1. மனித மனம் என்பது எவ்வளவு வலிமையானதோ அந்த அளவுக்கு மென்மையானதும் கூட. இதை உணராமல், குழந்தைகளை ஆட்டிப்படைக்கும் பெற்றோர் அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய கதை.

    வாழ்த்துக்கள்.

  2. very good and practical story to be followed in real life by perents

Leave a Reply

Your email address will not be published.