தமிழ்த்தேனீ

சமீபத்தில் ஒரு பெண்மணி மிகவும் ஆசைப்பட்டு முருங்கைக்காய் சாம்பார் ஊற்றிக்கொண்டு உணவை அள்ளி விழுங்க ஆரம்பித்தாள், அந்தப் பெண்மணிக்கு முருங்கைக்காய் மிகவும் பிடிக்கும் போல இருக்கிறது, திடீரென்று புரைக்கேறியது அவருக்கு, மூச்சுவிடக்கூட முடியாமல் தவித்தாள் அவருடைய உறவினர்கள் மிகவும் பயந்துபோய் அந்தப் பெண்மணியை ஒரு மருத்துவரிடம் அழைத்துப் போனார்கள்,அந்த மருத்துவர் அவரை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்த்து ஆராய்ந்தார் ,,அப்போது அவர் கண்ட உண்மையைக் கூறினார்

அந்தப் பெண்மணி முருங்கைக் காயைக் கடித்து உண்ணும்போது அந்த முருங்கைக்காயின் சக்கை அந்தப் பெண்மணியின் தொண்டை வழியாக உள்ளே சென்று விட்டது,அப்படி உள்ளே செல்லும்போது உணவுக்குழாயை கிழித்துக்கொண்டு சென்று விட்டது,அந்தச் சக்கை உணவுக்குழாயில் மாட்டிக்கொள்ளவில்லை அப்படி மாட்டிக்கொண்டிருந்தால் மூச்சுத்திணறி இறந்திருப்பார் என்றார்

உணவு மனிதரின் உறுப்புகளையும், மனதையும், உணர்வுகளையும் அனைத்தையுமே பாதுகாக்க,அல்லது சீரழிக்க வல்லது சரியாக தேர்ந்தெடுக்காவிட்டால் என்பது உண்மை. அதுமட்டுமல்ல நன்றாக மென்று நிதானமாக உண்ணவேண்டும்
நல்லவேளை சரியான நேரத்தில் மருத்துவரிடம் அழைத்துப் போனதால் அந்தப் பெண்மணிக்கு முதலுதவி செய்து காப்பாற்றியிருக்கிறார்கள்,ஆனால் ஒரு வாரத்துக்கு அந்தப் பெண்மணியால் பேசக்கூட முடியவில்லை இப்படியும் நடக்குமோ,

எவ்வளவு பெரிய மீனாயிருந்தாலும் சிறு புழுவுக்கு ஆசைப்பட்டு வலையில் மாட்டிக்கொள்கிறது மனிதர்கள் அதே மீனை உண்ணும்போது அந்த மீனின் உடலில் இருக்கும் செதிள், அல்லது முள் தொண்டையில் மாட்டிக்கொண்டு அவதிப்படுகிறார்கள்.

ஆமை தன் தலையையும் கால்களையும் சேர்த்து தன் ஓட்டுக்குள் அடக்கியவுடன், சிங்கமே அதனிடம் தோற்றுப் போகிறது, அந்த ஆமையை இரையாக உண்ண முடியாமல் சிங்கம் தலை குனிந்து வெறுத்துப்போய் விலகுகிறது, இதைத்தான் பெரியவர்கள் ஐம்புலன்களை யாரால் அடக்கி ஆளமுடியுமோ அவனிடம் மற்ற தீயவை தோற்றுப் போகும் என்று சொல்லி இருக்கிறார்கள்

ஆனால் அதே சிங்கம் முள்ளம் பன்றியை இரையாகப் பிடித்து உண்ண முயலும் போது அந்த முள்ளம் பன்றியின் முட்களை தன் வாயால் கவ்விக் களைந்து விட்டு அந்த முள்ளம் பன்றியின் உடலைச் சுவைக்கிறது, ஆனாலும் சிங்கத்தின் வாயிலும் குருதி வழிகிறது அந்தக் குருதி முள்ளம் பன்றியுடையதா அல்லது முள்ளம்பன்றியின் முள் கிழித்ததால் சிங்கத்தின் வாயில் ஏற்பட்ட காயத்தால் வருகிறதா என்று கூர்ந்து பார்த்தால் முள்ளம் பன்றியின் உடலிலிருந்து வெளிவரும் குருதியை விட அதிகமாய் சிங்கத்தின் வாய் கிழி,ந்து வெளிவரும் குருதியே அதிகமெனத் தோன்றுகிறது , தவறான இரையை தேர்ந்தெடுத்ததன் விளைவு இது

இப்படிப்பட்ட அவதிகள் தேவையா என்று தோன்றுகிறது, நாமும் பல நேரங்களில் தேர்ந்தெடுக்கும்போது கவனமில்லாமல் இருந்துவிட்டு பல நிகழ்வுகளில் விலகவும் முடியாமல் அனுபவிக்கவும் முடியாமல் அவதிப்படுகிறோம்

ஆகவே நாம் தேர்ந்தெடுக்கும் இரை அல்லது இறை இரண்டுமே நமக்கு காயங்களை ,பாதிப்புகளை ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் அல்லவா? நாம் தேர்ந்தெடுக்கும் போதே தீய உணவுகளை, தீய சக்திகளை தேர்ந்தெடுக்காமல், நல்ல உணவுகளையும் நல்ல சக்தியையும் தேர்ந்தெடுக்கவேண்டும். என்னும் பாடத்தை இந்த நிகழ்ச்சியின் மூலமாக நாம் தெரிந்துகொள்கிறோம்

ஒவ்வொரு நடப்பும் நமக்கு ஒரு அனுபவத்தையும் அறிவையும் போதிக்கிறது

http://mmzh786.hubpages.com/hub/Drum-stick

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க