வல்லமை நிர்வாகக் குழுவில் மாற்றங்கள்
அண்ணாகண்ணன்
மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தில், வல்லமை நிர்வாகக் குழுவை மீண்டும் மறுசீரமைக்கிறோம்.
2011ஆம் ஆண்டு, நம்முடன் இணைந்திருந்த ஸ்ரீஜா வெங்கடேஷ், தமிழ்ச்செல்வி, விழியன், பட்டர்ஃபிளை சூர்யா ஆகியோர், வேறு பணிகள் காரணமாக வல்லமையிலிருந்து விடைபெறுகிறார்கள். அவர்களின் பணிகளுக்கு நன்றி பாராட்டி, அவர்களை வாழ்த்தி வழியனுப்பி வைக்கிறோம்.
இத்தருணத்தில், திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன், தி.ந. இளங்கோவன் ஆகியோர் நமது ஆசிரியர் குழுவில் இணைந்துள்ளார்கள்.
திருமதி காயத்ரி பாலசுப்ரமணியன், புதுச்சேரியில் வசிப்பவர். ஜோதிடத்தைப் பாரம்பரியமாகக் கொண்டவர். தாவரவியலில் இளங்கலைப் பட்டமும் இதழியலில் முதுகலைப் பட்டயமும் பெற்றவர். திருவாவடுதுறை ஆதீன மடத்திலிருந்து சித்தாந்த ரத்னம், சித்தாந்த நன்மணி ஆகிய சான்றிதழ்ப் படிப்புகளில் தேர்ச்சி பெற்றவர். கவிதைகளில் நாட்டம் கொண்டவர். ஆங்கிலத்திலும் எழுத வல்லவர்.
தி.ந. இளங்கோவன், சென்னையில் வசிப்பவர். எந்திரப் பொறியியலில் பட்டமும் பட்டயமும் பெற்றவர். BHEL நிறுவனத்தில் 25 ஆண்டுகள் பணியாற்றிய பிறகு, இப்போது தனியார் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மதம் கடந்த மனித ஒற்றுமை, பெண் விடுதலை, உழைப்பின் உயர்வு ஆகிய சிறந்த இலக்குகளைக் கொண்டவர். இவரது சிறுகதைகள், குங்குமம், ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்துள்ளன.
வல்லமை நிர்வாகக் குழுவில் இணையும் இந்த இருவரையும் உளமார வாழ்த்தி, வரவேற்கிறோம்.
வல்லமையின் புதிய நிர்வாகக் குழு – 2012
puthiya nivaaga kuluvitkku vazthukkal.