இணையப் பயன்பாடு – கட்டுரைப் போட்டி
வல்லமை மின்னிதழின் மூன்றாம் ஆண்டுத் தொடக்கத்தை முன்னிட்டு, கட்டுரைப் போட்டி ஒன்றை அறிவிக்கிறோம். அது தொடர்பான விவரங்கள் இங்கே:
தலைப்பு: இணையத்தைச் சிறப்பாகப் பயன்படுத்துவது எப்படி?
பக்க அளவு: இல்லை
கால அளவு: 2012 மே 16 முதல் ஜூன் 16க்குள் அனுப்ப வேண்டும். *
விதிகள்:
கட்டுரைகள் எளிய தமிழில் அமைய வேண்டும். தக்க சான்றுகள், சுட்டிகள், படங்கள் ஆகியவற்றை இணைக்கலாம்.
போட்டிக்கு வரும் படைப்புகள், வல்லமை மின்னிதழில் வெளியாகும்.
சிறந்த ஒரு படைப்புக்கு ரூ.1000 மதிப்புள்ள நூல்கள் பரிசாக வழங்கப்படும். பரிசு பெறுபவர், இந்தியாவுக்கு வெளியில் இருந்தால், அவர் அளிக்கும் இந்திய முகவரிக்கு நூல்களை அனுப்புவோம்.
வல்லமை ஆசிரியர் குழுவின் முடிவே இறுதியானது.
பரிசுகளை வழங்குபவர்: இன்னம்பூரான்
கட்டுரைகளை அனுப்ப வேண்டிய முகவரி: vallamaieditor@gmail.com
===============================================
பி.கு. வல்லமை அன்பர்களின் வசதிக்காக, போட்டிக்கான கால அவகாசம் மேலும் ஒரு மாதம் (16-07-2012 வரை) நீட்டிக்கப்படுகிறது. ஆர்வலர்களின் பங்கேற்பை பெருமளவில் வரவேற்கிறோம்.