காதல் யானை!
நீண்ட சந்திப்பிற்கும், நீண்ட தேடலுக்கும் பின்
அங்கீகரிக்கப்பட்ட என் காதல் நினைவுகளை நீ
ஒய்யாரமாய் அம்பாரி மேல் ஏற்றி பவனி வரச் செய்தாய்.
தவற விட்ட உன் நினைவுகளை நான் தேடும் போது,
” தவிக்கிறாய், குருடன் யானையைத் தடவுவது போல்” என்றாய்.
கூர்ந்து உனை நோக்கும் பொழுதுகளில், கிண்டலாக நீ.
“யானை போல், நோக்கி கண் சிறுத்து விடப்போகிறது” என்றாய்.
அப்போதெல்லாம் நம் காதலை நீ மட்டுமே
யானை போன்றதென்று ஆணித்தரமாய் அங்கீகரித்தாய்.
நீ பிரிந்தபின், அசையும் போதெல்லாம் நம் நினைவுகள்
எனைத் தின்று கொண்டிருக்கின்ற போதில் நானும் அங்கீகரிக்கிறேன்
ஆம் நம் காதல் யானைதான் என்று!
படத்திற்கு நன்றி
http://www.worldofstock.com/stock-photos/portrait-of-african-elephant-covered-in-red/NAN4774
asaindhu thinnum ninaivuhal