இலக்கியம்கவிதைகள்

குறுஞ்சிரிப்பு

உமாமோகன்

விரைந்து கொண்டிருந்த
வாகனத்தை
ஓரம் நிறுத்தி
அவசரமாக
அலைபேசி எடுத்தான்….
உதடுவிரிந்த புன்னகையொன்றைச்
சிந்தினான்
எதையோ வாசித்து …..
தனித்த புன்னகையின்
கூச்சம் உணர்ந்து
வேகமெடுத்துப் போய்விட்ட
அவனை மகிழ்வித்த
குறுஞ்செய்தி
நண்பனின் கிண்டல்?
காதலியின் பகிர்வு?
ஏதேனும் வெற்றி ?
என் கேள்விக்கு
விடை சொல்லத் தெரியவில்லை
பாதையோரம்
சிந்திக் கிடந்த
அவன் புன்னகைக்கு….

படத்திற்கு நன்றி
http://www.guardian.co.uk/society/joepublic/2011/apr/12/let-the-happiness-in-action-for-happiness

                                             
   

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

  1. Avatar

    வாவ்..புன்னகையை மொழி பெயர்த்தது உங்கள் கவிதை..

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க