நியூட்டனின் மூன்றாம் விதி

2

குமரி எஸ். நீலகண்டன்
Kumari S Neelakandan
*ஒரு சர்ச்சையின் பின்
நெடுநாள்கள் கழித்து
நண்பர்கள் இருவரும்
வழியில் சந்தித்தனர்.

*தயக்கத்துடன்
அவன் சிரித்தான்.
கண்கள் சிரித்தன.
உதடுகள் சிரிக்கவில்லை.

எதிர் வினை –
இரண்டாமவரின்
கண்கள் மட்டும்
சிரிக்கலாம்.
கண்களோடு உதடுகளும்
சிரிக்கலாம்.

*வெப்பம் படர்ந்த
அவனது கண்கள்
சிரிக்கவில்லை.
உதடுகள் மட்டும்
சிரித்தன.

எதிர் வினை –
இரண்டாமவரின்
உதடுகள்  மட்டும்
சிரிக்கலாம் அல்லது
உதடுகள் தட்டி
உணர்வுகளை எழுப்பலாம்

*கனிவுடன்
கண்களோடு உதடுகளும்
சிரித்தன.

எதிர் வினை –
பௌர்ணமி நிலவில்
பரந்த வானமாய்
உடல் முழுக்க
பரவசிக்கலாம்.

*மௌனமாய் இருந்தான்

எதிர் வினை –
அங்கொரு குறைந்த
காற்றழுத்த மண்டலம்
உருவாகி அதுவே
பெருத்த புயலின்
மையமாகலாம்
மழையும் பெய்யலாம்.

பிழையான மழையால்
மௌனம்
ஒரு மயானத்தையும்
உருவாக்கலாம்.

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “நியூட்டனின் மூன்றாம் விதி

 1. //அங்கொரு குறைந்த
  காற்றழுத்த மண்டலம்
  உருவாகி அதுவே
  பெருத்தப் புயலின்
  மையமாகலாம்//

  அருமை.

  நிதர்சனத்தை அழுத்தமாகச் சொல்லி முடித்துள்ளீர்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *