சாந்தி மாரியப்பன்

மணிக்கொருதரம் உற்று நோக்குகிறேன்
ஆழ்ந்துறங்கும் அந்த முகத்தை.
‘மூச்சு சீராக வருகிறது’.. எனக்கும்.
கதகதப்பான
கை தேடிப்பற்றிக்கொள்கிறேன்
நடை பழகச்சொல்லித்தந்த
அந்தச் சுட்டு விரலை.
உடல் புரளும் சிறு சலனத்திற்கும்
குடல் புரண்டுப் பதறியெழுமெனக்குப்
பரிசாய்த்தருகிறார்
வாஞ்சையுடன் ஒரு தலை கோதலை
என் தகப்பன்,
நண்பனின் தந்தைக்கு
இறுதியாய் விடை கொடுத்து
நான் வீடேகிய அந்த இரவில்..

படத்திற்கு நன்றி:http://amog.com/health/myths-sleeping-insomnia

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “அந்த இரவில்

 1. வாய் திறக்கவில்லை மகனும், தந்தையும்..ஆனாலும், உணர்வுக் குவியலாய் உங்கள் கவிதை..நன்று!

 2. இடியாய் இறங்கிய கடைசி வரி…..
  மரணம் கற்பிக்கும் பாடமும் கூடவே இறங்கியது மனதுக்குள்.
  வாழ்த்துக்கள்.

 3. இன்னொருவரின் இழப்பின்போதுதானே, நம் தந்தையையும் ஒரு நாள் இழக்க நேரிடுமே என்ற தவிப்பு அதிகமாகிறது.

  வாசித்தமைக்கு நன்றி இளங்கோ,
  புவனா ஞானசெல்வம்..

 4. உண்மையான வரிகள். சாந்திமா. இழந்த பிறகு வருந்தாமல் இருக்கும் நாட்களை வளமாக வைத்துக் கொள்வோம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *