செண்பக ஜெகதீசன்
நேருமகான் சொன்னார்,
நமது எதிரி சோம்பேறித்தனம்..
நேசி நீ எதிரியையும் என்றார்
தேசப்பிதா..
தெரிந்து சொல்,
எதை எடுத்துக்கொள்வது-
வந்தது முதலில் சந்தேகம்
இந்தியக் குடிமகனுக்கு..
இப்போது,
எடுத்துக்கொண்டான் இரண்டையும்-
எதிரியை நேசிக்கிறான்…!
பதிவாசிரியரைப் பற்றி
இதுவரை: இரைதேடுவதுடன் இறையும் தேடிய அரசுப்பணி
(நிர்வாக அதிகாரி-நெல்லையப்பர் திருக்கோவில்).
இப்போது: மேலாளர், காசித்திருமடம், ஆச்சிரமம்(சுசீந்திரம்).
ஓய்வுநேரப் பணிகள்: ரசனை(இயற்கை, இலக்கியம்),
எழுத்துப் பணிகள் (பெரும்பாலும் கவிதைகள்)…
கவிதை நூல்கள்-6..
வலைதளங்கள்: வார்ப்பு, திண்ணை,
நந்தலாலா, வல்லமை, முத்துக்கமலம்…