ஆயிரம் நட்சத்திரவிருந்து!

2

 

ஷைலஜா

பனிக்குடம் உடையும்வரை

தனியொருத்தியாயிருந்தவள்
சேயொன்று காலடியில்விழ
தாயாகிப்பேர்கொண்டேன்
மாயம்போல் மேனி
மாறக்கண்டேன்

மிருதுவான இறகுகளில்
மெத்தைஒன்று செய்தாற்போல்
அருகினிலே சிறுபுதையல்
அள்ளி எடுக்கையிலே
அற்புதமாய்த்தான் உணர்ந்தேன்

மடியைச்சுரக்க வைக்கும் மந்திரமோ
அடிப்பெண்ணே உன்குரல்தான்
கண்ணுக்குதெரியாத
கருணைஉணர்வதனை
பாலாக்கித்தரவைக்கும்
பாக்கியத்தை அளித்தாயே

குழந்தைக்கு தாய் தரும்
முதல் சீதனம்
இதுவே இயற்கையின்
பெரும் நூதனம்!

ஐந்துநட்சத்திரத்தை
அற்பமாக்கும்
ஆயிரம் நட்சத்திர
விருந்து இது!

ஜூன் 1 அகில உலக குழந்தைகள் தினம்.

படத்திற்கு நன்றி:

http://pregnancy.about.com/od/feedingyourbaby/ig/Breastfeeding-Gallery/Side-Lying—Nursing.htm

 

பதிவாசிரியரைப் பற்றி

2 thoughts on “ஆயிரம் நட்சத்திரவிருந்து!

  1. குழந்தை பெற்றவுடன் பெண்ணிண் முகத்தில் தெரியும் பூரிப்பும், பெருமையும் முழுமையாக பரிமளிக்கும் கவிதை.. வாழ்த்துக்கள்

  2. தாய்மையின் பெருமை கூறும் கவிதைகள் பல வாசித்திருக்கிறேன். உங்கள் கவிதை சற்று வித்தியாசமாகவே உள்ளது. வாழ்த்துக்கள்.
    முகில் தினகரன்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *