மூத்த பத்திரிக்கையாளர் – எழுத்தாளர் சோலை மரணம்

 

எழுத்தாளரும், மூத்த பத்திரிகையாளருமான 82 வயதான, திரு.சோலை, சென்ற செவ்வாய் (மே, 28, 2012) இரவு சென்னையில் காலமானார்.

திண்டுக்கல் அருகேயுள்ள அய்யம்பாளையம் என்ற ஊரைச் சேர்ந்த எழுத்தாளர் சோலையின் இயற்பெயர் கே.சோமசுந்தரம். பல்வேறு பத்திரிகைகளிலும், வார இதழ்களிலும் பணியாற்றியவர் இவர். கடந்த 2 மாதமாக உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தார். சென்னை தாம்பரத்தையடுத்த பெருங்களத்தூர், தொல்காப்பியர் தெருவில் உள்ள அவரது வீட்டில் சிகிச்சை பெற்று வந்த சோலை, செவ்வாயன்று இரவு 8.25 மணிக்கு காலமானார்.

மறைந்த எழுத்தாளர் சோலைக்கு, சரோஜா என்ற மனைவியும், 3 மகன்கள், இரண்டு மகள்களும் உள்ளனர். அவர்களுக்கு வல்லமை மின்னிதழ் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கிறோம்.  அவருடைய ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க