தமிழகப் பெண்களின் சாதனைப் பரல்கள் (12)

0

 

தி.சுபாஷிணி

டி.வி.எஸ். சௌந்தரம்மாள்
(1905-1984)

தொழில் மேதை டி.வி.சுந்தரம் ஐயங்காருக்கும் சமூகசேவை மூலம் புகழ்பெற்ற இலட்சுமி அம்மாளுக்கும் மகளாய்ப் பிறந்தவர் சௌந்தரம் அம்மையார். அக்கால வழக்கப்படி இவருக்குச் சிறு வயதில் திருமணம் முடித்தனர் இவருடைய பெற்றோர். தம் கணவர் டாக்டர் சவுந்தரராஜனுடன் 1925இல் மக்களைத் தாக்கிய போலியோ பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இரவு பகல் பாராது சேவை செய்தார். இதன் விளைவாக இவருடைய கணவர் இந்த நோயால் தாக்கப்பட்டு இறந்தார். இவரது கணவரின் வேண்டுகோளுக்கிணங்க, சௌந்தரம்மாள் கல்வி கற்கத் தொடங்கி டெல்லியில் மருத்துவப் பட்டம் பெற்றார். படிக்குங் காலத்தில், கல்லூரிக்கு அருகிலுள்ள ஏழைகளுக்கு மருத்துவ உதவி மற்றும் கல்விக்கும் உதவி செய்தார். காந்திய சிந்தனைகளில் மனம் கவரப்பட்டு, அன்னியத்துணி பகிஷ்கரிப்பு, கள்ளுக்கடை மறியல் ஆகிய போராட்டங்களில் ஈடுபட்டார்.

1930இல் மதுரை உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டதால் கைது செய்யப்பட்டார். இவர் காந்தியடிகள், கஸ்தூரிபாய் அவர்கள் தலைமையில் கல்வியாளர் திரு.இராமச்சந்திரனை மணம் புரிந்து கொண்டார். பின் இருவரும் இணைந்து சேவையில் ஈடுபட்டனர். இருவரின் உழைப்பில் மலர்ந்ததுதான் காந்திகிராமம்.

1947இல் தொடக்கப்பள்ளி, கிராம சேவிகா பயிற்சிப்பள்ளி, ஒரு கிராம மருத்துவ விடுதியுடன் தொடங்கப்பட்ட இந்த காந்தி கிராமம், தற்போது ஒரு பெரிய பல்கலைக்கழகமாக வளர்ந்து நிற்கிறது. 1962இல் இந்திய அரசு ‘பத்மவிபூஷண்’ விருது இவருக்கு வழங்கி மகிழ்ந்தது.

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.