மறவன்புலவு க. சச்சிதானந்தன்

(முருகன் மூலவராக வீற்றிருக்கும் கோயில்கள் 21 நாடுகளில் உள. இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா ஆகிய 4 நாடுகளில் உள்ள முருகன் கோயில்களின் விவரம் கீழில்லை.)

உலகம் உவக்கிறது. முருகா எனச் சொல்லி உவக்கிறது. கிழக்கு மேற்காக, வடக்குத் தெற்காகப் பாரெங்கும் நீக்கமற ஒலிக்கிற சொல் முருகா.

ஞாயிறு கிழக்கில் தெரிந்தால் உலகம் உவக்கிறது. இயக்கத்தின் ஆற்றலே ஞாயிறு தரும் ஒளிக்கதிர்கள் அல்லவா.

முருகா என்ற சொல் உள்ளத்தில் உற்சாகத்தைத் தருகிறது, நம்பிக்கையைப் பெருக்குகிறது. உலகத்தார் உவக்கின்றனர்.

தென்னாபிரிக்காவிலும் மொரிசியசிலும் இறியூனியனிலும் கறுப்பர் உவப்பர்.

மலேசியாவிலும் சிங்கப்பூரிலும் சீனரும் மலாயரும் உவப்பர்.

மியம்மாவில் பர்மியர் உவப்பர்.

மேடானில் இந்தோனேசியர் உவப்பர்.

ஐரோப்பாவில் வட அமெரிக்காவில் வெள்ளையர் உவப்பர்.

இலங்கையில் சிங்களவர் உவப்பர்.

இருசிகேசத்தில் வடஇந்தியர், தில்லியில் பல்லின இந்தியர், மும்பையில் மராட்டியர், கொல்கத்தாவில் வங்களியர், ஆந்திரத்தில் தெலுங்கர், கேரளத்தில் மலையாளிகள், கார்நாட்டில் கன்னடத்தார் என இந்தியர் யாவரும் உவப்பர்.

ஆத்திரேலியாவில் நியூசிலாந்தில் பிசியில் அவ்வவ் நாட்டுப் பழங்குடியினர் உவப்பர்.

உலகெங்கும் 54 நாடுகளில் வாழும் தமிழர், தம் ஊனுடம்பாகிய ஆலயத்தில், உள்ளமாகிய பெருங்கோயிலில் முருகனை ஓயாது உவப்பர்.

எனவேயன்றோ நக்கீரர் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே உலகம் உவப்ப எனத் திருமுருகாற்றுப்படை (11ஆம் திருமுறை) யைத் தொடக்கினார்.

எனவேயன்றோ அனைத்துலக முருக பக்தி மாநாட்டை மலேசியா, குவாலாலம்பூர், திருவாக்குத் திருபீடத்துச் சுவாமி பாலயோகி அவர்கள் 2012இல் சிறப்பாக நடாத்துகிறார்கள்!

தமிழரின் பயணங்கள் முருகா என்ற சொல்லுடன் தொடங்குகின்றன. எங்கெங்கு பயணித்தாலும் அவர்களுடன் முருகனும் பயணிக்கிறான்.

முருக வழிபாட்டுடன் உலகின் காலை விடிகிறது.

நாள் விடிவதே பசிபிக் கடலில் அல்லவா? நாள் மாறும் கோடு அங்கே உள்ளதே! விடியும்பொழுதே முருகனுடன் விடிவதால் உலகம் உவந்து ஒவ்வொரு நாளையும் வரவேற்கிறது.

பிஜி-நாள்மாறும் கோட்டுக்கு மிக அருகில் உள்ள நாடு பிஜி. கடந்த நூறாண்டுகளாக முருகனுக்கு அங்கே கோயில். சிவசுப்பிரமணியசுவாமி கோயில். கட்டிய பெருமக்கள் தமிழ்ப் பெருமக்கள்.

தெற்கு மாகடலுக்கு நடுவே கோயில். கரும்புத் தோட்டத்திலே கோயில்.  தமிழகத்திலிருந்து நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன்னர் சென்றோர் கட்டிய கோயில். கரும்புத் தோட்டத்திலே அவர் கால்களும் கைகளும் சோர்ந்த பொழுதெல்லாம் முருகா முருகா என அழைத்தனரே.

பூமியின் தென்பாதியில், நாளின் தொடக்க காலத்தில் அருள்மிகு சிவசுப்பிரமணிய சுவாமி கோயில். பிஜி நாட்டு நந்தி ஊரில் இன்று மிக அழகான திராவிடச் சிற்பக் கலைக்கோயில். Arulmiku Siva Subramaniya Temple, Nadi, Fiji.

நியூசிலாந்து

பூமி சுழல, சூரியனை வரவேற்கிறார்  நியுசீலாந்தின் முருகன். கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு ஈழத்தின் முருகனடியார்கள் ஆயிரக் கணக்கானோர் புகலிடம் தேடிய நாடு நியூசிலாந்து. அங்கே முருகனுக்கு இரு கோயில்கள். (1). Arulmiku Thirumurugan Temple, 174 A, Marua Court, Marua Road, Ellerslie, Auckland, New Zealand

 

(2). Arulmiku Kurinji Kumaran Temple, 1, Batchelor Street, Newlands, Wellington, New Zealand. Ph: (0064) (04) 477 4346 

ஆத்திரேலியா

ஆத்திரேலியாவின் விக்டோறியா மாநிலத்தில், மெல்போர்ண் நகரில் காலை வழிபாடு அருள்மிகு  முருகன் கோயிலில். Arulmiku Melbourne Murugan Temple, 17-19 Knight Ave., Sunshine VIC 3020. Ph: 03 9310 9026

நியூ சவுத்வேலசு மாநிலத்தில், சிட்னி அடியார்கள் மிகச் சிறப்பாக, வைகாசிக் குன்றில் முருகனுக்குக் கோயில் அமைத்துள்ளனர். Arulmiku Sydney Murugan Temple, 217 Great Western Hwy, Mays Hill, Sydney NSW 2145, Ph.: 02 687 1695, Fax: 02 9687 8907, email: winnerbal@hotmail.com, <http://www.tamilnet.net.au/sydmurugan/index.html>

 

ஆத்திரேலியத் தலைநகர் கான்பெராவில் முருகன் கோயிலில் அடியார் கூடுவர். Arulmiku Murugan Temple, 151 Beasley Street, Torrens, Canberra.

தெற்கு ஆத்திரேயியாவில், அடிலாயிடு  நகரில் முருகனுக்குத் தனிக்கோயில் உண்டு.

மேற்கு ஆத்திரேலியாவில் அருள்மிகு பாலமுருகன் எழுந்தருளி அருள்பாலிக்கிறார். Arulmiku Bala Murugan Temple, 12 Mandogalup Road, Mandogalup WA, Ph: 08 9437 9995.

வியத்நாம்

வியத்நாம் தமிழர்கள் முருகனுக்கு இரு கோயில்களைத் தாம் வாழ்ந்த அன்றைய சைகோன், இன்றைய ஓசிமின்நகரில் அமைத்தனர். போருக்குப் பின்னர் அக்கோயில்களைத் தமிழ் வழக்குத் தெரியாத வியத்நாமியர் பேணுகின்றனர்.

தமிழரான இராமசாமிக்கும் வியத்நாமியத் தாயாருக்கும் பிறந்த இராமசயனா, இலட்சுமி. சீதை ஆகிய மூவரும் பேணி வரும் கோயில் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயில். Arulmiku Subramaian Temple 98, Nam Ky Khor Nglina Street, District 1, Ho Chi Minh City.

சுப்பையாச் செட்டியாருக்கும் உமையாளுக்கும் பிறந்தவர் பழநிவேலு. வியத்நாமியத் தாயாருக்கும் பழநிவேலுவுக்கும் பிறந்தோர் முத்தையா, அருணாசலம், சுப்பிரமணியம். இவர்கள் பேணி வருவது அருள்மிகு தண்டாயுதபாணி கோயில். Arulmiku Thandaayuthapaani Temple, 66 Ton That Thiep, Phuong Ben Nghe, Quan 1, Ho Chi Minh City.

இந்தோனேசியா

இந்தோனேசியாவின் வடக்குத் தீவு சுமாத்திரா. மலேசியாவின் பினாங்குக்கு மேற்கே மலாக்கா நீரிணையைத் தாண்டினால் மேடான். அங்கு வணிகத்துக்காகச் சென்ற நகரத்தார் அமைத்த கோயில் அருள்மிகு தண்டாயுதபாணி கோயில்.

 

மியம்மா

மியம்மாவில் நூறு ஆண்டுகளுக்கு முன் சென்ற நகரத்தார் அமைத்த 32 தண்டாயுதபாணி கோயில்கள், அவற்றுக்கான சொத்துகள் பற்றிய விவரங்களைத் தேடவேண்டும். யாங்கோனில் முகில் தெருவில் நகரத்தாரின் ஆறு அறை முருகன் கோயில் சிதிலடைந்த நிலையில், மியம்மாப் பெண்ணை மணந்த நகரத்தார் ஒருவரின் மேற்பார்வையில் இயங்கிவருகிறது.

மொரிசியசு

250 ஆண்டுகளுக்கு முன்பு, தமிழர் மொரிசியசுத் தீவுக்குத் தமிழகத்திலிருந்து சென்று குடியேறினர். அவர்கள் அமைத்த கோயில் கிளமன்சு முருகன் கோயில். மொரிசியசின் அனைத்து மத வழிபாட்டிடங்களுள் முதன்மையானது தமிழர் வழிபாட்டிடமான இந்த முருகன் கோயில். Aroul Migou Bala Dhandayuthabani Swami Kovil, Clemencia, Flacq.

 

மொரிசியசு நாட்டுத் தமிழரின் மிகப் பெரிய விழா தைப்பூசம், அந்நாளில் நடைபெறும் காவடியாட்டம். 1874 தொடக்கம் அரச விடுமுறையுடன் நடைபெறும் விழா.

மொரிசியசுத் தமிழ்க் கோயில்களின் கூட்டமைப்பில் உறுப்புரிமை பெற்ற 45 கோயில்களில் முருகன் கோயில்களின் எண்ணிக்கையே அதிகம். (1). Arulmiku Bala Dhandayudapanee Tirrukovil, Tranquebar, Port Louis (2).

Arulmiku Murugan Kovil, Petite Verger, Moka. (3). Arulmiku Arulmigu Koodal Kumarar Thirukkovil, Valetta, Moka. (4). Dagotiere Murugan Temple, Dagotiere, Moka. (5). Siva Mooroogan Mariamen Temple, Vuillemin – Quartier Militaire, Moka. (6). Arulmiku Siva Soopramaniar Kovil Society, Loreto Convent St. – Curepipe Road, Plaines Wilhems. (7).

Arulmiku Tiruttani Murugan Kovil Society, Rose Hill, Plaines Wilhems, (8). Arulmiku Siva Soopramaniar Kovil, Quatre Bornes, Plaines Wilhems. (9). Arulmiku Mont Roches Murugan Malaye Kovil Sangham, Mont Roches, Plaines Wilhems. (10). Arulmiku Siva Soopramanier Covil Bagtha Sangham, Camp Diable, Savanne. (11). Arulmiku Maha Mariamen Siva Soopramanier Alayum Tamil Association, Union Ducray – Riviere des Anguilles, Savanne. (12). Arulmiku Mariamen Draupaday and Arulmiku Sivasoopramaniar Kovil, Saint Felix – Riviere des Anguilles, Savanne. (13). Arulmiku Siva Subramaniar Kovil, Chemin Grenier – Savanne. (14). Arulmiku Siva Soopramaniar Temple Society, Riche Fond – St Julien Village, Flacq. (15). Aroul Migou Bala Dhandayuthabani Swami Kovil, Clemencia, Flacq. (16). Arulmiku Siva Soopramaniar Temple Society, P.D. Roches, P. de Flacq, Flacq. (17). Arulmiku Siva Soopramaniar Kovil Society, Boulet Rouge, Flacq. (18). Arulmiku Siva Soopramaniar Tamil Temple Society, La Luicie – Bel Air Riveire Seche, Flacq. (19).

Arulmiku Soopramanien Tamil Temple Society, St. Julien D’Hotman, Flacq. (20). Arulmiku Subramania Swami Kovil Sangam, Triolet, Pamplemousses. (21). Arulmiku Mount Siva Soopramaniar Kovil, Mount, Pamplemousses. (22). Arulmiku Siva Soopramaniar Kovil, Goodlands, Riviere Du Rempart. (23). Arulmiku Bala Soopramaniar Temple Society, Amaury, Belle Vue Maurel, Riviere Du Rempart. (24). Arulmiku Mariamen Siva Soopramaniar Temple Society, Labourdonnais – Mapou, Riviere Du Rempart.

 

இறியூனியன்

மொறிசியசுக்கு மேற்கே சிலநூறு கிமீ. தொலைவில் உள்ள தீவு இறியூனியன். பிரான்சு நாட்டின் கடல்கடந்த மாகாணங்களுள் ஒன்று. 450 ஆண்டுகளுக்கு முன்னரே பிரஞ்சுப் படையில் சேர்ந்த தமிழகத்தவர் இறியூனியன் சென்றனாம். எனினும் 250 ஆண்டுகளாகவே அங்கு தமிழர் குடியேற்றம். தீவின் மொத்தக் குடிமக்களுள் 65% தமிழர்.

அங்கே முருகனுக்குப் பலகோயில்கள். சாந்த தெனிசு, சாந்த பவுலு, சாந்த பெயேிது, சாந்த சுசான் எனப் பற்பல இடங்களில் முருகனுக்குக் கோயில்கள் உள. Sri Bala Subramanya Temple, Saint Paulous, Reunion, Arulmiku Murugan Koil, St. Benoit, Reunion ஆகிய இரு கோயில்களும் புகழ்பெற்றவை.

 

தென்னாபிரிக்கா

150 ஆண்டுகாலத் தமிழர் குடியேற்ற வரலாறு. அங்குள்ள அனைத்து மாகாணங்களிலும் தமிழர். எங்கும் முருகனுக்கு கோயில்கள். எனினும் நேட்டால் மாகாணத்தில் எண்ணிக்கையில் அதிகமானோர். அங்கே முருகன் கோயில் பல. (1). அருள்மிகு முருகன் ஆலயம், 152 Jacobs Road, Clairwood, Durban, South Africa. (2). அருள்மிகு சிவசுப்பிரமணியர் ஆலயம்  122 Sirdar Road, Clairwood, Durban, South Africa. (3) Arulmikui Siva Subramoney Alayam, Phoenix, Durban. (4). Arulmiku Siva Subramoney Temple, 37 2nd Street, Abbotsford, Johannesburg 2000.

பொற்சுவானா

பொற்சுவானாவுக்கு அண்மையில் சென்றோர் அமைத்த கோயில் கபரோனில் உள்ளது. Gaborone, Botswana, Ph: (00267) 352933.

சுவிற்சர்லாந்து

நாட்டின் 30 தன்னாட்சி நிலங்களிலும் ஒவ்வொரு சைவக் கோயிலை அண்மையில் புகலிடம் தேடிச்சென்ற ஈழத்தமிழர் அமைத்துள்ளனர். அவற்றுள் 6 கோயில்கள் முருகனுக்கானவை.

(1) Arulmiku Aarau Murugan Temple, IndustriesStrasse 44, 5000 Aarau, Tel:+(41)-62 8220196. (2). Arulmiku Murugan Temple, Bern. (3). Arulmiku Ticino Shivasubramanya Swamy Temple, Zurich. (4). ArulmikuShivasubramanya Swamy Temple, Sihlweg 03, 8143 Adliswil. Tel:+(41)-1-7090630. (5). Arulmiku Murugan Temple, Lausanne. (6). Arulmigu Kathirvelauthasuvamy Ahlayam, St.Gallen. Industrie Str – 27, 9430 St. Magrethen, St. Gallen.   Tel: (0041) 071 7400816, 078 8783176, 078 6298777,078 7704315

யேர்மனி

1970களின் பிற்பகுதியில் ஈழத்திலிருந்து புகலிடம் தேடியோர் சென்ற நாடு யேர்மனி. கட்டற்ற நுழைவனுமதி வழங்கிய காலத்தில் விமானங்களில் சென்றடைந்து ஈழத் தமிழர் புகலிடம் தேடினர். யேர்மனில் சைவக் கோயில்கள் பல உள. இந்துக்ளை மதமாற்றும் முயற்சிக்கான சூழலும் பெருகிய நாடு. அங்கேயும் முருகனுக்கு 5 கோயில்கள். (1). Aarumuga Velazhagan Hamm. (2). Kurinchikkumaran Temple, Singerbrinkstr-34, 51643 Gummersbach, Tel:+49 02261/29467. (3) Arulmiku Kathirvelauthaswamy Temple e.V., Essen. (4). Arulmiku Mayurapathy Murugan, Berlin. (5). Arulmiku Bremen Murugan Temple, Germany.

பொசினியா

புதிதாக அமைந்த நாடு பொசினியா. அங்கே முருகனுக்கு ஒரு கோயில். Arulmiku Murugan Mandir – Zenica, Bosnia.

நெதர்லாந்து

ஒல்லாந்து எனப் பெயர்கொண்ட நெதர்லாந்து நாட்டில் புகலிடம் தேடிய ஈழத் தமிழர் அமைத்த முருகன் கோயில்கள் இரண்டு. (1) Arulmiku  Murugan Temple, Limburg. (2). Arulmiku Siva Subramaniyar Temple, Roermond.

பிரித்தானியா

ஐரோப்பாவில் முருகனுக்குக் கோயில் ஒன்றை முதன்முதலாக எழுப்பியோர் கல்விக்காகவும் தொழிலுக்காகவும் பிரித்தானியா சென்ற தமிழகத்தவரும் ஈழத்தவருமே. 1978இல் ஈழத்தவரான சிவதாசன் இணையர் வழங்கிய வேல், இன்று கருவறையில் உள்ளது. சிறிய அளவில் முருகன் கோயில் அமைத்து, பின் சீர்காழி கோவிந்தராசன் போன்ற தமிழிசை மேதைகளை அழைத்து நிகழ்ச்சி நட்த்தி நிதி திரட்டினர், கோயில் எழுப்பினர்.

1983க்குப் பின் சென்ற தமிழர் முருகனுக்குக் கோயில் கட்டும் முயற்சிகளைத் தொடர்ந்தனர். அவர்கள் அமைத்த சைவக் கோயில்களில் முருகனுக்குச் சிறப்பிடம் உண்டு. பிரித்தானியாவின் ஏழு கோயில்களில் முருகன் மூலவர். (1). Arulmiku Murugan Temple, 78 Church Road Manor Park London E12 6AF. Tel: 020 8478 8433. (2). Arulmiku Lewisham Murugan Temple, London. (3). Arulmiku Thiruthanigai Vale Murugan Temple, Surrey. (4) Arulmiku Skandavale, Carmarthen, Wales, Llanpumsaint Dyfed SA3 3JT. Tel: 01559 384 421 (5). Arulmiku High Gate Hill Murugan Temple, 200A Archway Road, London N6 5BA. Tel: 020 8348 9835 (6). Arulmiku Leicester Murugan Kovil, 3A, Ross Walk, Leicester LE4 5HH. (7) Arulmiku Sivaskanthagiri Murugan Kovil, Croydon, 13 – 15 Thornton Road Thoronton Heath, Croydon, Surrey CR7 6BD Tel: 020 8684 0747

கனடா

மூன்று இலட்சத்துக்கும் கூடுதலான எண்ணிக்கையில் ஈழத் தமிழர் வாழும் நாடு. தமிழர் ஒருவர் நாடாளுமன்ற உறுப்பினர். கனடா முழுவதும் சைவக் கோயில்கள் நாற்பதுக்குக் கூடுதலாக உள. ஒவ்வொன்றுலும் முருகன் வீற்றிருக்கிறார். எனினும் எழு கோயில்களில் மூலவராக முருகன். (1). Arulmiku Canada Kanthaswamy Temple Society, 733 Birchmount Road, Scarborough, Ontario. M1K 1R5, Phone : 416-438 1882. (2) Arulmiku Nallur Kanthaswamy Kovil,

20 Nugget Ave. #01, Scarborough, ONTARIO. M1S 3A7, Phone : 416-293 9004. (3) Arulmiku Thiruchchenthoor Murugan Temple, 2400 Finch Avenue West  Unit #10, Weston, ONTARIO.  M9C 2C8, Phone : 416-744 9568. (4). Arulmiku Montral Thiru Murugan Temple, 1611 St.Regis Boul., Dollard-des-Ormeaunt, Quebec. H9B 3H7, Phone : 514-683 8044. (5). Arulmiku Subramaiya Temple, 673, Eighth Avenue, Val Morin, QUEBEC. J0T 2R0, Phone: 819-322 3226. (6) Arulmiku Selvasnathi Mrugan Kovil Toronto (Scarborough). (7). Arulmiku Canada Kandasamy Temple (Kennedy & Finch),  3251 Kennedy Rd. Unit 22 , Scarborough.ON., M1V 2J9.

 

அமெரிக்க ஐக்கிய மாநிலங்கள்

50 மாநிலங்களிலும் இந்துக் கோயில்கள். இந்து சமய நெறி பரப்பு நடுவங்கள். தமிழகத்தில் இருந்து சென்றோர் தாம் வழிபட அமைத்த கோயில்கள். தமிழர் அமைத்த கோயில் ஒவ்வொன்றிலும் முருகன் வீற்றிருக்கிறார். எனினும் 4 கோயில்களில் முருகன் மூலவர். (1). Arulmiku Shiva Murugan Temple, 1803, Second St, Concord, CA 94519 Ph 925-827-0127. (2). Arulmiku Murugan Temple of North America  6300, Princess Garden Pkwy Lanham, MD 20706Ph 301-552-4889. (3). Arulmiku Kathirgama Temple, Rural Route 1 Box 82 Delakb Junction Richville, NY 13630 Phone: (315) 347-2499. (4) Arulmiku Palani Anadavar Temple of Yuma, Arizona.

 

 

 

 

 

 

 

 

 

விடுபட்டவை

இந்தக் கட்டுரையில் தந்த விவரங்கள் முழுமையானவை அல்ல. இவ்விவரங்களை வலைத்தளங்களில் தேடிச் சேர்த்தேன். குறிப்பாகக் கௌமாரம் http://www.kaumaram.com வலைத்தளம் தரும் தகவல்கள் இக்கட்டுரையில் உள. அப்பாலும் என் பார்வையில் வந்தனவும் உள.  இத்தகவல்களைத் திருத்துவதும் மேம்படுத்துவதும் முருகன் அடியார் கடன்.

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “பூமிப் பந்தெங்கும் முருகா முருகா

  1. முருகா.. மிக அரிய தகவல்கள். என்னைத் தூண்டி விட்டுள்ளீர்கள். ஆந்திராவில் முருகனைப் பற்றிய என் கட்டுரை பாதியிலேயே நிற்கிறது. இரண்டு தலங்கள் செல்லவேண்டும்.. இன்னமும் மீதம் உள்ளது.

    அன்புடன்
    திவாகர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *