மரத்துப் போகப் போகும் தமிழன்.
சித்திரை சிங்கர்
உயர்த்தப்பட்ட மின்கட்டணங்கள் முழுமையாக மக்களின் தலையில் இடியாக விழ ஆரம்பித்துவிட்டது.
இதில் அதிகம் பாதிக்கபடுபவர்கள் இரு மாதங்களுக்கு ஐநூறு யூனிட்களுக்கு மேல் உபயோகிப்பவர்களின் நிலைதான். ஐநூறு யுனிட் வரை உபயோகிப்பவர்கள் இதுவரையில் Rs.900/- கட்டிய நிலையில் இப்போது Rs.1330/- கட்டவேண்டியுள்ளது.அதே நேரத்தில் ஒரு யுனிட் அதிகமானால் கூட அதாவது, 501 யுனிட்ஸ்களுக்கு நாம் கட்ட வேண்டிய தொகை Rs.1846 என மாறி விடுகிறது.
சாதாரண நடுத்தர மக்களினால் இந்த மின்கட்டண உயர்வுகளை எதிர் கொள்வது என்பது மிகவும் கடினமான செயலாகவே இருக்கிறது. வருங்காலத்தில் இந்த அதிகப்படியான செலவினைச் சமாளிக்க குடும்ப பட்ஜெட்டில் எதை கட் செய்வது என்று குடும்பம் நடத்துபவர்களுக்கு குழப்பமாகவே இருக்கும். இது ஒரு மினிமம் கணக்குதான். ஒவ்வொரு குடும்பத்துக்கும் இப்போதிருக்கும் அவசர உலகில் இரு மாதங்களுக்கு ஐநூறு யுனிட்ஸ் என்பது முடியாத காரியம்.
இதில் வாடகை வீட்டுகாரகளுக்கு சொல்லவே வேண்டாம். பெரும்பாலான நடுத்தர மக்கள் இன்னமும் வாடகை வீட்டினை நம்பித்தான் இருக்கிறார்கள். வீட்டு வாடகையினை விட மாத மின்கட்டணம் அதிகமாக செலுத்தவேண்டிய கட்டாயத்துக்கு தள்ளபட்டுள்ளளார்கள். வீடுகளில் குளிர்சாதன வசதிகள் வைத்துள்ளவர்கள் கூட இதுவரையில் கட்டிய தொகையில் இருந்து மும்மடங்காக உயர்ந்திருப்பது கண்டு அதிர்ச்சியடைந்து தான் உள்ளார்கள். மக்களுக்கு சௌகரியம் பண்ணி தரத்தான் ஒருஅரசு இயங்க வேண்டுமே தவிர இருக்கின்ற நிலையில் இருந்து மேலும் சிரமப்படுத்த கூடாது. பெரும் எதிர்பார்ப்புக்களுடன் பெரும்பான்மை மக்களினால் மாற்றியமைக்கப்பட்ட நமது புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது முதல் இன்று வரை வெவ்வேறு நிலையிலும் உதாரணமாக பால் விலை உயர்வுகள்.. பஸ் கட்டண உயர்வுகள்… தொடர்ந்த பெட்ரோல் விலை உயர்வு (தமிழக அரசு வரியினை கொஞ்சம் குறைத்திருக்கலாம்) விலைகளை உயர்த்தி தமிழக மக்களை ஏமாளிகளாகவே இந்த ஆட்சி செய்யும் அரசியல்வாதிகள் ஆக்கிகொண்டிருக்கிரர்கள்.
எது எதற்கோ போராடும் மற்ற கட்சிகள் கூட குறிப்பாக இடது வலது கம்யூனிட்ஸ் கட்சிகள் கூட ஆளும் கட்சியின் தயவினால் கிடைக்கும் ஒரு சில் பதவிகள்… சட்டமன்ற நாடாளுமன்ற இருக்கைகளுக்காக…. இந்த மின் உயர்வுக்கு எந்தவிதமான கடுமையான எதிர்ப்புகளை காட்டாமல் “இதமான” எதிர்ப்புக்களை மட்டும் காட்டிவிட்டு ஒதுங்கி விட்டார்கள் என்பது கண்கண்ட உண்மை.
விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் இலவச மின்சாரத்தை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் என்பதே பெரும்பாலான மக்களின் ஆசை. இப்போது, விவசாய நிலங்கள் பெரும்பாலும் பிளாட் போட்டு விற்பதற்கு உப்யோகமாகிக் கொண்டு வருவது நாம் வெளியூர் செல்லும் போது சாலையோரங்களில் காணும் காட்சிகள் வாயிலாக உண்மை.
மேலும் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்குவதை முழுமையாக கட்டுபடுத்த முடியாது என்றாலும் விவசாயிகளின் பின்புலம் பார்த்து அவர்களின் வசதி வாய்ப்புக்கள் பார்த்து இந்த இலவச மின்சாரம் வழங்குவதை கொஞ்சம் கொஞ்சமாக கட்டுபடுத்தி விவசாயிகளுக்கு கொடுக்கப்படும் இலவச மின்சாரம் வழங்குவதை நிறுத்தி, விவசாயிகளின் வசதி வாய்ப்புக்கள் அவர்கள் பயன்படுத்தும் விளைநிலங்கள் விவசாயம் செய்யப்படும் விளைபொருட்கள்….இவற்றை கணக்கில் கொண்டு குறைந்த கட்டணத்துடன் வழங்க ஆரம்பிக்கலாம்.
பொது மக்களுக்கு இப்போது கூட்டியுள்ள மின்கட்டணங்களை கண்டிப்பாக கொஞ்சமாவது குறைக்கவேண்டும். மேலும் நமது தமிழக அரசு இலவச மிக்சி, கிரைண்டர் மற்றும் மின்விசிறி போன்றவற்றை இலவசமாக கொடுத்து மக்களின் மின் கட்டணங்களை மென்மேலும் அதிகப்படுத்துகிறார்கள். இப்போது பெரும்பாலான வீடுகளில் இவர்கள் வழங்கும் பொருட்கள் தாரளமாக இருக்கின்றன என்பதுதான் உண்மை. இவைகளின் உண்மைத்தன்மையினை நன்கு ஆராய்ந்து இப்படி இலவசமாக வழங்கும் பொருட்களின் செலவுகளை மின்வாரியத்துக்கு திருப்பிவிட்டு மக்கள் மீது இப்போது திணிக்கப்பட்டுள்ள அதிகப்படியான மின் கட்டணங்களை குறைக்க இந்த அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும்.
அரசியல்வாதிகளின் சுயநல எண்ணங்கள் கொஞ்சமாவது குறையவேண்டும். ஒட்டு போட்ட மக்களை கொஞ்சமாவது இந்த அரசியல்வாதிகள் நன்றியுடன் நினைத்துப் பார்க்கவேண்டும். ஊதுற சங்கை ஊதுவோம் என்ற எண்ணத்தில் தான் இந்த படைப்பு.
கண்டிப்பாக இதுவரையில் இந்த அரசு கூட்டிய விலையினை கொஞ்சம் கூட குறைத்ததாக சரித்திரம் இல்லை. தமிழக மக்களும் சுமைகளை தாங்கி தங்கி கொஞ்சம் கொஞ்சமாக மரத்துபோக ஆரம்பித்துவிட்டார்கள்…..! இருப்பினும் கொஞ்சம் கொஞ்சமாக மரத்து போவதுதான் நல்லது ஒரே அடியாக மரத்து போனால் பொது மக்களுக்கும் நல்லதல்ல…! ஆட்சியாளர்களுக்கும் நல்லதல்ல ..!
எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த மின் கட்டண உயர்வில் தலையிட்டு கட்டணத்தை குறைக்கவில்லையின்றாலும் இருமாதங்களுக்கு ஒருமுறை வசூலிக்கும் இந்த மின்கட்டணங்களை மாதமாதம் செலுத்தவேண்டிய விதத்தில் அதிகாரிகளுக்கு நடவடிக்கை எடுக்க அரசு ஆணையிட வேண்டும் என்பதே பெரும்பான்மையான் பொது மக்களின் வேண்டுகோள். அரசு தக்க நடவடிக்கை எடுக்குமா….? மக்கள் குறை கொஞ்சமாவது குறையுமா….? இல்லை இந்த நினைவுகள் பகற்கனவாக போகுமா…?
ஓம்
நண்பர் ஒருவர் அதிகப்படியாக ஒரு மும்முனை இணைப்பும், ஒரு முனை இணைப்பும் மின்வாரியத்தின் மூலம் பெற்றார். அதற்கு என கொடுக்கவேண்டிய செலவுகள் செய்து இணைப்புகள் கிடைத்தன. . .புதியதாக பொருத்தப்பட்டுள்ள டிஜிடல் மீட்டர்கள் சூடுவைத்ததாகச் சொல்லப்படு ம் ஆட்டோ மீட்டர்களைப் போல பி.டி. உஷாவைப் போல விரைந்து ஓடுகின்றன. டிஜிடல் மீட்டர்களின் தாறு மாறான ஓட்டத்தால் மூச்சு திணறும் கட்டணம்
. எந்த ஒரு இலவசத்தின் பின்னணியில் யாரோ சிலரின் உழைப்பு இருக்கத்தானே செய்யும். சரியான பணிக்கு சரியான கூலி என்பது இருந்தால்தான் பணியாளர் திறம்பட செய்வர். எந்த நிகழ்விலும் முழுமையாக பயன் பெற முழுமையான முயற்சி தேவை. தவறான தகவல் தந்து அனைத்து ஆவணங்களும் தவறாக்கப் படுகின்றன. எந்தப் புள்ளி விவரங்களும் உண்மையைப் பிரதி பலிப்பதில்லையே!
வெ.சுப்பிரமணியன் ஓம்