அடைமொழி
நல்லவன்தான் நான்
நான் விரும்பும் நல்லவனில்லை
நான்
நான்
நல்லவனாக இருந்துகொண்டிருக்கிறேன் அதிகமாய்
அவ்வளவுதான்
பிறருக்கெல்லாம்
நான் ஒரு யோக்கியன்
எனக்கும் கூட
நான் யோக்கியனாக இல்லாமல் இல்லை
நான் விரும்பும் அளவுக்கு
யோக்கியனில்லை நான்
மனசோடு பேசும்போதுதான்
புரிகிறது
இடைவெளி இருள்
இடைவெளியைக் குறைக்காமல்
வெளிச்சத்தில் இருந்தாலும்
தொடர்கிறது இருள்
புதைத்தவை அதிகம்
விழுங்கியவை ஏராளம்
மறைத்தவையும் அப்படியே
கழிகிறது காலம்
அடைமொழியோடு
படத்துக்கு நன்றி
http://amazingdata.com/5-incredible-works-of-leather-art/
ஒவ்வொரு மனிதனும் தன்னைத் தானே உள்வாங்கி, தனக்குத் தானே கேள்வி கேட்டு, உண்மையான பதிலைப் பெருவானாயின்…உங்கள் கவிதையில் உள்ள
“மனதோடு பேசும் போதுதான் புரிகிறது இடைவெளி இருள்” என்ற வார்த்தையின் முழு அர்த்தத்தை உணருவான்.
முகில் தினகரன்
இடைவெளியைக் குறைப்பதிலேயே கழிகிறது வாழ்க்கைப் போராட்டம். நல்ல சிந்திக்க வைத்த கவிதை. வாழ்த்துக்கள் ஐயா!