முகில் தினகரன்

இளைஞனே!!

நீ
சிம்னிக்குள் சிறைப்பட்ட
சின்ன ஒளியல்ல!
அவனிக்கே அனல் தூவும்
ஆதவத் துணுக்கு!

நீ
வீணைக்குள் புதையுண்ட
நாதத்தின் நகலல்ல
சேனையைச் சிதறடிக்கும்
செங்குருதிச் சிலிர்ப்பு!

நீ
ஒரே நாளில் மரணிக்கும்
ஈசல் இனமல்ல
யுகங்களை வெல்லும்
சாதனையின் சரித்திரம்!

நீ
தோல்விக்குத் துவளும்
ஈனத்தின் எச்சமல்ல
வெற்றிக்குத் தோரணமாகும்
உழைப்பின் உச்சம்!!

படத்துக்கு நன்றி

http://windnsnow-triangle.blogspot.in/

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The reCAPTCHA verification period has expired. Please reload the page.