தீர்ப்பு
எவ்வளோ யோசித்த்து யோசித்து
அடைகாத்திருக்கிறேன்
அவ்வளவு சாதாரணமாக
அடையாளப்படுத்தவில்லை
அப்பொழுதே
அவிழ்த்து இருக்கலாம்
அதுகூட
சரியாக இருந்திருக்கலாம்
அவசரப்படாததில்
நன்மை இல்லாமலில்லை
அப்படி முந்திக்கொண்டிருந்தால்
அந்த நேரத்திற்கு
அது சரிதான்
ஆனால்
அது
சரியானதில்லை என்பதே
சரி
காலத்தை விழுங்குவதுகூட
சரியாகப்படுகிறது
எல்லாம் காலத்தில்
என்பது
எல்லாக் காலத்திற்கும்
பொருந்தாது.
படத்துக்கு நன்றி
http://www.clker.com/clipart-sword-of-justice.html
எல்லாம் காலத்தில் என்பது எல்லாக் காலத்திற்கும் பொருந்தாது….
என்கிற வரிகளை திரும்பத் திரும்ப வாசித்தேன். ஒவ்வொரு முறை வாசிக்கும்
போதும் ஒவ்வொரு அரத்தத்தை உணர்த்துகின்றது. ஒரு வேளை எனக்கு மட்டும்தான் இப்படியா?…இல்லை எல்லோருக்குமா?