பொது

காலச்சுவடும் தமிழக மீனவர் படுகொலையும்

காலச்சுவடு பத்திரிக்கை ஆழச் சிந்தித்தே கட்டுரைகள் வெளியிடும் பத்திரிக்கையாக தமிழ் உலகம் அறியும். இந்த மாத இதழில் தமிழக மீனவர் படுகொலை பற்றிய சூரிய நாராயணன் பேட்டி மீனவர் படுகொலைக்கான அடிப்படை நீதித்தேடல் என்பதில் இருந்து நழுவி பிரச்சனையின் மையம் என ஒரு பொய்யான திரிபு கதை முன்வைக்கப்படுகிறது. இதை எந்த விதக் கேள்வியுமின்றி, முரணுமின்றி காலச்சுவடு பேட்டியை நடத்திச்சென்றுள்ளது அதிர்ச்சிகரமானதாகவும் வருந்தத்தக்கதாகவும் உள்ளது. இதில் வெளியாகி இருக்கும் புரட்டை உடைக்கும் விதமாகவும், உண்மை நிலையையும் படுகொலையாளிகளை கைது செய்து தண்டிக்க நடக்கும் வழக்கு பற்றியும் விரிவாகப் பேச வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

25 ஆண்டுகளாக இலங்கைக் கடற்படை 539 தமிழக மீனவர்களைக் கொன்றிருக்கிறது.  ஆனால் கொலை செய்த இலங்கைக் கடற்படை கொலைகாரர்களை கைது செய்யவோ கண்டிக்கவோ முற்படவில்லை.  தமிழக மீனவனைக் காக்க இந்திய கடலோரக் காவல் படையை பலப்படுத்த, நவீனப்படுத்த வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை நிராகரித்து விட்டு, இலங்கைக் கடற்படைக்குக் கப்பலும் பயிற்சியும் ஆயுதமும் ஆதரவும் இந்தியா வழங்குகிறது.  கொலையாளிகளைக் கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றவுடன், மீனவப் படுகொலையைத் திசைதிருப்பும் முயற்சிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.  தமிழக மீனவர்கள் பாரம்பரிய மீன்பிடி முறையில் இல்லாமல் இழுவைப் படகு பயன்படுத்துவதாலே இக்கொலைகள் நடப்பதாகத் திசை திருப்பப்படுகிறது.  இந்தப் பொய் செய்திகளைப் பரப்புதைத் தடுக்காவிட்டால் நம் மீனவர்களை படுகொலை செய்வது அதிகரிக்கும்.

கடல் எல்லை கடந்து மீன் பிடிப்பது உலகெங்கும் நடக்கக்கூடிய ஒன்று.  தமிழக மீனவனைத் தவிர உலகில் எந்த மீனவனும் இதற்காக கொலை செய்யப்பட்டது இல்லை. கட்சத்தீவு இலங்கைக்கு அளித்தது இந்திய அரசியல் அமைப்புச் சட்டப்படி மாபெரும் குற்றமாகும்,  இதை மக்களிடத்தில் மறைத்து  மக்களைத் திசை திருப்பும்  சதியைப் பற்றி மேலும் விரிவாக விளக்க அறிஞர்கள் பேச இருக்கிறார்கள்.

வழக்கறிஞர் பா. புகழேந்தி

கா. அய்யாநாதன்

சீதையின் மைந்தன் – கட்சதீவு மீட்பு இயக்கம்

மகேஷ் – பாரம்பரிய மீனவர் சங்கம்

திருமுருகன் காந்தி

செ.தெ. நாயகம் பள்ளி
ஞாயிற்றுக்கிழமை (20.3.2011) – மாலை 4.00 மணி
சென்னை
தி.நகர்

சதிகளைத் தகர்க்க வாரீர்.

தமிழக மக்கள் உரிமைக் கழகம் | மே பதினேழு இயக்கம்

7871167265 – 9884877487

meenavar

தகவல் : முத்தமிழ் வேந்தன்

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க