இலக்கியம்கவிதைகள்

சிவமயீ, காரோண ஹ்ருதய மயீ, நீலாயதாக்ஷி

நாகை வை. ராமஸ்வாமி

சிவமயீ, காரோண ஹ்ருதய மயீ, நீலாயதாக்ஷி
சிவானந்த மயீ, பரமானந்த மயீ, சர்வமயீ
கருவாகி உருவாகி உயிர் மூச்சும் உயிருமாகி
உருவாக்கி நலமாக்கி வளமாக்கும் நீலாயதாக்ஷி
ஆரூர் வந்துனை தரிசித்தோம் அம்மா கமலாக்ஷி
அருள்மிகு தியாகேசனும் தந்தான் திருவருட்காட்சி
திருவே, கோயில் குடமுழுக்குக் காட்டினாய்
கருணா கடாக்ஷி, −இதுவே நின் பரிவின் சாட்சி
என்னுள் கோயில் கொண்டாய், எனையாண்டு கொண்டாய்
உன் பாதம் போற்றி எனைப் பாடவும் வைத்தாயே
ஊரும் பேரும் ஊணும் எதுவும் நீயென்ற நினைவும்
பெருமகிழ்வும் பேறுமுற்றோம் உய்வுற்றோம், போற்றி
பாரேன் எமையுன் கடைக்கண்ணால், என்றிறைஞ்சி
பாரே வணங்கும் நீலாயதாக்ஷி உனைப் போற்றினேனே
சிவமயீ, காரோண ஹ்ருதய மயீ, நீலாயதாக்ஷி
சிவானந்த மயீ, பரமானந்த மயீ, சர்வமயீ

படத்திற்கு நன்றி

http://nampakkam.blogspot.in/

Print Friendly, PDF & Email
Download PDF
Share

Comments (4)

 1. Avatar

   very happy to see our neelayadhakshi pattu in vallamai as it will reach people all over the world

 2. Avatar

  Mama, the song is great…I pray the Ambal to shower more and more  thoughts to pen more songs.

 3. Avatar

   இந்த பாட்டு ஆரூர்  அம்பாளைப்    பற்றி  இருக்கிறார் போல் எனக்கு தோன்றுகிறது  

 4. Avatar

  Thank you Mr. Murthy for your say about the song.   Hv been writing about the glory of Ambal Neelayadakshi of Nagapattinam for every Adipuram Day.   Ambal Neelayadakshi is Siva Swarupini and She is Parvathi Devi, as also Kamakshi, Meenakshi, Visalakshi and Arur Kamalakshi.   Whenever I have a darshan in any year of any Devi in any Place, in the next year ‘s song that Devi’s name comes in between.   Accordingly, we visited Tiruvarur and had Darshan of Ambal Kamalakshi-Thiagesan and they have occupied in this year’s song.   Else, all Devis are one and the same.    For your reference, kindly go through the given link where my article published in chennaionline about Nagai Neelayadakshi Amman Temple is given
  http://nagaifriends.blogspot.sg/ .   Once again thank you Mr. Murthy for going through the song and for having given your comments.  Rgds.  V. Ramaswamy

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க