செய்திகள்

நன்றியும் இரங்கற்கூட்ட அழைப்பும்

 

R.A.K.BARATHI. ( இலக்கிய சிந்தனை அமைப்பாளர்)

ELAKKIA CHINDANAI- 510 TH MEETING

TODAY AT 6.30 PM. SRINIVASA GANDI NILAYAM,
AMBUJAMMAL STREET, NEAR NARADA GANA SABA,
(OPPOSITE TO CHETTIAR HALL).ALWARPET. CHENNAI.

SUBJECT : LATE SRI A.S.RAGAVAN.

SPEAKERS: MRS SHAILAJA, AND MR INDIRA SOWNDARARAJAN.

ALL ARE WELCOME.

அப்பாவைப்பிரிந்த துயரத்தின் சாயலை மெல்ல மெல்ல துடைத்துக் கொண்டு இயல்பு நிலைக்குத் திரும்ப இத்தனை நாளாகிவிட்டது. மரணம் மற்றவர்களுக்கு நேர்கையில் தத்துவம் பேசி சமாதானம் சொல்லத்தெரிகிறது தனது ரத்த பந்தத்திற்கு வருகையில் அது சம்பவமாகி மனதில் தங்கித்தான் விடுகிறது. ஆயினும் தொலைபேசியிலும் மின் அஞ்சலிலும் நேரிலும் ஆறுதல் சொல்லிய பல அன்பு மனங்களின் இதமான வார்த்தைகள் இழப்பின் வலிக்கு மருந்தாகின.. மனநிலை மிகவும் வேதனையில் ஆழ்ந்திருந்ததால் பலரின் தொலைபேசி அழைப்புகளுக்கு பதில் சொல்ல முடியவில்லை அவர்கள் யாவரும் மன்னிக்கவும்.

எழுத்தாளர் அமரர் திரு ராகவன் அவர்களுக்கு இன்று (சனிக்கிழமை ஜூலை, 28, 2012 ) மாலை மேற்கண்ட இடத்தில் இரங்கற்கூட்டம் நடைபெற உள்ளது. அமுதசுரபி ஆசிரியர் திருப்பூர்கிருஷ்ணன் இந்த கூட்டத்தை நடத்த இருக்கிறார்.இலக்கியச் சிந்தனை எனும் அமைப்பு மாதாமாதம் நடத்தும் மாத சிறுகதைத்தேர்வுக்கூடம் நடக்கும் இடத்தில் இந்தக்கூட்டமும் நடக்க இருப்பதால்இயன்றவர்கள் வரும்படி பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன் நன்றி

அன்புடன்
ஷைலஜா

Print Friendly, PDF & Email
Share

Comments (2)

 1. Avatar

  தமிழா தமிழா (http://tvrk.blogspot.com/2012/07/blog-post_08.html) என்ற பதிவின் மூலம் தங்கள் தந்தையாரின் மறைவு பற்றி தெரிந்து கொண்டேன். எனது ஆழ்ந்த அனுதாபங்கள். தங்களின் மின்னஞ்சல் தெரியாத படியினால் மேற்சொன்ன பதிவின் மூலமாகவே கீழே சொன்ன அனுதாபத்தை தெரிவித்து இருந்தேன். (காரணம். தங்கள் தந்தையின் பிறந்தநாள் செய்தி இருந்த தங்களது பதிவில் இதனை தெரிவிக்க சங்கடமாக இருந்தது.) — 12.08.12

  தி.தமிழ் இளங்கோ said…
  // பிரபல பதிவரும், எழுத்தாளருமான ஷைலஜா அவர்களின் தந்தையும். முதுபெரும் எழுத்தாளருமான ஏ.எஸ்.ராகவன் காலமானார் // என்ற செய்தியினை உங்கள் பதிவின் மூலம் அறிந்து கொண்டேன். தந்தையின் பிரிவுத் துயரில் இருக்கும் சகோதரி ஷைலஜா அவர்களுக்கு உங்கள் மூலம் எனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
  July 8, 2012 11:18:00 PM PDT

 2. Avatar

  நன்றி திரு தமிழ் இளங்கோ…அப்பாவின் பிரிவின் துயரத்திலிருந்து மெல்ல மீண்டுவருகிறேன்தங்களைப்போன்றோரின் ஆறுதல் மடல்கள் மனதை தேற்றுகின்றன நன்றி

  ஷைலஜா

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க