இலக்கியம்கவிதைகள்

அது ஒரு மழை நாள்

 

பத்மநாபபுரம் அரவிந்தன்

அன்றொரு நாள் பெய்த பெருமழையில்

நனைந்து நின்ற உன்னை என் குடைக்குள் அழைத்தேன் ..

குடை வாங்கி வீசிவிட்டு என்னையும் மழை  நனையச்

சொன்னாய் நீ..

மூக்கு நுனியில் நீர் சொட்ட, பூத்திருந்தப்

பூப் போல பளீரிட்ட உன் முகத்தை என்னால்

ஒவ்வொரு மழை போதும் யோசிக்க முடிகிறதாயினும்

உன்னோடு  நனைந்த அம்மழைக்குப் பிற்பாடு

இன்றுவரை என் மனதுள் எம்மழையும் பெய்யவில்லை …

எங்கோ ஓரிடத்தில் நீயும் மழை ரசிக்கும் போது

அன்று பெய்த அம்மழை ஈரமாய் உன்னுள்

சிலிர்த்துத் தெறிக்கலாம்  ….. பழைய நினைவின்

மேகங்களை கலைத்து சொரிந்தபடி…  

 

http://depositphotos.com/5471592/stock-illustration-Beautiful-young-girl-face-silhouette-with-black-umbrella-on-rain.html

Print Friendly, PDF & Email
Share

Comments (6)

 1. Avatar

  ‘மூக்கு நுனியில் நீர் சொட்ட, பூத்திருந்தப்பூப் போல…இன்றுவரை என் மனதுள் எம்மழையும் பெய்யவில்லை …’
  ~ பெய்யும், மழையோ, வெயிலோ, அந்த முகத்தை மறக்கவேயில்லை என்றால்!
  இன்னம்பூரான்

 2. Avatar

  மழையே அழகு…அதைக் காதலுடன் இணைத்தால் மேலும் அழகு. அற்புதம் சாமி.

 3. Avatar

  மிக்க நன்றி… உங்கள் கதைகள் படித்துக் கொண்டிருக்கிறேன்.. மிக நல்ல எழுத்து நடை   .. சம்பவக் கோர்வை .. மீண்டும் நன்றி .. – பத்மநாபபுரம் அரவிந்தன் – 

 4. Avatar

  அது ஒரு மழை நாள்….. .காய்ந்து போன  என் நினைவுகளை சற்று ஈரம் படுத்தியது உங்கள் கவிதை…… நெஞ்சை வருடும் இதமான மழை சாரல்

 5. Avatar

  நீங்கள் ,ஒதுங்கிய அதே குடையில் நானும் ஒதுங்கினேன் ,அந்த மழை துளியில் அவள் முகத்தை நானும் கண்டேன் ஆனால்,,’ ரகசியம், அது அவளுக்கு தெரியாது,அது நான் மட்டும் கண்ட அந்த அழகின் ரகசியம் ,இதோ பெய்கிறது மழை ,என் முகத்தில் பூத்திருக்கும் ,தண்ணீர் துளிகளில் எல்லாம் அவள்  முகம்,,  சூப்பர் சார் ,…”என்னையே ஒரு கவிதை போல விமர்சனம் செய்ய வைத்துவிட்டது உங்கள் கவிதை ****தேவா****

 6. Avatar

  dEWVA … மிக்க நன்றி … 

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க