வார ராசிபலன் 20.08.2012 முதல் 27.08.2012 வரை
காயத்ரி பாலசுப்ரமணியன்
மேஷம்: பெண்கள் வீண் செலவுகளைக் குறைப்பது மூலமாக பணத் தட்டுப்பாட்டைக் குறைக்கலாம். வியாபாரிளுக்கு கொடுக்கல்- வாங்கலில் இருந்த தேக்க நிலை மாறி, நீண்ட நாள் கடன் பிரச்சினைகள் குறையும். கூட்டுத் தொழில் செய்பவர்கள், பங்குதாரர்களுடன் அனுசரித்துப் போனால், எந்தப் பிரச்சினையும் இல்லாமல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள், அடுத்தவரை அதிகாரம் செய்யும் போது கவனமாக இருப்பது அவசியம். கலைஞர்களுக்கு வெளியூர்ப் பயணங்களால் அலைச்சல் ஏற்பட்டாலும் நல்ல பலன் கை மேல் கிடைக்கும்.
ரிஷபம்: பிள்ளைகள் மூலம் பெற்றவர்களின் சந்தோஷமும், மரியாதையும் கூடும். மாணவர்களுக்கு உல்லாசப் பயணங்கள் செல்வதற்கான வாய்ப்புக்கள் ஏற்படும். உறவுகள் நடுவே சிறுசிறு விஷயங்களுக்குக்காகக் கருத்து வேறுபாடு தோன்றி மறையும்.. அதனால், உறவுகளிடம். பெண்கள் அதிக சலுகைகளை எதிர்பார்ப்பதைத் தவிர்க்கவும். இந்த வாரம் அதிகப்படியாக இருந்து வந்த மருத்துவச் செலவுகள் குறையும். சுய தொழில் செய்பவர்களின் பண வரவு திருப்திகரமாக இருக்கும். வயதானவர்களுக்கு ஆன்மிகப் பயணங்கள் செல்லும் பாக்கியம் கிடைக்கும். .
மிதுனம்: மாணவர்கள் மறதி, சோம்பல் ஆகிய இரண்டுக்கும் இடம் தராமல் இருந்தால், படிப்புல் நல்ல முன்னேற்றம் காணலாம். பொது வாழ்வில் இருப்பவர்களுக்குச் செல்வாக்கு, செலவு இரண்டும் அதிகரிக்கும். பெண்கள். தந்தை வழியில் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பது கொஞ்சம் தள்ளிப் போகலாம். சிறு தொழில் செய்பவர்கள், எதிர்பார்த்த சலுகைகள் தானே வந்து சேரும். முக்கியமான பொறுப்பில் இருப்பவர்கள், தலையாட்டிப் பொம்மையாக இல்லாமல், சுயமாய்ச் சிந்தித்து முடிவுகளை எடுத்தால், நல்ல பெயரும், பதவி உயர்வும் சேர்ந்து வரும்.
கடகம்: இது வரைக்கும் வேலை தேடிக்கொண்டு இருந்தவர்கள் சந்தித்த ஏமாற்றம், அலைச்சல் எல்லாம் விலகி முயற்சிக்கு ஏற்ற பலன் கிடைக்கும். கடன்கள் கட்டுக்குள் இருக்க, வியாபாரிகள் எதிலும், அகலக் கால் வைக்காமல் இருப்பது அவசியம். பொது வாழ்வில் இருப்பவர்கள், நினைத்த காரியங்களைச் சுலபமாக முடிக்க, பொருளாதாரம் கை கொடுக்கும். வேலையில் இருப்பவர்கள், தலைமைப் பொறுப்பில் உள்ளவர்களைப் பற்றி விமர்சனம் செய்வதைத் தவிர்ப்பது அவசியம். பிள்ளைகள் சம்பந்தப்பட்ட விஷயங்களில், பெற்றோர்கள் கவனமாக இருந்தால், அவர்களுடைய வாழ்க்கை வளமாக இருக்கும்.
சிம்மம்: இந்த வாரம் மணவர்கள் மனதில், தெளிவும் நிம்மதியும் ஏற்படுவதால், முடியாத காரியங்களையும் முனைந்து செயல்பட்டு முடிப்பார்கள். குடும்பத்தில், தாய் வழி உறவினர்கள் காட்டும் ஆதரவால், சில நல்ல சம்பவங்கள் நிகழும். வேலையில் இருப்பவர்கள், மேல் அதிகாரிகள் கொடுத்த வேலையைத் திறமையுடன் செய்து, பாராட்டுக்களைப் பெறுவார்கள். பொது வாழ்வில் இருப்பவர்கள், தெளிவான முடிவுகளை எடுப்பதன் மூலமாக, இழுபறியான காரியங்களைச் சாதகமாக முடிக்க முடியும். பெண்கள் எல்லாத் தடைகளையும் தாண்டி எடுத்த காரியத்தில் வெற்றி பெறுவார்கள்.
கன்னி: மாணவர்கள் எடுத்த முயற்சிகளுக்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கும் வரை பொறுமையாக இருந்தால், பெருமையாக வலம் வரலாம், வாரத் தொடக்கத்த்தில், பண விவகாரங்களில் கவனமாக இருந்தால். நண்பர்களால், வீண் செலவு ஏற்படாமல் இருக்கும். பெண்கள் எந்த காரியத்திலும் சாதகமான பலன் பெற வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. பொது வாழ்வில் இருப்பவர்கள், உடன் இருப்பவர்களிடம் பக்குவமாகப் பேசுவது நன்மை தரும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு எதிர்பார்த்த இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். இந்த வாரம் வியாபாரிகள் வரவைக் காட்டிலும், செலவுகள் மீதும் கவனமாக இருப்பது புத்திசாலித்தனம்.
துலாம்: பெண்கள் அண்டை வீட்டாருடன் அளவாகப் பழகி வந்தால், பிரச்னைகள் பாதி தானே பிசுபிசுத்து விடும். மாணவர்கள் மனதை ஒரு நிலைப்படுத்திப் படிப்பதில், உறுதியாக இருந்தால் சுலபமாக அதிக மதிப்பெண்கள் எடுக்கலாம். பொது வாழ்வில் உள்ளவர்கள், கடைமைகளைச் சரிவரச் செய்வதோடு மட்டுமில்லாமல், நிதானத்தையும் கடைப்பிடித்தால், எல்லா விஷயங்களும் வெற்றிகரமாய் முடியும். இந்த வாரம் வியாபாரிகள் தொழில் ரீதியான போட்டியைச் சமாளிக்க வேண்டி வரும். தொழில் மேம்பாடுக்காகக் கலைஞர்கள் எடுத்த முயற்சிகள் நல்ல பலனைத் தரும்.
விருச்சிகம்: நினைத்த காரியங்களில் வெற்றி பெறும் வாய்ப்பு கிடைப்பதால், மாணவர்களுக்கு இது மகிழ்ச்சி நிறைந்த வாரமாய் அமையும். வியாபாரிகள் கொடுக்கல்- வாங்கலில், கவனமாக இருந்தால், லாபம் குறையாமல் இருக்கும். பொது வாழ்வில் இருப்பவர்கள், வலிய உறவு கொண்டாட வருபவர்களிடமிருந்து விலகி இருப்பதே நல்லது. இழுபறியாக இருந்த வழக்குகளில், நல்ல சாதகமான முடிவுகள் ஏற்படும். சுய தொழில் செய்பவர்கள், மெத்தனமாக இருந்தால், பத்து ரூபாயில் முடியக் கூடிய வேலைக்கு அதிகமாகப் பணம் செலவு செய்ய வேண்டி வரும்.
தனுசு: பெண்கள் குடும்ப சூழலுக்கேற்றாற்போல் வளைந்து கொடுத்தால், காரியங்களைச் சாதிக்கும் வழி எளிதாகும். கடினமான வேலைகளில், ஈடுபட்டிருப்பவர்கள், உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருந்தால் வேலைகள் தேங்காமல் இருக்கும். நட்பாக இருந்த பங்குதாரர்கள் திடீரென்று விலகிப் போகும் சூழல் உருவாகலாம். அதனால் வியாபாரிகள் எதிலும் கவனமாக இருப்பது நல்லது. கலைஞர்கள் தேவையான பொருட்கள் வாங்கும் போது கடன் மற்றும் தவணை முறையில் வாங்காமல் இருப்பதுதான் புத்திசாலித்தனம். பெற்றவர்கள் பிள்ளைகளை அவர்கள் போக்கில் விட்டுப் பிடிப்பது நல்லது.
மகரம்: பொது வாழ்வில் இருப்பவர்கள், சாமர்த்தியமாகச் செயல்பட்டால், எதிரிகளை எளிதில் வெல்ல முடியும். இந்த வாரம், உத்தியோகத்தில் இருப்பவர்கள் வீண் அலைச்சலைச் சந்திக்க வேண்டி இருக்கும். பெற்றவர்கள் வழி மாறி நடக்கும் பிள்ளைகளை நல்வழிப்படுத்தும் விஷயத்தில் நிதானத்தைக் கடைப்பிடிப்பது நல்லது. கலைஞர்களுக்குப் பிரியமானவர்களைச் சந்திக்கும் வாய்ப்பு ஏற்படும். பெண்கள் வீட்டில் உள்ளவர்களிடம் அனுசரித்து நடந்தால். பிரச்னைகள் பல தானே குறைந்து விடும். மாணவர்களுக்குக் கல்வியில் இருந்த தடைகள் நீங்கி எதிர்பார்த்த வெற்றி கிடைக்கும்.
கும்பம்: பொது வாழ்வில் இருப்பவர்கள், சிக்கலான விஷயங்களில், இறங்கும் முன் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்தபின் ஈடுபடுவது நல்லது. கலைஞர்களுக்குத் திடீர் பணமுடை மனக் கிலேசத்தை ஏற்படுத்தும். இந்த வாரம் பெண்கள் நினைத்தது போல காரியங்கள் நடக்காதது ஏமாற்றத்தை உண்டாக்கும். அதனால் பொறுமையுடன் இருந்து வருவது அவசியம். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் பாடங்களைப் படித்து வர கூடுதல் மதிப்பெண்களோடு பாராட்டும் கிடைக்கும். வியாபாரிகள் நிதானத்துடன் செயல்பட்டால் பணப்பற்றாக்குறை என்னும் நிலைமையை ஓரளவு சமாளிக்க முடியும்.
மீனம்: பெண்களுக்கு இது சிறப்பான வாரமாக அமையும் என்பதால், சுப காரியங்கள் நினைத்தது போல் நடக்கும். வேலை செய்பபவர்களுக்கு அலுவலகச் சூழல் சாதகமாக இருந்தாலும், பண விஷயங்களில், கவனமாக இல்லையென்றால், சிறிய அளவிலான பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு. இந்த வாரம், பொது வாழ்வில் இருப்பவர்கள், சின்னச்சின்ன விஷயங்களுக்குக் கூட போராட வேண்டியிருக்கும். அதனால், பேசும் வார்த்தைகளில் கவனமாக இருப்பது அவசியம். மாணவர்கள், பாடங்கள் படிப்பதைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று தள்ளிப் போட்டால், கல்வியில் பின்தங்கும் நிலை உண்டாகலாம்.