மாற்றுவோம் மனங்களை..
துப்பாக்கியைக் கண்டுபிடித்த
துர்ப்பாக்கிய வேளை-
துடைத்துத் தீரவில்லை
துடிக்கும் மனிதரின் ரத்தம்..
உடலை அழிப்பதில்
உண்டோ பயன்..
உற்பத்தியும் குறையவில்லை..
அழிப்போம்
அழிவை உருவாக்கும் மனித மனங்களை,
ஆக்குவோம் அன்பு மனங்களாய்…!
படத்துக்கு நன்றி
http://reikitrainingprogram.wordpress.com/2012/03/28/reiki-for-inner-peace-to-balance-outer-chaos/
பக்குவப்பட்ட வார்த்தைகளில் பக்குவமான கருத்துக்கள்
அருமையானதோர் கவிதை. வன்முறையைக் கையிலெடுத்தவனுக்கு வன்முறையால் அழிவென்பதும் நிச்சயம்தானே.
பன்முக எழுத்தாளர் முகில் தினகரன்
அவர்களின்
பக்குவமான பாராட்டுரைக்கு நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…
அமைதிச்சாரலின் பாராட்டுரைக்கு
ஆயிரமாய் நன்றி…!
-செண்பக ஜெகதீசன்…