உன் கண்கள் வாசித்த கவிதைகள்
கள்ளமில்லா சிரிப்பும்
கருணை பார்வையும்
நெஞ்சை உலுக்கிய
நேச வார்த்தைகளுமாய்
உதறவும் முடியாமல்
உணர்த்தவும் முடியாமல்
நெருப்பில் வலம் வந்த – நம்
நேரங்கள் மாறியது
காலம் பரிசளித்த
பிரிவின் கடைசி
நிமிடங்களில்
உன் கண்கள்
வாசித்த கவிதைகள்
இதம் தரும் குளிராய்
என்னுள் வாழும்
இறுதி வரை
படத்துக்கு நன்றி
நெருப்பில் நின்றாலும்….நீரில் மூழ்கினாலும்….சிதையில் எரிந்தாலும் மறக்க முடியாத சில பார்வைகள் எல்லோர் வாழ்க்கையிலும் உண்டு.