செண்பக ஜெகதீசன்

மொட்டை ஏணி
மோனத்தில் ஆழ்ந்தது..
எட்டி உதைக்கப்பட்டதை
எண்ணிக் குமுறுகிறதாம்,
என்றுமுள கதைதான்
என்பதை மறந்தே..

தட்டிக்கொடுத்து சொன்னது
நடைவண்டி-
மனம்தளராதே,
மனிதன் கதை இதுதான்..

தள்ளாடும் தாத்தாவைப் பார்,
தனிமரமாய்..
மனித ஏணிகளே
மறக்கப்படும்போது
மர ஏணியே வருந்தாதே..

நடைபயிற்றுவித்தது
நான்செய்த பணி,
ஏற்றிவிட்டது உன்பணி..
பணியை ஏற்றுக்கொள்
பலனை எதிர்பார்க்காதே…!

என்ன மனிதனே,
ஏதாவது விழுந்ததா காதில்…!

   

http://strollersandprams.com/forums/viewtopic.php?f=2&t=3117         

பதிவாசிரியரைப் பற்றி

1 thought on “கேட்கிறதா…

  1. பழுத்து விழும் இலைகள் முடிவுரை அல்ல….ஆரம்பம்.
    முன்னோர்கள் போற்றப்பட வேண்டிய முன்னேர்கள்.(முன் ஏர்கள்)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *