பாகம்பிரியாள்

இன்றைக்கு திருநாளாம் கோவிலில் ஏகக் கூட்டம்!
மாலைகளை ஏற்று ஏற்று வலியால் புடைத்த கழுதை
மெல்லவே அவ்வப்போது நீவிக் கொண்டார் கடவுள்.
அதற்குள் பூசைத் தட்டுகள் பலவந்து நின்றன.
அதை  அவர் ஒவ்வொன்றாய் கிளறியதில் மேலாக
அகப்பட்டது வண்ண மலரும்,  வாழைப்பழங்களும்,
ஆனால் ஆழக் கிடந்ததோ ஆசைகளும், சோகங்களும்.
ஒன்றில் கூட நன்றி என்கிற உணர்வும் இல்லை.  
போதும் என்கிற மன நிறைவும் இல்லை.
ஏக்கத்தோடு அங்கும் இங்கும் பார்த்த அவர் விழிகளை
அழகாய் ஈர்த்தது குவிந்திருந்த இரு பிஞ்சு கைகள்.
எதிர்பார்ப்பு ஏதும் இன்றி மலர்ந்த முகமதைக் கண்டதும்
ஏக்கமெலாம் மறைந்து மகிழ்வான அவர் வெளியே
 செல்ல காத்திருக்கும் குழந்தையின் கொலுசில் மறைந்திருக்க,
உள்ளே வெறும் சிலைக்கு நடந்து கொண்டிருந்தது
அமர்க்களமாய்    ஆராதனையும், அர்ச்சனையும்!
  
 படம் இணைய தளத்திலிருந்து எடுக்கப்பட்டது

பதிவாசிரியரைப் பற்றி

4 thoughts on “ஆராதனையும், அர்ச்சனையும்!

 1. நெகிழ வைக்கும் கற்பனை. குழந்தையும் தெய்வமும் என்றுமே தோழர்கள்தானே?

 2. தோழர்களை சேர்த்து வைத்து பார்ப்பது தனி அழகுதானே! நன்றி. திரு.தினகரன் அவர்களே.

 3. மனம் குவியாத இடத்தில்
  குணம் எப்ப்டி இருக்கும்
  மலர்களின் வாசனையை
  விடவும் பிஞ்சு பாதத்தின்
  அழ்கு ஆண்டவனை
  இழுத்ததோ இல்லையோ
  எம்மை இழுத்து விட்டது

 4. அழகான பாராட்டு வரிகளை அள்ளித்தந்த ரேவதி அவர்களுக்கு அன்பார்ந்த நன்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *