மரணம் தின்ற நட்பு
இறைவா
நல்லோர் தீயோர்
என்றில்லாமல் எல்லோருக்கும்
வைத்தாய்.. மரணம்
அந்த மரணம் எனக்கு
ஒன்றும் புதிதில்லை
எத்தனையோ முறை
நான் மரணித்திருக்கிறேன்..
தோல்வியால் மூச்சிறைத்து
துரோகத்தின் வலியில்
நம்பிக்கை இழந்த நாட்களில்- என
எத்தனையோ முறை
நான் மரணித்திருக்கிறேன்..
ஆனால் ஒவ்வொரு முறையும்
என்னை மீண்டும் உயிர்த்தெழச்செய்வது
மரணம் தின்ற நட்பு மட்டுமே..!
படத்துக்கு நன்றி
http://fralfonse.blogspot.in/2011/10/lk-1412-14-friends-forever.html
நட்புக்கு நாமாவளி இசைக்கும் நல்லதோர் கவிதை. நன்று.
உங்கள் கருத்துக்கு நன்றி
மரணத்தையும் வெல்லும் சக்தி நட்புக்கு உண்டு என்பதை அழகான கவிதையால் செதுக்கியுள்ளீர்கள்… என்றும் மரணமிலா கவி பல பாட வாழ்த்துகிறேன்….
மரணத்தையும் மரணிக்கச் செய்த அந்த நல்ல நட்புக்கு நன்றி… வாழ்த்துக்கள்
வாழ்த்தும் அன்பு உளங்களுக்கு நன்றி.. உங்கள் வாழ்த்தும் விமர்சனமும் தான் என்னை வளர்த்தெடுக்கும்.