மாசாய்…
காடுகளின்
பசுமைநிலை மாறி இப்போது
பல நிறத்தில்
கான்கரீட் காடுகளாய்ப்
பரிணாம வளர்ச்சி…
ஆறுகளின் நிலைமை இப்போது
அதைவிட அவலம்-
அரசியல் சாக்கடை அதிகமாய்க் கலந்ததால்,
அவை வற்றி
மணலாகவும் மினரல் நீராகவும்
கடத்தப்படுகின்றன கட்டுப்பாட்டுடன்…
அல்லியும் தாமரையும்
அழகாய்ப் பூத்திருந்த குளமெல்லாம்,
காய்ந்து
கிரிக்கெட் மைதானங்களாகி
எல்லைக்கற்களுக்கும் கால்முளைத்து
ஏப்பம் விடப்பட்டுவிடும்
ஏமாற்ற நிலையிலே…
குறிஞ்சி எழில் காட்டிய
குன்றெல்லாம் இப்போது
கல்வி வணிகம் நடத்தும்
கல்லூரிகளின்
அடிவார ஆக்கிரமிப்பில்-
அரசுகளும் கண்டுகொள்ளா
அலட்சியத்தில்…
நேற்றுவரை நெய்தல் நிலம்
இன்று-
கடற்கரையில் குடிசைபோட்டு
கட்சிக் கொடி நாட்டி,
காணவில்லை குடிசையென்று
காசுகேட்கும் அரசியலாய்…
மண்ணுக்கும் பொன்னுக்கும்
மதிப்பைக் கூட்டிவிட்டு
மனிதன்,
மண்ணுக்கும் பொன்னுக்கும்
அலையாய் அலைந்து
மண்ணாய்ப் போவதுடன்
மாசுபடுத்திவிடுகிறானே
மண்ணையும் விண்ணையும்…!
படத்துக்கு நன்றி
http://www.fotoartglamour.com/picture-stripey-sky-and-sea.html
விஞ்ஞான தேரோட்டம் வியப்பை மகசூலிக்கின்றது…ஆனால்
அதன் தேர்க்கால் எலுமிச்சையாய் சிதைபட்டுப் போவது
இயற்கை என்பது என்றைக்குத்தான் இந்த நாகரீக மனிதனுக்குப்
புரியப் போகின்றதோ?்்