மாற்றான் பாடல்கள் – விமர்சனம்
மோகன் குமார்
இந்த வருடத்தில் செம எதிர்பார்ப்போடு இருக்கும் ஒரு படம்: மாற்றான். தான் இயக்கிய அனைத்து படங்களையும் ஹிட் ஆக்கிய கே. வி. ஆனந்த் தான் முதல் அட்ராக்ஷன். பின் சூர்யா ஒட்டி பிறந்த இரட்டையர்கள் என்பது. பாடல்கள் வெளியாகி கொஞ்ச நாளாகி விட்டது. பல முறை கேட்டு விட்டு, நிதானமாய் இந்த பாடல் விமர்சனம் எழுதுகிறேன்.
ஒவ்வொரு பாடலாய் பார்க்கலாம்
கால் முளைத்த பூவே
பாடியது:ஜாவேத் அலி, மகாலட்சுமி ஐயர்
எடுத்தவுடன் கவரும் பாட்டு. அட்டகாசமான பல்லவி. இரண்டு சரணத்திலும் முதல் பகுதி வேகமாய் பாடுகிறேன் பேர்வழி என ஒப்பிக்கிற மாதிரி உள்ளது மட்டும் உறுத்துகிறது. மற்றபடி செம ஸ்பீட் பாட்டு. முதலில் ஹிட் ஆனது இந்த பாட்டு என்று தான் நினைக்கிறேன். ஜாலியான சூரியா பாத்திரத்தை எஸ்டாப்ளிஷ் செய்ய உதவும் பாலே டான்ஸ் ஆக இருக்கலாம். நிச்சயம் படத்தில் பார்க்க ஒரு விஷுவல் ட்ரீட் காத்திருக்கு !
யாரோ யாரோ நான் யாரோ
பாடியது: கார்த்திக், ப்ரியா ஹிமேஷ்
ஏழாம் அறிவின் சோக பாட்டை (யம்மா யம்மா காதல் பொன்னம்மா) நினைவு படுத்துது ! மெட்டு, குரல் ஹாரிஸ் இசை இவை இரண்டு படத்திலும் ஒரே மாதிரி இருக்கு. எப்படி இயக்குனருக்கு தோணாமல் போனது என தெரியலை. பாட்டு கேட்கும் போது ஏழாம் அறிவு சூரியா யம்மா யம்மா பாட்டுக்கு டான்ஸ் ஆடுவது அப்படியே கண்ணில் வந்து போகுது.
மிக மெதுவாய் போகும் பாட்டு. ஹிட் ஆவது கடினம் என்றே நினைக்கிறேன். இந்த ஆல்பத்தின் ஒரே சொதப்பல் இப்பாடல் தான்
தீயே தீயே
பாடியவர்கள்: ஆலாப் ராஜூ, சத்யன், பிரான்க்கோ, சுசித்ரா.
கொஞ்சம் வித்யாசமான ஒரு பார்ட்டி சாங் போல் தான் இருக்கிறது. பாட்டில் இசை ஈர்க்கிறது. முதல் சரணம் முழுக்க பெண்ணின் உதடு பற்றியும், முத்தம் பற்றியுமே பேசுகிறது
மெலடியா, பார்ட்டி சாங்கா என்று பிரிக்க முடியாதது சிறு குறை. ஓகே ரக சாங். ஓஹோ அல்ல
ரெட்டை கதிரே
பாடியவர்கள்: கிரிஷ் மிலி ,பாலாஜி நிதானமாய் ஆரம்பித்து பின் ஸ்பீட் எடுக்கும் ஒரு பாட்டு.
பாடல் வரிகள் மிக அருமை.
புயலடித்தும் வாழுதே இரு பறவை ஒரு கூட்டில்
மெது மெதுவாய் பூக்கட்டும் இந்த பூக்கள் எதிர் காற்றில்
என்ற வரிகளை கேட்கையில் இரட்டை சூர்யா பாடும் பாட்டு என்பது புரிகிறது.நடுவில் ஆங்கில வரிகளும் பெண் குரலில் ஒலிக்கிறது (பாரின் லொகேஷன்??)
இரண்டாவது சரணத்துக்கு முன் வயலின் அருமையாய் இழைகிறது. இரண்டு பாத்திரத்தில் உள்ள வெவ்வேறு குணங்களை காட்டும்படி உள்ளது இப்பாட்டு. நிச்சயம் குட்டி பசங்க வரை இந்த பாட்டு ரீச் ஆகி, ” ரே..ரே” என்று பாடத்தான் போகிறார்கள் !
நாணி கோணி
Pick of the Album. பின்னே பாடியது ஸ்ரேயா கோஷல் ஆச்சே? எப்படி தான் ஹிட் ஆகும் பாட்டு மட்டும் சரியா தேர்ந்தெடுத்து பாடுறாரோ! கூட விஜய் பிரகாஷ் வேறு ! சர்ரியான டூயட். கே. வி ஆனந்தின் அட்டகாசமான படமாக்கலை பார்க்க வெயிட்டிங். தலைவி அனாயாசமாக ஹை பிச்சில் பாடிட்டு கீழ் ஸ்தாயியிலும் பாடுறார். வாட் எ வாய்ஸ் !! மீண்டும் மீண்டும் கேட்க இன்னொரு பாட்டு ரெடி !
மொத்தத்தில் மூணு பாட்டு சூப்பர். ஒன்று ஜஸ்ட் ஓகே. ஒன்று சொதப்பல். சூர்யா – ஹாரிஸ் ஜெயராஜ் கெமிஸ்ட்ரி மீண்டும் ஒரு முறை வொர்க் அவுட் ஆகியிருக்கு !