11000 மாணவர்கள் பங்குபெற்ற சேவாலயா நடத்திய மாநில அலவிலான காந்திய தேர்வு

 

SEVALAYA

(Registered Charitable Trust)

No 2/25, Ground Floor, Rajaji Nagar Main Road,Pillaiyar Koil Street, Thiruvanmiyur, Chennai 600041.Kasuva Village, Pakkam Po, Near Thiruninravur – 602024. Tamil Nadu, India.

Phone: 0442441009, 9444620289, 9444620286, 044-64611488, 044-26344243.

E-mail:   Sevalayamurali@gmail.comSevalayapro@gmail.com,   Visit us at: www.Sevalaya.org.

 

 

 

                                                                 செய்திக் குறிப்பு                                                       02.10.2012

 

11000 மாணவர்கள் பங்குபெற்ற  சேவாலயா நடத்திய மாநில அலவிலான காந்திய தேர்வு

திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூர்  அருகே உள்ள கசுவா கிராமத்தில்  செயல்பட்டு வரும் சேவாலயா  சேவை மையத்தில் இன்று (02.10.2012) மாநில அளவில் நடைபெற்ற காந்தியத் தேர்வுகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக திரு. ராஜசேகரன் (நிறுவனர்,   உரத்த சிந்தனை) மற்றும் குழுவினர் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகளை வழங்கி சிறப்புரையாற்றினார்.

                  விழாவில் அவர் பேசுகையில், காந்திஜி பிறந்தநாள் விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துக் கொண்டதில் பெருமகிழ்ச்சிக் கொள்கிறேன்.  பாரதி, காந்தி, விவேகானந்தர் ஆகிய மூவரின் கருத்துக்களை மையமாகக் கொண்டு ஒவ்வொரு ஆண்டும் மாநிலத்திலுள்ள சுமார் 100 பள்ளிகளில் இருந்து 11,000 மாணவர்கள் கலந்துகொள்ளும் இத்தேர்வுகளை இலவசமாக நடத்துவதன் மூலம் மாணவர்களிடையே இளம் வயதிலேயே நல்லொழுக்கமும், நற்பண்பும் வளரும் என்பதில் நான் நம்பிக்கைக் கொள்கிறேன்.  காந்திஜி பற்றி இந்திய மக்கள் அனைவருக்கும் நன்றாக தெரியும்.  சரித்திரத்தில் இடம் பெற்ற சாதனையாளர்களின் வாழ்க்கையை நோக்குகையில் ஏதாவது ஒரு நிகழ்ச்சி மட்டுமே சாதனையாக இருக்கும்.  ஆனால் மகாத்மாவின் வாழ்க்கை முழுவதுமே சரித்திரமாக உள்ளதில் நாம் பெருமைக் கொள்ளலாம்.

 Puthia Thalaimurai Tamizhan ‘Promising star award’ to Sevalaya Muralidharan.VOB

 

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *