எந்தன் விழிகளில்
இசைக்கவி ரமணன்
எந்தன் விழிகளில் உந்தன் பதங்கள்
எழுந்து மின்னுதே
எந்த நேரமும் சிந்தையிலேயொரு
மொந்தை தளும்புதே
அந்தரி சூலி வராகி மாரி
ஆனந்த பைரவி, உன்னை
அண்டிக் கிடக்குற நெஞ்சு முழுக்கவும்
மண்டிக் கிடப்பவ நீ!
சலசலக்குற ஓடையிலே சலங்கை எடுத்தியா? நடுவில்
பவளம்மின்னும் பவழமல்லியில் பாதம் தொடுத்தியா?
சந்தனக் காட்டு வாசம் அதுல சேத்துக் கொழச்சியா? உன்
சந்தோஷமே சங்கீதமா மெட்டி போட்டியா? அம்மா!
சந்ததம் இந்த சந்நிதி எனக்கு சாசனம் கொடுத்தியா? (எந்தன்)
இரவுமில்லே பகலுமில்லே உதயமாச்சுது, அது
இங்கும் அங்கும் நகராம பதிஞ்சி போச்சுது
உறவுமில்லே பிரிவுமில்லே உயரமாச்சுது
ஒண்ணு ரெண்டு போலத் தெரிஞ்ச காலமும் போச்சுது
ஒத்திக்கிட்டு சொட்டுத் தண்ணி வடிப்பது உரிமையாச்சுது (எந்தன்)
பக்கத்துல பாரு நாலு வேதமும் பம்மிப் பதுங்குது, இன்னொரு
பக்கத்துல அம்மோய் முனிவர் வரிசை பாத்து நிக்குது
வெக்கமில்லாதொரு ஏழைமனசு நடுவில் கெடக்குது, இந்த
வெவரம் தெரிஞ்சபோது பாவம் வேர்த்து நடுங்குது, அப்ப
வீசுற காத்துல பாதம் நடுவில் வீழ்ந்து மறெஞ்சிது! (எந்தன்)
எந்தன் விழிகளில்- உங்கள் செவிகளில்
படத்திற்கு நன்றி :
http://www.vishvarupa.com/shakti.html
செவி வழியில் நீங்கள் பாடும் பாடல் கவ்வி இழுக்கின்றதே ! பாடலில் ஜீவன் இருக்கின்றது ஐயா. வாழ்த்துகள். உங்கள் குரலில் இளையராஜாவின் இசையிலிருக்கும் ஒரு ஜீவன் குடியிருக்கின்றது ,
அருமை அண்ணா! உங்க குரல் கேட்டு ரொம்ப நாளாச்சுது…உங்க பாட்டு கேட்டுக் கேட்டு மனசு உருகுது…ஒத்துக்கிட்டு சொட்டுத் தண்ணி வடிப்பது உரிமையாச்சுது.