யாரைக் கேட்டு இங்கு வந்தாய்?
விண்வெளியின் முற்றத்தினுள்ளே
நட்சத்திரக் கோலங்களின் வழியே
தவழ்ந்துவரும் முழுநிலவே!
யாரைக் கேட்டு இங்கு வந்தாய்?
நீ இருக்க நான் பார்த்தது
அவள் முகம்தானே!
அவள் அனுமதித்தே வந்தாயா
இல்லை அழவைத்து வந்தாயா?
அவளிடத்தில் இல்லையேல் நீ அழகில்லை
உன் அழகே அவள் தானே
நீயில்லாமல் அவளைப் பார்க்கலாம்
அவளில்லாமல் உன்னை….
அழகிற்கு மறுபெயர் அவள்
அவளுக்கு பின் தானே நீ!
நீ தரும் வெளிச்சமே அவள்தானே
அவளில்லாமல் நீ இல்லை,
ஏன்!
நானும் இல்லை.
படத்திற்கு நன்றி
மிக நன்று.
Adada….. aval aval nu solreengale??? aval yaarnu sollaveillay!!! [nijama?verum karpanaya?]
Thirumathi .kowsalyavirkku very late recognition….
பிரியா.. அவள் ஒரு மேனகை, என் அபிமான தாரகை. மீதியை அந்த பாட்டில் கேள்.
கொளதம்: அது கொசள்யாவாகவும் இருக்கலாம். கைகேயியாகவும் இருக்கலாம். உன் கற்பனையை பொருத்தது.
பூந்தோட்ட கவிக்குயிலே ,இன்னும் அவளை உன் நெஞ்சிலே இருந்து மறக்கவும் இல்லைமறைக்கவும்,இல்லை என்பது எனக்கு மட்டுமே புரிந்த விஷயம் யாரைக்கேட்டு நீ இந்தகவிதை எழுதினாய்,அவள் இல்லாமல் நீ இல்லை என்பதை யாரை சொல்கிறாய், எனக்கு மட்டுமே தெரிந்த விஷயம்,”அவளும் அழகாக இருப்பாள்
உன் கவிதையும் அழகாக இருக்கிறது ,,பயப்பட வேண்டாம் இதைநான் யாரிடமும் சொல்லமாட்டேன் ,,
நன்றி தேவா. தயவுசெய்து யாரிடமும் சொல்லாதே.
“எனது கவிதை வல்லமையில்” யாருக்கு சந்தேகம்
என்று நீங்கள் கேட்கலாம் இனி,
நல்ல வளர்ச்சி
வாழ்த்துக்கள்
என்னுடைய முன்னைய மறுமொழிப்படி எனக்கு கவிதையை விமர்சிக்கும் அருகதை இல்லை. எனினும் ‘அவளில்லாமல் நீ இல்லை’ என்ற வரி உள்ளத்தை கவர்கிறது. உன் காதலி உண்மையிலேயே கொடுத்து வைத்தவள்.
ஸம்பத்