பவள சங்கரி

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
பண்பும் பயனும் அது (குறள் 45)

இனிய இல்லறத்தில் இன்பமுடன்
அன்பும் சிவமுமாய் இணைந்திருப்போரே
பண்பும் பாசமும், நேசமும் கொண்டு
திருமண பந்தத்தில் பல்லாண்டு பல்லாண்டு
நீங்காத செல்வம் நிறைந்தோங்கி
வாழ்வாங்கு வாழ்வீரே!!!

 

 

 

 

பதிவாசிரியரைப் பற்றி

5 thoughts on “இனிய மணநாள் வாழ்த்துக்கள்!

 1. இன்று மணநாள் காணும் அண்ணாகண்ணன் தம்பதிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துகள்

  நேற்று வல்லமை குழுவினரை அண்ணா கண்ணன் திருமண ரிசப்ஷனில் சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி

 2. பவளசங்கரியார் தொடக்கம் வல்லமையாளர் பலர் கூடி வாழ்த்திய வரவேற்பு நிகழ்ச்சி,

  தமிழ்த்தேனீயின் அன்புக் கவனிப்பு, திருமண நாளான இன்று மதியம் வரை, 

  சொற்களாலும் செயலாலும் இனிமையைப் பெருக்கிய இருபக்க இல்லத்தார்,

  அமுதமான உணவு, தேனிசையாகிய சூழல்,

  வாழ்க இணையர் 

 3. அன்பினிய புதுமணத்தம்பதிகள் அண்ணாகண்ணன் + ஹேமமாலினி இருவருக்கும் உளம் நிறைந்த உவகைப் பூக்களால் வாழ்த்துமழை பொழிகிறேன்.
  வாழிய ! வாழிய ! பல்லாண்டு வாழியவே
  அன்புடன்
  சக்தி சக்திதாசன்

 4. சென்னையில் 10.12.2012 அன்று நடந்த எங்கள் திருமணத்திற்கு நேரிலும் தொலைபேசியிலும் கடிதத்திலும் மின்னஞ்சலிலும் குறுஞ்செய்தியிலும் ஃபேஸ்புக்கிலும் மின் குழுமங்களிலும் இணையத்தளங்களிலும் மானசீகமாகவும் வாழ்த்துகளைப் பொழிந்த அனைத்து அன்பு உள்ளங்களுக்கும் எங்கள் உளமார்ந்த நன்றிகள்.

  அன்புடன் என்றும்,
  அண்ணாகண்ணன் & ஹேமமாலினி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *