பா.க. சுப்பிரமணியம்

 

மின்னலை வரைய முடியாமல்
தோற்றுப் போன தூரிகை
உதிர்ந்து… உதிர்ந்து…
உன்
இமைகளானது

வான வில்லில் உறங்கும்
என் கனவுகளை
உன் புன்னகையிலிருந்து
கண்டெடுத்தேன்

நீ
வல்லினமா? மெல்லினமா?
ஒட்டியாணமாய் என்னை
உன் இடையில் சூட்டினாய்

உருவமில்லாதது காதல்
அதை நீ
உன் கன்னத்தில்
வெட்கத்தில்
வரைந்துகாட்டுகிறாய்

 

படத்துக்கு நன்றி: http://bestbeautitips.blogspot.com/2012/03/how-to-get-beautiful-eyes.html

 

1 thought on “உயிர் வெளி

 1. “மின்னலை வரைய முடியாமல்
  தோற்றுப் போன தூரிகை
  உதிர்ந்து… உதிர்ந்து…
  உன்
  இமைகளானது”

  அருமை! அருமை!! சுப்பிரமணியம்

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க