நேரடி அந்நிய முதலீடுகளுக்கு ஒப்புதல்

0

மத்திய அரசு ரூ.1,027.20 கோடி மதிப்புள்ள 21 நேரடி அந்நிய முதலீட்டு திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது. அந்நிய முதலீட்டு மேம்பாட்டு வாரியத்தின் பரிந்துரைகளின் அடிப்படையில் இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்தில் மும்பையின் லோக்மேட் மீடியா நிறுவனத்தில் ரூ.13.82 கோடி நேரடி அந்நிய முதலீட்டுக்கு வழங்கப்பட்ட அனுமதியும் இந்த 21 திட்டங்களில் அடங்கும். கோயம்புத்தூரில் டைட்டன் ஹெச் எம் ஜி பெயிண்ட்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்திலும், ரூ.0.62 கோடி நேரடி அந்நிய முதலீட்டுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த 21 திட்டங்கள் தவிர நேரடி அந்நிய முதலீட்டுக்கான 17 திட்டங்கள் ஒத்தி வைக்கப்பட்டுள்ளன. ஒன்பது திட்டங்கள் நிராகரிக்கப்பட்டன. ஒரு திட்டம் திரும்பப் பெறப்பட்டுள்ளது.

=================================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *