தமிழ்நாட்டில் 3,374 குடிசைப் பகுதிகள்

0

நாட்டில் உள்ள நகர்ப்புறக் குடிசைப் பகுதிகள் குறித்து, தேசிய மாதிரி கணக்கெடுப்பு நிறுவனமான – என் எஸ் எஸ் ஓ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் 1,711 அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளும், 1,663 அறிவிக்கப்படாத குடிசைப் பகுதிகளும் சேர்ந்து மொத்தம் 3,374 குடிசைப் பகுதிகள் உள்ளன.

ஆந்திரப்பிரதேசம், தில்லி, குஜராத், கர்நாடகம், மத்தியப்பிரதேசம், மஹாராஷ்டிரம், ஒரிசா, தமிழ்நாடு, உத்தரப்பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய பத்து மாநிலங்களிலும் மொத்தம் 24,781 அறிவிக்கப்பட்ட குடிசைப் பகுதிகளும், 24,213 அறிவிக்கப்படாத குடிசைப் பகுதிகளும் உள்ளன.  இந்த இரண்டையும் சேர்த்து நாட்டில் மொத்தம் 48,994 குடிசைப் பகுதிகள் உள்ளன.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை 2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி குடிசைப் பகுதிகளில் இருந்த மக்கள் தொகை 73.40 லட்சம் பேராகும்.  இந்த எண்ணிக்கை 2011ஆம் ஆண்டில் 86.44 லட்சம் பேர். அந்த வகையில் நாடு முழுவதும் குடிசைப் பகுதிகளின் மக்கள் தொகை எண்ணிக்கை 2001இல் 7.52 கோடி பேராகும். 2011இல் இந்த எண்ணிக்கை 9.30 கோடி பேராகும்.

=================================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

பதிவாசிரியரைப் பற்றி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *