பொது

தமிழ்நாட்டில் 831 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள்

தமிழ்நாட்டில் 831 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் இருக்கின்றன. அந்த வகையில் நாடு முழுவதும் மொத்தம் 33,826 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் உள்ளன.

நாட்டில் உள்ள பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் குறித்து, தகவல் தளம் ஒன்றைத் தயாரிக்கவும், அவற்றை ஆவணப்படுத்தவும் தேசிய நினைவுச் சின்னங்கள் மற்றும் தொல்பொருள் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

அது நாட்டில் உள்ள பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் பற்றிய விவரங்களைத் தொகுத்துள்ளது.

அதன்படி, தமிழ்நாட்டில் 831 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும், ஆந்திராவில் 413 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும் கேரளாவில் 186 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும், புதுச்சேரியில் 1,800 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும், கர்நாடகாவில் 445 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும் உள்ளன.

மிக அதிகபட்சமாக ராஜஸ்தானில் 5,220 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் உள்ளன. அதற்கு அடுத்தபடியாக உத்தரப்பிரதேசத்தில் 3,653 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும், மேற்கு வங்கத்தில் 3,627 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும், ஒரிசாவில் 3,248 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்களும் உள்ளன. மிகக் குறைந்த பட்சமாக மணிப்பூரில் 22 பாதுகாக்கப்படாத நினைவுச் சின்னங்கள் உள்ளன.

=================================================
தகவல்: பத்திரிகைத் தகவல் அலுவலகம், சென்னை

Print Friendly, PDF & Email
Share

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க