பளிச்சிடும் பனித்துளி

திருவாரூர் ரேவதி

dew

இரவின் குளியலை
விடியல் சொல்லும்.

பார்க்கும் கண்கள்
பரவசம் எய்தும்.

நெஞ்சம் குளிரும்
நேசம் நிறையும்.

கனவின் குளியலைக்
கண்கள் சொல்லும்.

புரியும் தருணம்
புத்தி இடறும்

நாணம் வாய்மூட
கதிரவன் கண்மூட

விழித்தெழும் பனித்துளி
சுடரெனப் பளிச்சிடும்.

=================================

படத்திற்கு நன்றி: http://my.opera.com

1 thought on “பளிச்சிடும் பனித்துளி

  1. ‘…விழித்தெழும் பனித்துளி
    சுடரெனப் பளிச்சிடும்…’
    எனக்குப் பிடித்த வரி; அதுவே தலைப்பு. ஏன் எனக்குப் பிடித்தது: முரணின் மென்மையான தன்மை. பனித்துளி பளிச்சிடும், பிரதிபலிப்பதால். அதில் சுடரின் வெப்பம் இல்லை. இருந்தும், முரண் உவமை ஆயிற்று. அது எனக்குப் பிடித்தும் போனது.

உங்கள் கருத்துகளைத் தெரிவிக்க